Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்த மக்களை திருப்பி அனுப்ப திட்டம்.. எல்லை அதிகாரிகளுக்கு பயிற்சி.. வெளியான தகவல்..!!

பிரான்ஸிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் வரும் புலம்பெயர்ந்த மக்களை, திருப்பி அனுப்ப பிரிட்டன் அனுமதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், புலம்பெயர்ந்த மக்களை அழைத்து வரும் படகுகளை அப்படியே கடலில் இருந்து திருப்பி அனுப்புவது எப்படி? என்பது தொடர்பில் எல்லை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. எனினும், அது பாதுகாப்பானதாக இருந்தால் மட்டும் தான் இந்த புதிய திட்டத்தை கையாள வேண்டும் என்று பிரிட்டனின் ஒரு அரசு அதிகாரி தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த அதிகாரி தெரிவித்துள்ளதாவது, பிரிட்டனின் செயல் தலைமை அட்டர்னி ஜெனரலான […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் பந்து விளையாடிய சிறுமி.. மர்ம நபரின் மோசமான செயல்.. புகைப்படம் வெளியீடு..!!

பிரிட்டனில் மக்கள் அதிகம் குடியிருந்த கடற்கரையில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டனிலுள்ள Bournemouth என்ற கடற்கரையில் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று மாலை நேரத்தில் 15 வயது சிறுமி, நண்பர்களோடு பந்து விளையாடியிருக்கிறார். அப்போது பந்து, சிறிது தூரம் சென்று விழுந்திருக்கிறது. எனவே, அந்த சிறுமி பந்தை எடுப்பதற்காக சென்ற சமயத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று, அந்த சிறுமியை கடலுக்கு இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அன்று, அதிக […]

Categories
உலக செய்திகள்

நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்.. பாறைகள் விழுந்து பலி.. பரிதாப சம்பவம்..!!

சுவிட்சர்லாந்தில், நண்பருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பாறைகள் உருண்டு விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Valais மாகாணத்தில் இருக்கும் Verbier கிராமத்தில், பிரிட்டனைச் சேர்ந்த 43 வயதான பெண், அவரின் நண்பரோடு நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது,  அங்கு திடீரென்று பாறைகள் உருண்டு வந்திருக்கிறது. அவை அந்த பெண்ணின் மேல் விழுந்துள்ளது. இதில், அவரின் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாத பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம்.. பிரிட்டனின் முடிவை பாராட்டும் இலங்கை..!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ள பிரிட்டனின் மேல்முறையீட்டு ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு பாராட்டியிருக்கிறது. பிரிட்டனின் வெளியுறவு துறை அமைச்சரான பிரீத்தி படேலுக்கு, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில், இலங்கை மற்றும் பிரிட்டனுக்கு இடையேயான கூட்டுறவு பாராட்டுக்குரியது. சர்வதேச அளவில் தீவிரவாதத்தை அடக்குவதும், பொதுமக்களுக்கு பயங்கரவாதத்தால் ஏற்படும் பதற்றத்தை போக்குவதிலும் பிரிட்டன் தொடர்ந்து தங்களுடன் சேர்ந்து செயல்படுவதில் உறுதியாக இருக்கிறோம். விடுதலைப் புலிகள் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரியின் அடுத்த இலக்கு யார்?.. இளவரசி டயானாவின் முன்னாள் ஊழியர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி வெளியிடவுள்ள புத்தகத்தில் அவரின் முக்கியமான அடுத்த இலக்கு யார்? என்று மறைந்த இளவரசி டயானாவின் முன்னாள் முதன்மை பணியாளர் வெளிப்படுத்தியுள்ளார். இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை குறிப்பாக நான்கு புத்தகங்களை வெளியிடவிருக்கிறார். அவர் வெளியிடவுள்ள புத்தகத்தில், இளவரசர் சார்லசின் மனைவியான கமிலா பார்க்கர் குறித்து சில தகவல்கள் வெளிவரலாம் என்று மறைந்த இளவரசி டயானாவின் முதன்மை பணியாளரான Paul Burrell குறிப்பிட்டிருக்கிறார். இளவரசர் ஹாரி, தன் தாய் மரணத்திற்கு பின்பு, நடந்த அனைத்து […]

Categories
உலக செய்திகள்

காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை.. வெளியான புகைப்படம்..!!

பிரிட்டனில் காதலியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த காதலன் புகைப்படம் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வடக்கு நார்தம்ப்டன்ஷைர், Kettering-ல் இருக்கும், Slate Drive என்னும் பகுதியில், 3 லட்சம் மதிப்புக்கொண்ட ஒரு குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் ஒரு மணிக்கு, உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்கள் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள். Benjamin Green என்ற 41 வயது நபர் மற்றும் Maddie என்ற 22 வயது […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசு அறிவித்த புதிய பயணக்கட்டுப்பாடுகள்.. இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது..!!

