Categories
உலக செய்திகள்

தேங்கி கிடக்கும் கண்டெய்னர்கள்…. தடைபட்ட விநியோகம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரிட்டனின் பரபரப்பு துறைமுகமான  Felixstoweவில் கண்டெய்னர்கள் குவிந்து கிடப்பதால் சூப்பர் மார்க்கெட்டில் விநியோகமானது தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. பிரிட்டன் Felixstowe துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் கண்டெய்னர்களினால் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனையானது தடைபட்டுள்ளது. இதனால் உணவு பண்டங்களின் தட்டுப்பாடு மட்டுமல்லாமல் பல்வேறு சிறு வணிகங்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது கனரக வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் இல்லாததன் காரணமாகவே துறைமுகத்தில் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கண்டெய்னர்கள் வெளியேற்றப்படாமல் உள்ளன. Felixstowe துறைமுகத்திலிருந்து தான் பிரிட்டனுக்கு 40 சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனுடன் தொடர்ந்து மோதும் பிரான்ஸ் அதிபர்.. கைவிரித்த ஐரோப்பிய நாடுகள்..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், பிரிட்டனை பழிவாங்க அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அவருக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. பிரிட்டன், தங்களுக்குரிய ஜெர்ஸி தீவில் பிரான்ஸின் அனைத்து மீன்பிடி படகுகளையும் அனுமதிக்கவில்லை. இதனால், கோபமடைந்த பிரான்ஸ், தங்கள் மீன்பிடி படகுகளுக்கு அனுமதி தரவில்லை எனில், ஜெர்ஸி தீவிற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திடம், பிரிட்டனை பழிவாங்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரியது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் Universal credit திட்டம் ரத்து.. வறுமையில் வாடும் குடும்பங்கள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டன் பிரதமர் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ததால் நாட்டின்  முக்கிய தொகுதிகளில் இருக்கும் குடும்பங்களின் வருமானத்தில் 500 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்கள் வாரந்தோறும் 20 பவுண்டுகள் ஊக்கத்தொகையாக பெற்று வந்தது. ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டார். இதனால் பல ஏழை குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதால் நாட்டில் அதிகம் பாதிப்படையும் […]

Categories
உலக செய்திகள்

2000 அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்.. பிரிட்டனில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனில் கடந்த 4 வருடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றச்செயல்களில் 2000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆதரவு அதிகாரிகள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் சாரா எவரார்டு என்ற இளம்பெண்ணை காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பே, காவல்துறையினர் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகாரபூர்வமாக வெளிவர தொடங்கியுள்ளது. தகவல் சுதந்திரச் சட்ட அடிப்படையில் கிடைத்த புள்ளி விவரங்கள் படி, குற்றம் சாட்டப்பட்ட 2000 காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பிரிட்டன் அரசு வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கர்ப்பிணிகளுக்கு ஆபத்துகள் உள்ளதாக தேசிய சுகாதார சேவை எச்சரித்திருக்கிறது. பிரிட்டனின் அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்ககூடிய பராமரிப்பு தேவைப்படக்கூடிய நோயாளிகள் ஆறு பேரில் ஒருவர் தடுப்பூசி செலுத்தாத கர்ப்பிணிப் பெண்ணாக உள்ளதாக புள்ளி விவரங்களில் தெரியவந்திருக்கிறது. இந்த வருடத்தின் ஜூலை மாதம் மற்றும் செப்டம்பர் மாதத்திற்குள் கூடுதல் கார்போரியல் சவ்வு ஆக்ஸிஜனேற்றத்திற்கான சிகிச்சை பெற்ற 118 பேரில் 20 கர்ப்பிணிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 19 நபர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது […]

Categories
உலக செய்திகள்

19 வயதில் மிகப்பெரிய கோடீஸ்வரரான இளைஞர்.. போதைப்பழக்கத்தால் சீரழிந்த சம்பவம்..!!

பிரிட்டனில் ஒரு நபர் லாட்டரியில் £9.7 மில்லியன் பரிசு வென்ற நிலையில், தவறான பழக்கத்தால் மொத்தமாக பணத்தை இழந்து பரிதாபமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பிரிட்டனில் உள்ள Norfolk பகுதியில் வசிக்கும் 38 வயது நபர் மிக்கி கரோல். இவர், கடந்த 2002ஆம் வருடத்தில் 19 வயது இளைஞராக இருந்த சமயத்தில் லாட்டரியில் £9.7 மில்லியன் பரிசுத்தொகை விழுந்திருக்கிறது. அப்போது, மிக்கிக்கும், சாண்ட்ரா ஐகன் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. சிறிய வயதில், அதிக பணத்திற்கு சொந்தக்காரரான மிக்கிக்கு, […]

Categories
உலக செய்திகள்

சாலையில் மகனுடன் நடந்து சென்ற தாய்.. வாகனத்தில் மோதி கொல்ல முயன்ற நபர் பலி.. பரபரப்பு சம்பவம்..!!

பிரிட்டனில் சாலையில் மகனுடன் சென்று கொண்டிருந்த, பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பிக்க முயற்சித்த நபர் சிறிது நேரத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Egremont நகரின் Woodend பகுதியில் நேற்று மதியம் 2:30 மணிக்கு, 40 வயதுடைய பெண் ஒருவர், தன் மகனுடன் நடந்து சென்றிருக்கிறார். அப்போது சிகப்பு நிறத்திலான Kia Rio வாகனம் ஒன்று, அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இதில், காயமடைந்த இருவரும் கீழே விழுந்த சமயத்தில், வாகனத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

அரண்மனையிலிருந்து Bar-க்கு செல்ல சுரங்கப்பாதை.. வெளியான அரசகுடும்பத்தின் ரகசியம்..!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், அரண்மனையிலிருந்து, பிரபல பார்-க்கு செல்வதற்காக ரகசியமாக சுரங்கப்பாதை ஒன்று அமைத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. ரிச்சர்ட் ஈடன் என்ற Daily Mail-ன் ஆசிரியர் தான் மகாராணியார், ரகசிய சுரங்கப்பாதை வைத்திருப்பதை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பிரிட்டன் மகாராணியார் லண்டனில் இருக்கும் பிரபலமான டியூக்ஸ் என்ற பாருக்கு செல்வதற்காக ரகசியமான சுரங்கப்பாதை ஒன்றை வைத்திருக்கிறார். Princess Eugenie's husband shines light on secret #royal tunnel pic.twitter.com/1ViYAOWPv2 — Richard […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய இளம்பெண் கொலை சம்பவம்.. பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் அறிமுகம்..!!

பிரிட்டனில் ஒரு காவல்துறை அதிகாரி இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. பிரிட்டனில் காவல்துறை அதிகாரியான Wayne Couzens, சாரா என்ற இளம்பெண்ணை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே நாட்டில் பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டத்தை, BT என்ற தொலைதொடர்பு நிறுவன குழுமத்தின் தலைமை அதிகாரி Philip Jansen அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, தனியாக பயணம் […]

Categories
உலக செய்திகள்

இதை பண்ணியிருந்தால்…. தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்…. பிரிட்டன் அரசின் அறிவிப்பு….!!

இந்தியாவில் இருந்து வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திய பயணிகள் இனிமேல்  10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசாங்கம், இந்திய பயணிகளை தனிமைப்படுத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல் பிரிட்டனிலிருந்து வரும் மக்கள் அக்டோபர்  4 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் இம்முடிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிரிட்டன் அரசானது covid-19 தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்ற […]

Categories
உலக செய்திகள்

எதற்கெடுத்தாலும் பிரிட்டனை மிரட்ட தேவையில்லை.. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி..!!

பிரான்சிடம், அடிக்கடி பிரிட்டனை மிரட்ட தேவையில்லை, சரியான முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசு பிரிட்டன் அதன் தீவுப்பகுதிகளில், தங்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடவில்லை, என்றால் அந்த தீவுகளுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்தது. பிரிட்டனின் சேனல் தீவுகளில் ஒன்றாக இருக்கும் ஜெர்சி தீவில் மீன் பிடிப்பதற்கு பிரான்ஸின் 47 மீன்பிடி படகுகள் அனுமதி கேட்டிருந்தது. எனினும், அதில் 12 படகுகளை தான் பிரிட்டன் அனுமதித்தது. […]

Categories
உலக செய்திகள்

தொலைபேசியை ஹேக் செய்த பிரச்சனை.. துபாய் மன்னருக்கு தடை விதித்த மகாராணியார்..!!

பிரிட்டன் மகாராணியார், துபாய் மன்னர் தன்னோடு குதிரைப் பந்தயத்தைக் காண தடை விதித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவருடைய தொலைபேசி தகவல்கள் திருடப்பட்ட சம்பவம்  நாடாளுமன்றத்தை கொதிப்படைய செய்திருக்கிறது. எனவே, பிரிட்டன் மகாராணியார் இந்த தடையை விதித்திருக்கிறார். துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமராகவும் உள்ள ஷேக் மொஹ்மத் பின் ரஷித் அல் மக்தூமிற்கும், அவரின் மனைவியான  இளவரசி ஹயாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், ஹயா துபாயை விட்டு […]

Categories
உலக செய்திகள்

“பிரெக்சிட்டால் தொடரும் பிரச்சனை!”.. பிரிட்டன்-பிரான்ஸ் பார்சல் சேவையில் கட்டுப்பாடுகள்..!!