பிரிட்டனில் இன்றிலிருந்து புதிய பயண கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு, பச்சை பட்டியலில் புதிதாக 7 நாடுகளை இணைத்துள்ளது. அதே நேரத்தில், சிவப்பு பட்டியலிலும் இரு நாடுகள் இணைக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் பிரிட்டனின் கொரோனா பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதன்படி, பச்சை பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கும், டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா லிதுவேனியா, அசோர்ஸ் மற்றும் லிச்சென்ஸ்டீன் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்லும் மக்கள் இனிமேல் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. சிவப்புப் பட்டியலில் புதியதாக இணைக்கப்பட்டிருக்கும் தாய்லாந்து, […]

Categories
உலக செய்திகள்

“மீட்பு பணிகளை முடித்துக்கொண்ட நாடுகள்!”.. தலீபான்கள் கட்டுப்பாட்டில் விமான நிலையம்.. காத்திருக்கும் மக்கள்..!!

காபூல் நகரில், பல நாடுகள் மீட்பு நடவடிக்கையை முடித்ததால், தலிபான்கள் விமான நிலையத்தின் அதிகமான பகுதியை அடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள், ஆப்கானிஸ்தானிலிருந்து, தங்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முடித்துவிட்டது. எனினும் தங்கள் நாட்டு மக்கள் உள்பட ஆப்கானிஸ்தானின் மக்களையும் கைவிட்டுத்தான் செல்கிறோம் என்பதையும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நாட்டை தலீபான்கள் கைப்பற்றினர். அதன்பின்பு, ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் நபர்களை அங்கிருந்து மீட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமானநிலையத்தில் 40 டாலருக்கு விற்கப்படும் தண்ணீர்.. பசியால் வாடிய குழந்தைகள்.. ஆறுதல் கொடுக்கும் இராணுவம்..!!

காபூல் விமானநிலையத்தில், அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், சில குழந்தைகள் தண்ணீரீன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே, தங்கள் ஆட்சியை நிலைநாட்ட தீவிரமாக பல நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். எனவே அவர்களின் கொடூர ஆட்சிக்கு அஞ்சிய மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில், ஒரு தண்ணீர் பாட்டில் 40 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் கொடூர திட்டத்தில் தப்பிய நபர்.. 10 வருடமாக புகலிடக்கோரிக்கை ஏற்க மறுப்பு.. பிரிட்டனில் தவிப்பு..!!

தலிபான்களின் பயங்கர திட்டத்திலிருந்து, ஒரு வழியாக தப்பி தன் 14 வயதில் பிரிட்டன் வந்த இளைஞர், 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மரண பீதியில் இருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பி, 10 வருடத்திற்கு முன் பிரிட்டன் வந்த சஜித் என்பவரின், புகலிட கோரிக்கை தற்போது வரை பிரிட்டன் அரசால் ஏற்கப்படவில்லை. இந்நிலையில், தன்னை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் இருக்கிறார் சஜித். இவர், தன் 13 வயதில் ஆப்கானிஸ்தானில் ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ரயிலில் பயணித்த இளம்பெண்கள்.. அருகில் அமர்ந்த நபரின் மோசமான செயல்.. புகைப்படம் வெளியீடு..!!

பிரிட்டனில் இரயிலில் பயணித்த மூன்று பெண்களிடம் ஒரு நபர், பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறி அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின், கிரேட் மான்செஸ்டரில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று இரவு சுமார் 8:40 மணிக்கு மூன்று இளம்பெண்கள் ஒன்றாக அமர்ந்து ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது, ஒரு நபர் அவர்களின் அருகில் சென்று அமர்ந்துள்ளார். அதன்பின்பு அவர்களிடம் பாலியல் ரீதியாக  முகம் சுழிக்க வைக்கும் படி பேசியிருக்கிறார். மேலும், அவர்களை பாலியல் ரீதியாக […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்கள் ஆட்சிக்கு உதவ தயார்!”.. பிரிட்டன் பிரதமர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உதவுவோம் என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதால், அங்கு எந்த மாதிரியான அரசு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை விரைவில் அறிவிப்போம் என்று தலிபான்கள் தெரிவித்திருந்தனர். எனினும் அந்த ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்கப்போவதில்லை. ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். இதனிடையே தலிபான்கள் ஆட்சியை, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஆதரித்திருக்கிறது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், […]

Categories
உலக செய்திகள்

சிறையில் பெண் காவலரை முத்தமிட்ட கைதி.. வெளியான ரகசிய வீடியோ.. ஸ்காட்லாந்தில் பரபரப்பு..!!