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து, அந்நாட்டிற்கு பிரான்ஸிற்கும் இடையே பார்சல் சேவை விதிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிரான்சில் மதிப்பு கூட்டு வரி மற்றும் சுங்க வரிகளினால், பார்சல்களை அனுப்ப கட்டணம் அதிகரித்திருக்கிறது. எனவே, சில பொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் உறவினர்களுக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இனிமேல் பிரான்ஸ் நாட்டிற்கு, பிரிட்டனிலிருந்து அனுப்பப்படும் பார்சலில் என்ன உள்ளது? என்பதையும், customs declaration படிவத்தில் தெரியப்படுத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் Universal Credit திட்டம் ரத்து.. பிரதமர் அறிவிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு..!!

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானிதத்திருப்பதால், ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு குழந்தை பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் அரசாங்கம் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்திருக்கிறது. அதாவது, இத்திட்டமானது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, மாதம் ஒரு முறை அல்லது இருமுறை நிதியுதவி வழங்கும் திட்டமாகும். இதனால், குழந்தைகளுக்கு அதிக பயன் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த கொரோனா சமயத்தில் வாரந்தோறும், 20 பவுண்டுகள் இத்திட்டத்தின் கீழ் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிகளுக்கு தடை …. ஊசலில் மக்களின் உயிர் …. பிரபல நாட்டின் போர் செயல்….!!

பிரான்ஸ் அரசானது, பிரிட்டனுக்கு வரவழைக்க பட்ட  5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை தடுத்து நிறுத்தியதாக தகவல் வந்துள்ளன. பிரிட்டனின் அரசாங்க ஆதாரப்படி, ஐரோப்பிய நாடான ஹொலாந்தில் உள்ள ஹாலிக்ஸ் தளத்தில் இருந்து இங்கு வரவழைக்கப்பட வேண்டிய தடுப்பூசிகளைக் பிரான்ஸ் அரசாங்கமானது தடுத்துள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் தடுப்பு ஊசி  திட்டத்தின் பராமரிப்பு பணிக்காக ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கு கவனம் செலுத்துவதில் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை குறித்து பிரிட்டனை சேர்ந்த பொதுமக்களில்  ஒருவர் கூறியதாவது, “பிரிட்டனின் […]

Categories
உலக செய்திகள்

40,000 ஆண்டுகள்…. பழமை வாய்ந்த குகை கண்டுபிடிப்பு…. ஆய்வு நடத்திய கிளைவ் ஃபின்லேசன் குழுவினர்….!!

பிரிட்டனில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழங்கால குகை ஒன்று ஆராய்ச்சி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித இனமானது பல்வேறு பரிணாம வளர்ச்சியில் தான் தோன்றியது. அவ்வாறு தோன்றும் பொழுது பல்வேறு இனங்கள் அழிந்திருக்கும். அதில் ஒன்று தான் நியாண்டர்தால் மனித இனம். இவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பிரிட்டனில் உள்ள ஜிப்ரால்டர் பகுதியில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்ட வான்கார்ட் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கிடைத்த பழங்கால தொல்பொருள்களின் […]

Categories
உலக செய்திகள்

ராஜ குடும்பத்தை விட்டு…. தனிமை வேண்டி வெளியேறிய தம்பதி…. தொடர்ந்து எழும் கண்டனம்….!!

பிரிட்டனின் இளவரசர் ஹரி மேகன் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி புகழுக்காக மீண்டும் தனிமையை மீறும் செயலில் ஈடுபடுவதால் கண்டனம் எழுந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் இளவரசரான ஹேரி மேகன் தம்பதியினர் ராஜ குடும்பத்தில் இருந்து தனிமை வேண்டும் என கூறி வெளியேறினர். இந்த நிலையில் தற்போது ராஜ குடும்பத்தின் பெயரைச் சொல்லி புகழை சம்பாதிக்க பார்ப்பதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசு முறை பயணமாக பிற நாடுகளுக்கு செல்லுவது வழக்கம். இதனைத் […]

Categories
உலக செய்திகள்

இம்மாதத்திலிருந்து சுவிட்சர்லாந்தில் புதிய மாற்றங்கள்.. வெளியான அறிவிப்பு..!!

ஸ்விட்சர்லாந்தில் இந்த மாதத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகள் உட்பட பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. ஸ்விட்சர்லாந்தில் இம்மாதம் முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத மக்கள் 50 சுவிஸ் பிராங்குகள் கட்டணம் செலுத்தி தான் பரிசோதனை மேற்கொள்ள முடியும். இந்த விதியானது, வரும் 10-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், 31-ஆம் தேதியிலிருந்து நாட்டில், கடிகாரம் 1 மணி நேரம் பின்னோக்கி நகர்த்தப்படுகிறது. அதாவது சூரியன், உதயமாவதும், அஸ்தமனமாவதும் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடவிருந்த நாளில் உயிரிழந்த சிறுமி.. கதறிய தாய்.. பரிதாப சம்பவம்..!!

பிரிட்டனில் 15 வயதுடைய சிறுமி கொரோனோ தடுப்பூசி போடவிருந்த நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் என்ற பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஜோர்ஜா ஹாலிடே. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரே வாரத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார். கொரோனா தடுப்பூசி போடவிருந்த நாளில் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயாரான டிரேசி ஹாலிடே தெரிவித்துள்ளதாவது, என் மகள் அதிக சுறுசுறுப்புடன் இருப்பாள். அவள் நண்பர்களுடனும் சகோதர சகோதரிகளுடன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா செல்லும் தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தல்.. பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிவிப்பு ..!!

பிரிட்டன் அரசு இந்தியாவிற்கு செல்லும் தங்கள் மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இந்திய நாட்டிலிருந்து, பிரிட்டன் செல்லும் பயணிகள், கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும், கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யவும் தனிமைப்படுத்துக்கொள்ளவும் வேண்டும் என்று அந்நாடு தெரிவித்திருக்கிறது. எனவே, மத்திய அரசு, இதற்கு பதிலடியாக பிரிட்டன் மக்கள் இந்தியாவிற்கு வந்தால், தடுப்பூசி பெற்றிருந்தாலும் கட்டாயமாக 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. இந்த விதிமுறை நாளையிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசு இவ்வாறு அறிவித்த பின்பு பிரிட்டன் அரசானது, […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாடு.. திங்கட்கிழமையிலிருந்து களமிறங்கும் இராணுவ வீரர்கள்..!!

பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்க்க இராணுவ வீரர்கள் வரும் திங்கட்கிழமையிலிருந்து பெட்ரோல் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் எரிபொருள் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, இராணுவ ஓட்டுனர்கள் சுமார் 200 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்திருக்கிறது. எனினும், கிறிஸ்துமஸ் பண்டிகை வரைக்கும் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீடிக்கும் என்று நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் எச்சரிகைவிடுத்துள்ளார். மேலும், அவர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, இந்த விநியோக தட்டுப்பாடானது உலக அளவில் இருக்கிறது. எனவே […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் தீவிரமடையும் பெட்ரோல் தட்டுப்பாடு.. பல மணி நேரமாக காத்திருந்த ரொனால்டோவின் வாகனம்..!!

பிரிட்டனில் கால்பந்து விளையாட்டின் உச்ச நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஓட்டுனர் பல மணி நேரங்களாக பெட்ரோலுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனில் பெட்ரோல் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கால்பந்து விளையாட்டின் உச்ச நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ வசிக்கும் பகுதிக்கு சுமார் ஒரு மைல் தூரத்தில் அவரின் வாகன ஓட்டுனர், 2, 20,000 பவுண்டுகள் மதிப்பு கொண்ட பென்ட்லி காருடன் எரிபொருளுக்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். மேலும், ரொனால்டோவின் பாதுகாப்பு படையினரும், மற்றொரு காரில் அங்கு காத்திருந்துள்ளனர். அதாவது, அவரின் […]

Categories
உலக செய்திகள்

“பணம் தரவில்லையென்றால் வேலை நடக்காது!”.. பிரிட்டனை மிரட்டும் பிரான்ஸ்..!!

பிரான்ஸ் அரசு, பிரிட்டன் தங்களுக்கு பணம் தரவில்லையென்றால் தங்கள் நாட்டிலிருந்து, ஆங்கிலக்கால்வாய் வழியே அங்கு நுழையும் புலம்பெயர்ந்த மக்களை தடுக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளது. பிரிட்டனின் உள்துறை செயலர் பிரீத்தி பட்டேல், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியே தங்கள் நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்த மக்களை தடுக்க பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். அதன் படி, பிரான்ஸ் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படைக்கு 54 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், சில நாட்கள் கழித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டனில் பணியாளர்கள் தட்டுப்பாடு!”.. சிறைக்கைதிகளுக்கு பணி வழங்க ஆலோசனை.. அகதிகளை புறக்கணிக்கும் நீதித்துறை செயலர்..!!