பிரிட்டனில், பெண் சிறை காவல் அதிகாரி ஒருவர் சிறையில் இருந்த கைதியை முத்தமிட்ட ரகசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருக்கும் West Lothian-ன் HMP Addiewell சிறையில் கெவின் ஹாக் என்ற கைதி போக்குவரத்து விதிமுறையை மீறியதால் 3 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், கெவின் ஹாக், பெண் சிறை காவலரை, முத்தமிடுகிறார். இதனை கெவின் சிறையில் தடை செய்யப்பட்டிருக்கும் மொபைலை பயன்படுத்தி ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார். https://videos.dailymail.co.uk/video/mol/2021/08/20/4870934017039813773/640x360_MP4_4870934017039813773.mp4 அந்த வீடியோ […]

Categories
உலக செய்திகள்

“பெண் மருத்துவரின் முகத்தில் ஆசிட் வீசிய பெண்!”.. கண்காணிப்பு கேமராவில் தெரிந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்..!!

பிரிட்டனில் பெண் மருத்துவரின் வீட்டின் கதவை தட்டி, ஒரு நபர் ஆசிட் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் Dr Rym Alaoui என்ற இளம் பெண் மருத்துவர் வீட்டின் கதவை யாரோ தட்டி உள்ளனர். கதவைத் திறந்தவுடன், மருத்துவரின் முகத்தில் ஒரு பெண் ஆசிட் வீசி விட்டு தப்பிச்சென்றார். அவர் அலறியதால் உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து அவசர சேவையை அழைத்துள்ளார்கள். அதன்பின்பு, மருத்துவ உதவி குழுவினர் விரைந்து வந்து […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 2 நாளில் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்போம்.. பிரிட்டன் பாதுகாப்பு துறை தகவல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இன்னும் இரு தினங்களில் மேலும் 1500 மக்களை வெளியேற்ற அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு துறை தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பிரிட்டன் மக்களை நாட்டுக்குள் அழைத்து வந்த முதல் விமானம் நேற்று பிரிட்டன் சென்றடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டு மக்களுக்கு உதவி செய்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் உட்பட நாளொன்றிற்கு 1000 நபர்களை அரசாங்கம் வெளியேற்றும். இந்நிலையில், வரும் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டன் நாடுகளை சேர்ந்த மக்களை வெளியேற்ற முடிவு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் தம்பதியருக்கு…. லாட்டரியில் கிடைத்த பரிசுத்தொகை…. பரிசுத்தொகையை என்ன செய்தார்கள் தெரியுமா….?

பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியினருக்கு லாட்டரியில் 12.4 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. பிரிட்டன்  Trafford பகுதியை சேர்ந்த Sharon மற்றும் Nigel Mather தம்பதியினருக்கு லாட்டரியில் 12.4மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. ஆனால் தம்பதியினர் பரிசு விழுந்ததை உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இதனிடையே தம்பதியினர் தங்களுக்கு பரிசு விழுந்த செய்தியை உறவினர்களுக்கு கூறாததில் எவ்வித சுயநலம் இல்லை. இதனிடையே தம்பதியினர் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் 30 பேரை தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரித்தானியர் நடத்திய துப்பாக்கிச்சூடு…. காயமடைந்த பெண் செய்த செயல்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!

பிரிட்டனில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையிலும் பெண் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் Plymouthஐச்  பகுதியை சேர்ந்த  Jake Davison என்பவர் பெண்களின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இதில் Lee Martyn (43) என்ற தந்தையும், அவரது மகளான Sophie (3) என்ற குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு நடக்கும்போது  Lee Martyn தான் காயமுற்ற நிலையிலும் தன் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய மக்களுக்கு கட்டணம் குறைவு!”.. பிரிட்டன் அறிவிப்பு.. வெளியான நல்ல தகவல்..!!

பிரிட்டன் அரசு, இந்திய மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கட்டணத்தை குறைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா தீவிரம் அதிகமாக இருந்தது. எனவே, பல நாடுகள் இந்தியாவுடனான போக்குவரத்திற்கு தடை விதித்தது. அதன்படி, பிரிட்டன் தங்கள் பயண கட்டுப்பாட்டில் சிவப்பு பட்டியலில் இந்தியாவை இணைத்திருந்தது. எனவே இந்திய மக்கள் பிரிட்டன் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது. எனவே, பிரிட்டன் கடந்த வாரத்தில் இந்தியாவை சிவப்புப் பட்டியலிலிருந்து நீக்கியதோடு […]

Categories
உலக செய்திகள்

“மாணவர்களின் துயரம் மேலும் அதிகரிப்பு!”.. பிரிட்டன் அரசின் திடீர் அறிவிப்பு..!!

பிரிட்டன் அரசு, ஆப்கானிஸ்தான் மாணவர்கள் தங்கள் நாட்டில் பயில அரசால் அளிக்கப்பட்டு வந்த ஸ்காலர்ஷிப்பை தற்காலிகமாக ரத்து செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் மாணவர்கள், ஏற்கனவே தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால்  துயரத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சகம், இவ்வாறு அறிவித்தது, அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Chevening ஸ்காலர்ஷிப் பெற்ற ஆப்கானிஸ்தான் மாணவர்கள், அடுத்த மாதத்திலிருந்து பிரிட்டனில் தங்கள் கல்வியை தொடங்க தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பதற்றமான நிலை இருப்பதால், பிரிட்டிஷ் […]

Categories
உலக செய்திகள்

நடு கடலில் மூழ்கிய படகு…. காதலியின் கண்முன்னே காதலனுக்கு நடந்த சோகம்….!!

பிரான்சிலிருந்து பிரிட்டனுக்கு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சிலிருந்து பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்த படகில் 36 பேர் பயணம் செய்துள்ளனர். இதனிடையே படகு கால்வாய் ஒன்றை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் படகில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் காதலியுடன் வந்த எரித்ரியா  நாட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த பிரிட்டன் ஊழியர்.. கைதான புகைப்படம் வெளியீடு..!!

ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் கைதான புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த 57 வயதான டேவிட் ஸ்மித் என்ற நபர் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து ரஷ்யாவின் உளவுத்துறைக்கு, ரகசியமாக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்டார். அவர், இதற்கு முன்பு பிரிட்டனில் விமானப்படையில் பணியாற்றி இருக்கிறார். உக்ரைன் நாட்டில்  ஒரு பெண்ணை திருமணம் செய்து, ஒரு […]

Categories
உலக செய்திகள்

“ஒபாமாவின் 60-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!”.. இளவரசர் ஹாரி ஏன் பங்கேற்கவில்லை..? வெளியான பின்னணி..!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் 60-வது பிறந்த நாள் விழாவில், அவரின் நெருங்கிய நண்பர் இளவரசர் ஹாரி கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா தன் 60வது பிறந்தநாளை கடந்த சனிக்கிழமை அன்று கொண்டாடியிருக்கிறார். ஆனால் அந்த பிரம்மாண்டமான விழாவில் ஒபாமாவின் நெருங்கிய நண்பர் இளவரசர் ஹாரி கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், அரச குடும்பத்தின் நிபுணர் Angela Levin, இளவரச சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில், ஒபாமா மற்றும் அவரின் மனைவி, இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

பல வருடங்களாக காலியாக கிடந்த வீடு.. பணியாளர்களுக்கு ஜாடிக்குள் காத்திருந்த அதிர்ச்சி..!!

பிரிட்டனில் நீண்ட நாட்களாக காலியாகக்கிடந்த ஒரு குடியிருப்பில் மனித உடல்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இருக்கும் Toxteth என்ற பகுதியில் அமைந்திருக்கும் Wordsworth என்ற வீதியில், பல வருடங்களாக ஒரு குடியிருப்பு, ஆட்கள் வசிக்காமல் காலியாக கிடந்துள்ளது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று கட்டுமான பணியாளர்கள் அந்த குடியிருப்பில் வேலை செய்துள்ளனர். அப்போது அங்கு வித்தியாசமான ஜாடி ஒன்று இருந்துள்ளது. அதனைத்திறந்து பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனுள் மனித […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் இந்த செயல்…. ஏழை நாடுகளை பாதிக்கும்…. அறிவிப்பு வெளியிட்ட உலக நீதி அமைப்பகம்….!!

பொருளாதாரத்தில் குறைந்த நாடுகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள போராடி வரும் நிலையில் பிரிட்டன் அதிக அளவு தடுப்பூசியை ஆர்டர் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே Airfinity பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பிரிட்டனுக்கு 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 467 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் பிரிட்டனில் இளைஞர்களுக்கு மூன்றாவது […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இந்த செயலில் ஈடுபட்டால்…. ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை…. புதிய சட்டத்தை கொண்டு வரும் பிரபல நாடு….!!

பிரிட்டனில் செல்லப்பிராணிகளை திருடுபவர்களுக்கு புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இருந்து மக்கள் பொழுது போக்கிற்காகவும் மன அமைதிக்காகவும் செல்லப்பிராணிகளை அதிக அளவு வாங்க தொடங்கியதால் விற்பனை அதிகரித்தது.  இதனைத்தொடர்ந்து செல்லப்பிராணிகளின் தேவை அதிகரித்ததால் அதன் விலையும் இரு மடங்கானது. இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்லப்பிராணிகளின் திருட்டும் அதிகரித்தது.மேலும் விலை உயர்ந்த நாய்கள் அதிக அளவில் நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த பயணி…. விமானத்தைப் பிடிப்பதற்கு மேற்கொண்ட குறுக்கு வழி…. கைது செய்த காவல்துறையினர்….!!