பிரிட்டனில் பணியாளர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிறை கைதிகளை பயன்படுத்தலாம் என்று நாட்டின் நிதித்துறை செயலர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். பிரிட்டனில், மதுபான விடுதிகள், உணவகங்கள் போன்ற இடங்களில் பணியாற்றி வந்த ஐரோப்பியாவை சேர்ந்த இளைஞர்கள் பிரெக்சிட் மற்றும் ஊரடங்கு காரணமாக சொந்த நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் நாட்டில் பணியாளர் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மில்லியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் பிரிட்டன் நீதித்துறை செயலரான Dominic Raab, ஆயுள் தண்டனை […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டனில் பெட்ரோல் பற்றாக்குறை!”.. இந்திய பெண்ணை தாக்கி கீழே தள்ளிய நபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

பிரிட்டனில் பெட்ரோல் பற்றாக்குறையால் அடிக்கடி பிரச்சனை ஏற்படும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள Belsize Park என்னும் இடத்தில் பெட்ரோல் நிலையம் நடத்தி வரும் இந்தியாவை சேர்ந்த Nerali Patel என்ற 38 வயது பெண்ணை, ஒரு நபர் தாக்கிய வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் காலியாகும் நிலையில் இருந்திருக்கிறது. எனவே, Nerali , ‘பெட்ரோல் இல்லை’ என்ற பலகையை வைத்து தடை போட்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் சார்லஸ்-டயானாவால் அழுத்தத்திற்கு உள்ளானவர்கள்!”.. யார் தெரியுமா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவரும் திருமணத்திற்கு வெளியில் வைத்திருந்த உறவால், அவர்களின் பாதுகாவலர்கள் அதிகம் பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானாவிற்கு தெரியாமல் கமீலாவுடன் பழகி வந்தார். அதே சமயத்தில், மறைந்த இளவரசி டயானாவும் கணவருக்கு தெரியாமல், James Hewitt-டுடன்  பழகி வந்தார் என்பது தெரிந்த தகவல். ஆனால், கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டிருந்த  சூழ்நிலையில் கடும் அழுத்தத்திற்கு உள்ளானது அவர்களின் பாதுகாவலர்கள் தான் என்று […]

Categories
உலக செய்திகள்

“ஓட்டுனர்கள் பற்றாக்குறைக்கு காரணம் பிரெக்சிட் தான்!”.. பிரிட்டனை விமர்சிக்கும் ஜெர்மன் புதிய சேன்ஸலர்..!!

ஜெர்மன் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சேன்ஸலர் Olaf Scholz, பிரிட்டனில் ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட பிரெக்சிட் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். ஜெர்மனியில் நடந்த தேர்தலில், முன்னாள் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலின் CDU கட்சியை விட, SPD கட்சி, சார்பாக சேன்ஸலர் வேட்பாளராக களமிறங்கிய Olaf Scholz, சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர், பிரெக்சிட் காரணமாக தான் பிரிட்டனில் ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். அதாவது, பிரிட்டனில் கனரக […]

Categories
உலக செய்திகள்

தவறுதலாக குழந்தை மீது ட்ரக் ஏற்றி கொன்ற தந்தை.. இரண்டு தாய்களின் பாச போராட்டம்..!!

பிரிட்டனில் ஒரு தந்தை, தன் 3 வயது குழந்தை மீது தவறுதலாக ட்ரக் ஏற்றியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்திருக்கிறது. வேல்ஸில் இருக்கும் Pembrokeshire கவுண்டி என்ற பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அன்று இரவு நேரத்தில், இயான்டோ ஜென்கின்ஸ் என்ற 3 வயது சிறுவன், தங்களது விவசாய பண்ணையில் சகோதரி மற்றும் ஒரு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், சிறுவனின் தந்தையான குட்டோ சியோர் […]

Categories
உலக செய்திகள்

சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…. ஏமாற்றிய 14 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

14 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒரு சிறுமி மற்றும் இரு சிறுவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட Olly Stephens என்கிற சிறுவன் வசித்து வந்தான். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 14 வயதேயான சிறுமி ஒருவர் Olly Stephens-யை  ஏமாற்றி தன்னுடன் அழைத்து சென்று  தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கோர சம்பவமானது Olly Stephens […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில்…. காஷ்மீர் குறித்து விவாதம்…. சர்ச்சையாக பேசிய பாகிஸ்தான் எம்.பி….!!

காஷ்மீர் விவாதத்தில் இந்தியா பிரதமர் குறித்து விமர்சனம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து விவாதம் நடைபெற்றது. இது ‘காஷ்மீரில் மனித உரிமைகள்’ என்ற தலைப்பில் பேசப்பட்டது. இந்த தீர்மானமானது பிரிட்டன் நாடாளுமன்ற மக்களவையில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்து பேசியுள்ளது. அதாவது “இந்திய நாட்டின் உள்ள அனைத்துப் பகுதிகள் குறித்து எந்த இடத்தில் விவாதம் நடைபெற்றாலும் நம்பத்தகுந்த உண்மை தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

இறுதிச்சடங்கில் நடந்த திடீர் தாக்குதல்.. சவப்பெட்டியை போட்டுவிட்டு ஓடிய மக்கள்..!!