பிரிட்டன் விமான நிலையத்தில் பயணி ஒருவர் தாமதமாக வந்து விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக செய்த செயலால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் East Midlands விமான நிலையத்திலிருந்து போலந்து செல்லும் விமானம் காலை 6.15 மணிஅளவில் தயாராகி கொண்டிருந்தது. இதனிடையே பயணி ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமான பணியாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக லக்கேஜ் பரிசோதிக்க பயன்படுத்தப்படும் baggage conveyor வழியாக செல்ல முயன்றுள்ளார். pic.twitter.com/TaqM7qmhMD […]

Categories
உலக செய்திகள்

6 நாட்களாக பசியால் துடித்து இறந்த குழந்தை.. வீட்டில் அடைத்துவிட்டு பார்ட்டிக்கு சென்ற கொடூரத்தாய்.. நீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

பிரிட்டனில் ஒன்றரை வயது குழந்தையை வீட்டில் தனியாக அடைத்து வைத்து 6 நாட்களாக பட்டினி போட்டுவிட்டு பார்ட்டிக்கு சென்ற தாய்க்கு 9 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் Verphy Kudi(19) என்ற இளம்பெண் தன் ஒன்றரை வயது குழந்தை, Asiah-வை  வீட்டில் தனியாக அடைத்து வைத்து விட்டு, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று  லண்டனில் தன் காதலருடன் பிறந்தநாள் கொண்டாட சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் குழந்தை பசியால் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் வெளியிட்ட அறிவிப்பு.. 6000 மக்கள் பாதிப்பு.. ஆலோசனையில் பிரதமர்..!!

பிரிட்டன் அரசு, கடந்த புதன்கிழமை அன்று பயணக்கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் பிற நாட்டில் மாட்டிக்கொண்ட பிரிட்டன் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அச்சம் காரணமாக பயண விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதில் பிரிட்டன் அரசு, கடந்த புதன்கிழமை அன்று சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளை அம்பர் பட்டியலுக்கு மாற்றியது. மேலும் மயோட், ஜார்ஜியா, பிரான்ஸ் யூனியன் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளை சிவப்பு பட்டியலில் இணைத்தது. இந்த நாடுகளிலிருந்து, பிரிட்டன் திரும்பும் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த விதிமுறையை பின்பற்றவில்லை எனில்…. கிரிமினல் குற்றம்…. சட்டமாக்க பிரிட்டனிடம் கோரிக்கை வைக்கும் லண்டன் மேயர்….!!

லண்டன் மேயர் ரயில்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அது கிரிமினல் குற்றமாகும் என்பதை சட்டமாக்க வேண்டும் என பிரிட்டனை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி எராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த ஜனவரி முதல் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்ததால்  கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுபாடுகள் விலக்கப்பட்டது. இதனிடையே பேருந்து, […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் 16 -17 வயதோருக்கான கொரோனா தடுப்பூசி …. வெளியான முக்கிய தகவல் ….!!!

பிரித்தானியா நாட்டில்  16 – 17 வயது உட்பட்டவர்களுக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் கொரோனா  தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவலை  கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி நிபுணர்களின் பரிந்துரையின்படி பிரிட்டனில் 16 – 17 வயது உட்பட்டவர்களுக்கு கொரோனா  தடுப்பூசியின் முதல் டோஸ் இன்னும் ஒரு சில வாரங்களில் போடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வயதினருக்கு Pfizer-BioNTech […]

Categories
உலக செய்திகள்

இந்தியா உட்பட 4 நாடுகள் சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கம்.. பிரிட்டன் அரசு வெளியிட்ட நல்ல தகவல்..!!

பிரிட்டன் அரசு, இந்தியா உள்பட நான்கு நாடுகளை சிவப்பு பயண பட்டியலிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டன் அரசு, இந்தியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளை சிவப்பு பயண பட்டியலில் வைத்திருந்தது. இந்நிலையில், இந்த நாடுகளை அம்பர் பட்டியலுக்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளது. வரும், 8- ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே இந்தியா உட்பட குறிப்பிட்ட இந்த நான்கு நாடுகளை சேர்ந்த பயணிகள் பிரிட்டன் சென்றால், இனிமேல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

பயணப்பட்டியலில் புதிய விதியை இணைக்கும் திட்டம்.. பிரதமர் முடிவில் மாற்றமா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் அரசின், பயணப் பட்டியலில் புதிய பிரிவுகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் கைவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டின் பயணத்திட்டத்தை முடிந்த அளவிற்கு எளிதானதாக அமைக்க நினைப்பதாக நேற்று மாலையில் தெரிவித்திருந்தார். பிரிட்டன் அரசு கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தங்கள் நாட்டின் பயண பட்டியலில்  கடுமையான விதிகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, பச்சை, அம்பர், சிகப்பு போன்றவை பட்டியலில் இருந்தது. தற்போது புதிதாக பச்சை கண்காணிப்பு மற்றும் அம்பர் பிளஸ் […]

Categories
உலக செய்திகள்

படுக்கையில் இருந்த பெண்ணிற்கு இன்ப அதிர்ச்சி.. பிறந்தநாளை சிறப்பித்த நல வாழ்வு மையம்..!!