பிரிட்டனில் இறுதிச்சடங்கு நடந்தபோது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டதால், சவப்பெட்டியை போட்டுவிட்டு மக்கள் பதறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருக்கும் Paisley என்னும் நகரில் உள்ள லிண்வூட் பகுதியில் இருக்கும் ஒரு கல்லறையில் நேற்று முன்தினம் காலையில் 85 வயதுடைய, Teresa Ward என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இறுதிச்சடங்குகள் நடந்தது. அதன்பின்பு, உடலை அவரின் உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து சுமந்து செல்வதற்கு தயாராக இருந்த சமயத்தில், திடீரென்று மர்மநபர்கள் இறுதிச்சடங்கில் நுழைந்து கத்திக்குத்து தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

‘விரைவில் தீர்வு வேண்டும்’…. பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை…. வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர்….!!

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய அமைச்சர் பயண கட்டுப்பாட்டு விதி குறித்து பேசியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நாவின் 76 வது பொதுக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான  ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். அவர் அங்கு பிரிட்டன் அமைச்சர்  எலிசபெத்தை சந்தித்துப் பேசியுள்ளார். அந்த பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரான  ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “பிரிட்டனின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சரை நான் சந்திக்க சென்றேன். அவர் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது சேவையாற்றியதற்காக […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு அமைச்சக பணியாளர் செய்த சிறிய தவறு.. நூற்றுக்கணக்கான மக்களின் பரிதாப நிலை..!!

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பணியாளர், நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை மின்னஞ்சலில் நகல் எடுத்த சம்பவம் பெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. பிரிட்டன் நாட்டின் மொழிபெயர்ப்பாளரார்களாக பணியாற்றிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த 250 நபர்களுக்கு தலிபான்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற மோசமான நடவடிக்கையால், ஆத்திரம் அடைந்துள்ள பாதுகாப்பு செயலர், பென் வாலஸ் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் இராணுவத்திற்காக பணிபுரிந்த,  250 மொழிபெயர்ப்பாளர்கள்  ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற கோரியிருந்தார்கள். எனவே, அவர்களின், தகவல்களை, பாதுகாப்பு அமைச்சகம் கேட்டபோது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வடகொரியா..!!

அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாட்டிற்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அளிக்க ஒப்பந்தம் செய்திருப்பதற்கு வடகொரிய அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீன நாட்டை எதிர்ப்பதற்காக, ஆக்கஸ் என்னும் புதிய பாதுகாப்பு கூட்டமைப்பானது, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஆஸ்திரேலிய நாட்டின் படை பலத்தை அதிகரித்து,  அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்குவோம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை, வடகொரிய அரசு எதிர்த்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் உயிரிழந்து கிடந்த மனைவி மற்றும் குழந்தைகள்.. மனமுடைந்து கதறி அழுத தந்தை.. பரிதாப சம்பவம்..!!

இங்கிலாந்தில் ஒரு குடியிருப்பில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Derbyshire என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நான்கு பேர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, Terri Harris என்ற 35 வயதுடைய பெண், அவரின் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தையின் தோழி என்று நால்வர் உயிரிழந்து கிடந்துள்ளனர். இது தொடர்பில் ஒரு நபர் கைதாகியுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

கோபத்தில் பிரான்ஸ் அதிபர்.. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முடிவு..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனை சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் ஈடுபட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர், தங்கள் நாட்டுடனான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததால் கடும் கோபம் அடைந்துள்ளார். அதாவது, நீண்ட நாட்களாக தங்களுடன் நட்பு நாடாக இருந்த அமெரிக்காவும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கான தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றார். […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அரசு 3 நாடுகளை பழிவாங்கும்.. முன்னாள் தூதர் வெளியிட்ட தகவல்..!!

பிரான்ஸ் நாட்டுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர், ஆஸ்திரேலிய நாட்டுடன் நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் செய்ததற்காக பிரிட்டனை பிரான்ஸ் பழிவாங்கும் என்று கூறியிருக்கிறார். பிரான்ஸ், பிரெக்ஸிட் விவகாரத்தில் ஏற்கனவே பிரிட்டன் மீது அதிருப்தியில் இருக்கிறது. தற்போது மற்றொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய நாடு, பிரான்ஸ் அரசுடன் நீர்மூழ்கிக்கப்பல் உருவாக்க 90 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்வதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஒரு கடிதத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசகுடும்பம் பற்றி மோசமாக பேசிய பிரதமர் மனைவி.. வெளியாகவுள்ள கட்டுரை..!!