பிரிட்டனில், படுக்கையில் இருக்கும் வயதான பெண்ணிற்கு பிறந்தநாள் இன்பஅதிர்ச்சி கொடுத்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.   பிரிட்டனில் 88 வயதுடைய பெண்மணி ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எனவே, பிரிட்டனின் நலவாழ்வு மையம் அவரின் பிறந்தநாளிற்காக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது அந்த நல வாழ்வு மையத்தை சேர்ந்தவர்கள், அந்த பெண்ணை படுக்கையுடன் ஒரு தோட்டத்தின் அருகே கொண்டு வந்தனர். அங்கு இசை நிகழ்ச்சி ஏற்பாடு […]

Categories
உலக செய்திகள்

மர்மமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளம்பெண்.. தப்பிச்சென்ற நபர்.. பிரிட்டனில் பரபரப்பு..!!

பிரிட்டனில் குடியிருப்பு ஒன்றில் ஒரு இளம்பெண் மர்மமாக கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரத்தில் நியூட்டன் பகுதியில் இருக்கும் Unett என்ற வீதியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் இளம் பெண் இறந்து கிடந்துள்ளார். உடனடியாக அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குடியிருப்புக்குள் சென்ற காவல்துறையினர், அதிர்ச்சியடைந்தனர். அங்கு, பல தடவை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஒரு இளம்பெண் உயிரிழந்து கிடந்துள்ளார்.  அங்கு வேறு ஒருவரும் இல்லை. காவல்துறையினர் வரும் சமயத்தில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரித்தானியருக்கு கிடைத்த 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதையல்…. மதிப்பு என்ன தெரியுமா….?

இங்கிலாந்தில் ஒருவருக்கு கிடைத்த புதையல் அவரை ஒரே நாளில் இரண்டு கோடிக்கு அதிபதி ஆக்கியுள்ளது. இங்கிலாந்தில்West Dean கிராமத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் புதையல் தேடும் ஒருவருக்கு புதையல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தப் புதையல் அவரை ஒரே நாளில் பணக்காரர் ஆக்கியுள்ளது. இதனிடையே அவருக்கு மிகப்பெரிய புதையல் ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த நபருக்கு ஒரு இஞ்ச் விட்டமும் 0.15 அவுன்ஸ் எடையும் உடையட ஒரே ஒரு நாணயம் மட்டும் தான் கிடைத்துள்ளது. ஆனால் அந்த நாணயத்தின் மதிப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸிற்கு மட்டும் கடும் விதிகள் எதற்காக..? உண்மையை கூறிய பிரிட்டன்..!!

பிரிட்டனின் போக்குவரத்து செயலாளரான கிராண்ட் ஷாப்ஸ், பிரான்ஸ் நாட்டை அம்பர் பிளஸ் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் பீட்டா மாறுபாடு தொற்று பரவியதால் அம்பர் பிளஸ் பட்டியலில் இணைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் பிரான்ஸ் நாட்டின் ரீயூனியன் தீவில் பீட்டா மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரியூனியன் தீவானது, பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசிலிருந்து சுமார் 6000 மைல் தூரத்திலிருக்கும் இந்திய பெருங்கடலில் இருக்கிறது. இந்த ரியூனியன் தீவில் மட்டுமல்லாமல், பிரான்ஸின் […]

Categories
உலக செய்திகள்

ஆய்வில் தெரியவந்த உண்மை…. 99 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை….!!

பிரிட்டனில் கர்ப்பிணி பெண்கள் 99% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் மகப்பேறு கண்காணிப்பு அமைப்பு ஆய்வு மேற்கொண்டதில் பிரிட்டனிலுள்ள கர்ப்பிணிப் பெண்களில் 99 சதவீதத்திற்கு அதிகமானோர் தடுப்பூசிகள் போடவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1 மேற்கொண்ட ஆய்வில் 742 […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி திட்டத்தில் ஊழல்!”.. பிரபல நாட்டை கடுமையாக விமர்சிக்கும் WHO..!!

உலக சுகாதார மையம், சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி திட்டத்தை கடும் விமர்சனம் செய்திருக்கிறது. உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம், சுவிட்சர்லாந்து உட்பட சில நாடுகளின் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி திட்டமானது ஒழுக்கநெறி ஊழல் என்று தெரிவித்துள்ளார். உலகில் உள்ள மொத்த தடுப்பூசி மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கை 10 நாடுகளே பயன்படுத்திவிட்டது. இது, ஒரு ஒழுக்கநெறி ஊழல் என்று தெரிவித்துள்ளார். உலகிலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் மக்களுக்கு தற்போது வரை தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

ஒன்றரை மாத குழந்தைக்கு கத்திக்குத்து.. கொடூரத்தாய் கைது..!!

பிரிட்டனில், தன் குழந்தைகளை கத்தியால் தாக்கிய பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் வடக்கு அயர்லாந்தின் தலைநகரான Belfast-ல் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கதறல் சத்தம் கேட்டுள்ளது. எனவே அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்பு அந்த வீட்டுனுள் சென்று பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு, பிறந்து 7 மாதங்கள் மட்டுமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையும், இரண்டு வயதுடைய பெண் குழந்தையும்  கத்தி குத்து காயங்களுடன் கிடந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒரு பெண் கைதானதாக […]

Categories
உலக செய்திகள்

“குடையும் பிரதமர் போரிஸ் ஜான்சனும்!”.. வைரலாகும் காமெடி வீடியோ..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு குடையை விரிப்பதற்கு போராடிய வீடியோ வெளியாகி இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வழக்கமாக, பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பரபரப்பும் கட்டுப்பாடுகளும் நிறையவே இருக்கும். இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விழாவில் திடீரென்று மழை பெய்துவிட்டது. எனவே, பிரதமர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து நபர்களுக்கும் குடை கொடுத்துள்ளார்கள். அனைவரும் குடையை விரித்து தங்களை காத்துக்கொண்டனர். ஆனால், பிரதமருக்கு மட்டும் குடையை […]

Categories
உலக செய்திகள்

கனமழையிலிருந்து மீள்வதற்குள் அடுத்ததா..? பிரிட்டனை தாக்கப்போகும் அடுத்த புயல்..!!

பிரிட்டனில் கனத்த மழை மற்றும் புயல் ஏற்படுத்திய சேதங்களிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் எவர்ட் என்ற புயல் உருவாக போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் கனத்த மழை பெய்து லண்டனை மொத்தமாக புரட்டிப்போட்டது. இதில் மருத்துவமனைகள் உட்பட பல பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில், நாட்டில் மீண்டும் ஒரு புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. Northamptonshire என்ற பகுதியில் நேற்று கல்மழை பெய்தது. இதனால் வாகனத்தில் இருக்கும் அலாரங்கள் தானாகவே நீண்ட நேரம் […]

Categories
உலக செய்திகள்

ஆமை போல செயல்பட்டு முன்னேறும் பிரான்ஸ்.. பிரிட்டனை பின்னுக்கு தள்ளுமா..?

தடுப்பூசி செலுத்தும் பணியில் பிரிட்டனை பிரான்ஸ் முந்தி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் இன்னும் 21 நாட்களில் பிரிட்டனை பிரான்ஸ் தடுப்பூசி திட்டத்தில் முந்தும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பிரான்சில் சராசரியாக தினசரி, 3,30,000 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே இந்த அடிப்படையில் முதலிடத்தில் பிரான்ஸ் இருக்கிறது. எனினும் பிரிட்டனில் தினசரி 44,000 நபர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனினும் பிரிட்டன் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியபோது வெகு தீவிரமாக செயல்பட்டது. அப்போது […]

Categories
உலக செய்திகள்

இனி வானவேடிக்கைக்கு பதிலாக இப்படி பண்ணலாம்….. புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வேடிக்கை காட்டும் பிரபல நிறுவனம்….!!

பிரிட்டன் செலஸ்டியல் தொழில்நுட்ப நிறுவனம் வானில் பல டிரோன்களை வைத்து வேடிக்கை காட்டி வருகின்றது. பிரிட்டனைச் சேர்ந்த செலஸ்டியல் தொழில்நுட்ப நிறுவனம் வானவேடிக்கை பதிலாக ஒளிரும் டிரோன்களை கொண்டு வானில் வேடிக்கை காட்டி வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் நடைபெறும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒளிரும் டிரோன்கள்களை வைத்து கண்காட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியிலும் செல்சியஸ் நிறுவனம் டிரோன்கள்களால் வேடிக்கை காட்டியது. இந்த செல்சியஸ் நிறுவனம் 300 […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் சார்லஸ் டயானா திருமணம்…. திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட ராஜ குடும்ப பொருள்…. 40 ஆண்டுகளுக்கு பின் ஏலம்….!!

இளவரசர் சார்லஸ் டயானாவின் திருமண நிகழ்வில் வெட்டப்பட்ட கேக் துண்டு தற்போது ஏலம் விடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் டயானாவின் திருமணம் கடந்த 1987 ஆம் ஆண்டு விமர்சையாக நடந்தது. இந்த திருமண விழாவில் வெட்டப்பட்ட கேக் துண்டின் ஒரு பகுதி மகாராணியின் ஊழியரான Moyra Smith என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 8க்கு 7 இஞ்ச் நீளமும், 28 அவுன்ஸ் எடையும் உடைய அந்த கேக் துண்டை Moyra பிளாஸ்டிக் பேப்பர் ஒன்றில் […]

Categories
உலக செய்திகள்

160 வருடங்கள் பழைமையான தேவாலயத்தில் பயங்கரம்.. முழுவதும் எரிந்துபோன சோகம்..!!