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி, அரச குடும்பத்தை பற்றி மோசமாக விமர்சித்தது குறித்து ஒரு கட்டுரை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமரின் மனைவி கேரி பற்றி ஒரு பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரை அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் வெளியிடப்படவுள்ளது. அதாவது, கேரி, ஒரு முறை அரச குடும்பத்தினர் பற்றி மோசமாக பேசியிருக்கிறார். எனவே, பத்திரிகையாளர் ஒருவர், பிரதமர் மனைவியின் தோழிகளை தொடர்புகொண்டு, உங்களிடம் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றி கேரி என்ன கூறினார்? என்று கேட்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“இளம்பெண்ணை வன்கொடுமை செய்த நபர்!”.. சிசிடிவி கேமராவில் பார்த்து அதிர்ந்த பாதுகாவலர்..!!

வேல்ஸ் நாட்டில் அரசு அலுவலகத்தில் பாதுகாவலராக இருக்கும் நபர் கண்காணிப்பு கேமராவில் ஒரு காட்சியை பார்த்து அதிர்ந்து போய்விட்டார். பிரிட்டனில் Turkey Al-Turkey என்ற 26 வயது இளைஞரும், பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவியும் டேட்டிங் சென்றுள்ளார்கள். அப்போது Turkey, அந்தப் பெண் அருந்திய குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து, சுய நினைவை இழக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சமயத்தில், அரசு அலுவலகத்தில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் அலுவலராக பணியாற்றிய Richard Arnold, கேமராவில் அதனை […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படலாம்!”.. பிரிட்டன் அரசு எச்சரிக்கை..!!

பிரிட்டன் அமைச்சர், பிற நாட்டிலிருந்து உருமாற்றம் அடைந்த கொரோனா பரவினால் மீண்டும் நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சுற்றுச்சூழல் செயலாளரான George Eustice தெரிவித்துள்ளதாவது, இன்று அமைச்சர்கள் ஆலோசனை செய்து பயண கட்டுப்பாடுகளை மாற்றுவது குறித்து, தீர்மானிப்பார்கள். இப்போது வரை நடைமுறையில் இருக்கும் கடும் கட்டுப்பாடுகள் தான் உருமாற்றம் அடைந்த தொற்றிலிருந்து நமக்கு அதிக பாதுகாப்பை அளித்திருக்கின்றன. போக்குவரத்து துறைக்கு இது மிகவும் கடினமான சூழலாக இருக்கிறது. நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். எனவே […]

Categories
உலக செய்திகள்

“சுவிட்சர்லாந்தில் புதிய கட்டுப்பாடு!”.. பிரிட்டன் சுற்றுலா பயணிகள் வருத்தம்..!!

சுவிட்சர்லாந்து அரசு, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா சான்றிதழ் பெற முடியாது என்று உறுதியாக தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் மக்கள், அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செலுத்தியிருப்பதால் சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொள்ள முடியாது என்று வருத்தமடைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் சுற்றுலாவிற்கான பிரதிநிதி தெரிவித்திருப்பதாவது, ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு நாடுகளை போன்று சுவிட்சர்லாந்திலும், வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியிலிருந்து உணவகங்கள் மற்றும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார். தற்போது, […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரிக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்து மழையில் நனையச் செய்த அரச குடும்பம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி இன்று 37-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மகாராணியார், இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். பிரிட்டன் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி பிறந்த அன்று, அரண்மனை எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் திளைத்ததோ, அந்த அளவிற்கு அவரின் திருமணத்தின் போதும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகு, இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. மேகன், விவாகரத்து பெற்ற அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

“உணவு விநியோகம் செய்பவராக நடித்து இளைஞர் செய்த வேலை!”.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனில் உணவு விற்பனை செய்பவராக நடித்து இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் மெட்ரோ காவல்துறையினர், தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். அதில், உணவு விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் பெயர் கொண்ட உடை அணிந்திருந்த இளைஞரை கைது செய்திருந்தனர். அதன் பின்பு அது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த சனிக்கிழமை அன்று லண்டனில் உள்ள Shoreditch என்ற தெருவில் 17 வயதுடைய இளைஞர் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் முடியாட்சி, முடிவுக்கு வருகிறதா..? குட்டி இளவரசருக்கு வாய்ப்பு இல்லை.. வெளியான தகவல்..!!