பிரிட்டனில் ஸ்காட்லாந்தில் 160 வருடங்கள் பழைமையான ஒரு தேவாலயம் தீ விபத்தில் சேதமடைந்துவிட்டது. ஸ்காட்லாந்தில் இருக்கும் கிளாஸ்கோ சிட்டி சென்டரில், அமைந்துள்ள செயின்ட் சைமன் ரோமன் கத்தோலிக்க பாரிஷ் தேவாலயத்தில் இன்று அதிகாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தேவாலயம் இருக்கும் பேட்ரிக் பிரிட்ஜ் என்ற வீதியில் உடனே 30க்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் குவிந்தனர். அதன்பின்பு தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். மேலும் தேவாலயத்தை சுற்றி அமைந்திருக்கும் வீடுகளில் இருக்கும் மக்கள், […]

Categories
உலக செய்திகள்

உடல் எடையை குறைத்து…. ஒல்லியாக மாறினால் பரிசு வழங்கப்படும்…. எங்கு தெரியுமா…??

பிரிட்டன் நாட்டு மக்கள் தங்களுடைய உணவு பழக்கவழக்கத்தை ஆரோக்கியமான முறையில்  கடைப்பிடித்து உடல் எடையை குறைத்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதற்காக பிரிட்டன் அரசு ஒரு ஆப்பை தயாரித்துள்ளது. அந்த ஆப் ஆனது சூப்பர் மார்க்கெட் சாஃப்ட்வேர் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதில் யார் அதிகமாக ஆரோக்கியமற்ற பொருட்களை வாங்காமல் காய்கறிகள், பழங்களை வாங்குகிறார்களோ அவர்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஆரோக்கியமான உணவுகளையே வாங்குபவர்களுக்கு லால்டி பாயிண்ட்ஸ் வழங்கப்படுகிறது. இதை […]

Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து வரும் புலம்பெயர்வோர் பிரச்சனை!”.. பிடிவாதம் பிடிக்கும் பிரான்ஸ்.. பிரிட்டனுக்கு ஏற்பட்ட தலைவலி..!!

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து நுழைந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தை பிரான்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை. பிரிட்டன் நாட்டிற்குள், பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாயின் வழியே படகுகளில் பயணித்து புலம்பெயர்ந்த மக்கள் புகுந்து வருகிறார்கள். இது தொடர்ந்து வருவதால், பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் பிரிட்டன் அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, ஆங்கில கால்வாய்க்குள் புகும் புலம்பெயர்ந்த மக்களின் படகுகளை நிறுத்தி, அதனை பிரிட்டன் எல்லையை தாண்டி விட்டுவிடவேண்டும் என்பது தான் இத்திட்டம். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மேற்கொள்ளும் புதிய விதிமுறை.. பிரான்ஸை நாட்டை இந்த பட்டியலில் இணைத்தது..!!

பிரிட்டன் நாட்டின் அம்பர் பட்டியலில், பிரான்ஸ் அடுத்த வாரத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு, ஆம்பர் பட்டியலில் பிரான்சை இணைத்தால் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் செல்லும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பயணிகள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். எனினும் பிரிட்டன் அரசு கடந்த வாரத்தில் அம்பர் பிளஸ் என்ற புதிய வகை பிரிவை உருவாக்கியிருக்கிறது. இந்த பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்லும் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் தனிமைப்படுத்தப்படுவார்கள். பிரிட்டன் அரசு பிரான்சில் பீட்டா மாறுபாடு […]

Categories
உலக செய்திகள்

“எங்களின் தாக்குதலை தடுக்க முடியாது!”.. உலக நாடுகளை எச்சரித்த ரஷ்ய ஜனாதிபதி..!!

ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் பிரிட்டனுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் உலக நாடுகளை எச்சரித்திருக்கிறார். ரஷ்ய அரசு, கடந்த ஜூன் மாதத்தில் தங்கள் கடல் பகுதிக்குள் சட்டத்திற்கு புறம்பாக பிரிட்டன் போர்க்கப்பல் புகுந்ததாக தெரிவித்தது. மேலும் எச்சரிப்பதற்காக அதன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, விரட்டி அடித்ததாகவும் தெரிவித்திருந்தது. எனினும் ரஷ்யாவின் இந்த அறிக்கையை பிரிட்டன் அரசு மறுத்திருந்தது. மேலும் தங்கள் போர்க்கப்பல்களை யாரும் தாக்கவில்லை என்றும் கூறியது. ஆனாலும் சில தினங்கள் கழித்து ரஷ்ய அரசு, தாங்கள் […]

Categories
உலக செய்திகள்

தன்னைவிட 32 வயது அதிகமானவருடன் திருமணம்.. இளவரசி டயானாவின் உறவினரான இவர்..?

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் மருமகள் அவரை விட 32 வயது அதிகமுள்ளவரை திருமணம் செய்திருக்கிறார். பிரிட்டன் இளவரசி டயானாவின் மருமகள் லேடி கிட்டி ஸ்பென்சர். இவர் கோடீஸ்வரரான மைக்கேல் லூயிஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். லேடி கிட்டி ஸ்பென்சருக்கு 30 வயதாகிறது. மைக்கேல் லூயிஸ் 62 வயதுடையவர். நேற்று முன்தினம் ரோம் நகரத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்  பங்கேற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல் மைக்கேல் லூயிஸ் முன்பே திருமணமானவர். அவரது முதல் மனைவியின் […]

Categories

Tech |