பிரிட்டனில் அடுத்து வரும் இரண்டு தலைமுறைகளுடன் முடியாட்சி முடியவுள்ளதால் குட்டி இளவரசரான ஜார்ஜ் மன்னராக வாய்ப்பு கிடையாது என்று பிரபல நாவலாசிரியர் கூறுகிறார். பிரிட்டன் நாட்டின் முடியாட்சி குறித்து பிரபல நாவலாசிரியரான ஹிலாரி மாண்டெல் கணித்திருபத்தாவது, பிரிட்டன் நாட்டினுடைய முடியாட்சியானது, தற்போது இருக்கும் சூழ்நிலையில், இளவரசர் சார்லஸ் மற்றும் வில்லியம் போன்றோருடன் முடிவு பெறும் என்று கூறுகிறார். குட்டி இளவரசரான 8 வயதுடைய ஜார்ஜ், மன்னராகப்போகும் வரிசையில் மூன்றாவதாக இருக்கிறார். எனினும் அவருக்கு அதற்கான வாய்ப்பு இருக்காது […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி கடவுசீட்டு திட்டத்திலிருந்து பின்வாங்கிய பிரிட்டன்!”.. சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தடுப்பூசி கடவுசீட்டு கட்டாயம் என்ற திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் 16 வயதுக்கு அதிகமான நபர்களில் 80%-க்கும் மேற்பட்டோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் அளிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து 12 லிருந்து 15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசியளிப்பது தொடர்பில் விரைவாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, குளிர்காலங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, இனிமேல் தடுப்பூசி பாஸ்போர்ட் கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, […]

Categories
உலக செய்திகள்

“மூக்குத்தி அணிந்து பள்ளிக்கு சென்ற சிறுமி!”.. பள்ளி நிர்வாகத்தின் தண்டனை.. தாயார் குற்றச்சாட்டு..!!

பிரிட்டனில் 11 வயது சிறுமி, பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து சென்றதால் அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள Leicester என்ற நகரில் வசிக்கும் கரீன் லுன், என்பவரின் மகளான 11 வயது சிறுமி மேக்கி, கடந்த மாதத்தில் குடும்பத்தினரோடு சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது, அங்கு சிறிதான மூக்குத்தி ஒன்றை குத்தியிருக்கிறார். அதன்பின்பு, பள்ளிக்குச் சென்ற சிறுமியை பள்ளி நிர்வாகம் தண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறுமியை பிற மாணவர்களுடன் உட்கார வைக்காமல் தனியாக வைத்துள்ளார்கள். மேலும், அவருக்கு கல்வி […]

Categories
உலக செய்திகள்

“பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!”.. உதவியாக இருந்த துணை தலைமை ஆசிரியை கைது..!!

பிரிட்டனில் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் துணை தலைமை ஆசிரியர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருக்கும் மான்செஸ்டர் நகரில் Tyldesley என்னும் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் சென்ட்ரல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து என்ற தொடக்கப்பள்ளியில், ஜூலி மோரிஸ் என்ற 44 வயது பெண் துணை தலைமை ஆசிரியயையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக இப்பள்ளியில் கணிதம் மற்றும் மதக்கல்வி ஆசிரியராக இருக்கிறார். இந்நிலையில், இந்தப் […]

Categories
உலக செய்திகள்

வாகனத்தில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்திய தாய்.. இரண்டு குழந்தைகள் பலி.. வெளியான புகைப்படம்..!!

பிரிட்டனில் குழந்தைகள் இருவரை விபத்தில் கொன்ற தாய், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விமானநிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Derby-என்ற பகுதியில் வசிக்கும் Mary McCann (35) என்ற பெண் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி அன்று வாகனத்தில் சென்ற போது, Milton Keynes அருகில் உள்ள சாலையில், Scania HGV லாரியின் மேல் வாகனம் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் அந்த லாரி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…. பலியான சிறுவன்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் சிறுவனை தாக்கிவிட்டு சென்றுள்ள சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்டர் பகுதியில் ஓல்ட் டிராஃபோர்ட் என்னும் இடத்தில் நார்டன் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் நேற்று மாலை 6 மணியளவில் இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் 16 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ளான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் காரை ஓட்டிய நபர்… காவல்துறையினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரிட்டனில் நபர் ஒருவர் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள டட்டஸ்டன் என்ற நகரில் ஆரோன் ஓ ஹல்லோரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டட்டஸ்டன் நகர ரயில் நிலையத்திற்குள் தனது மிட்சுபிஷி காருடன் சென்றுள்ளார். மேலும் சுமார் அரை மைல் தூரத்துக்கு காரை ஆஸ்டன் பகுதியை நோக்கி தண்டவாளத்தில் இறக்கியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் தண்டவாளத்தின் ஓரமாக காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் […]

Categories

Tech |