Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் தேர்தல்…. வெளியான கருத்து கணிப்பு…. ரிஷி சுனக் பின்னடைவா?..

பிரிட்டன் நாட்டின் பிரதமர் தேர்தலுக்குரிய கருத்துக்கணிப்பு வெளியான நிலையில் ரிஷி சுனக் பின்னடைவை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது. பிரதமர் போட்டியில் பல கட்ட சுற்றுகளுக்கு பிறகு கடைசி வேட்பாளராக 8 நபர்களில், நிதி அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக், வெளியுறவு துறை மந்திரியாக இருக்கும் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கன்சர்வேட்டிவ் கட்சியை […]

Categories
உலக செய்திகள்

மாமனாரை நினைத்து பெருமைப்படுகிறேன்… மனம் திறந்த ரிஷி சுனக்…!!!

பிரிட்டனில் பிரதமர் பதவிக்குரிய போட்டியில் முன்னிலையில் இருக்கும் ரிஷி சுனக் தன் மாமனார் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். பிரிட்டனில் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணி நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் தன் மாமனார் நாராயண மூர்த்தி பற்றி கூறியுள்ளார். “I’m incredibly proud of what my parents-in-law built” […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் வேட்பாளர்களை அழைத்த ஜெலன்ஸ்கி… என்ன திட்டம்?…. வெளியான தகவல்…!!!

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள பிரிட்டன் நாட்டின் பிரதமராகக்கூடிய போட்டியில்  இருக்கக்கூடிய இரண்டு பேரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைத்திருக்கிறார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரில் போரிஸ் ஜான்சன் நன்றாக ஆதரவு தெரிவித்து வந்தார். அதேபோன்று அந்நாட்டின் பிரதமராக போகும் நபரும் இருப்பாரா? என்பதை தெரிந்து கொள்வதற்காக அதிபர் ஜெலன்ஸ்கி ஆவலுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரிட்டன் பிரதமராகும் போட்டியில் இருக்கும் இரண்டு பேரை தங்கள் நாட்டிற்கு அழைத்திருக்கிறார். அதன் பிறகு, ரஷ்யா பற்றி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் நடக்கும் பிரதமர் தேர்வு…. கன்சர்வேட்டிவ் கட்சியில் முதலிடம் யாருக்கு?… வெளியான தகவல்…!!!

பிரிட்டனில் அடுத்த பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி எப்படி தேர்வு செய்ய உள்ளது மற்றும் ஆதரவு யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய தலைவராக இருக்கும் போரிஸ் ஜான்சனை பிரதமர் பதவியில் இருந்து விலக செய்ய அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அவர் பதவி விலகினார். தற்போது, அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அதன்படி, முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் உட்பட ஒன்பதுக்கும் அதிகமானவர்கள் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

104 வருடங்களாக ஒரே வீட்டில் வாழும் பெண்மணி… சுவாரஸ்ய வரலாறு…!!!

பிரிட்டனை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் சுமார் 104 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். பிரிட்டனை சேர்ந்த எல்சி ஆல்காக் என்ற 104 வயதான பெண் தான் பிறந்த குடியிருப்பில் தான் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். அதாவது கடந்த 1918 ஆம் வருடத்தில் அந்த பெண் பிறந்து இருக்கிறார். தற்போது வரை நான்கு மன்னர்கள், மகாராணி, 25 பிரதமர்கள் மற்றும் இரண்டு உலகப் போர்களை சந்தித்திருக்கிறார். இவரின் வீடு ஹுத்வைட் என்ற நகரில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர்…. பதவி விலகுவாரா?… வெளியான தகவல்…!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பதவி விலகப் போவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணியிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார். அப்போது தான் பதவி விலகப் போவதாக கூறியிருக்கிறார். அவர் வரும் அக்டோபர் மாதம் வரை பிரதமர் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன் பின்பு புதிய பிரதமரிடம்  பொறுப்புகளை கொடுத்து விட்டு பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறி விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், போரிஸ் ஜான்சனின் […]

Categories
உலக செய்திகள்

பதவியை ராஜினாமா செய்த 44 எம்.பி.க்கள்…. பதவி விலக மறுக்கும் போரிஸ் ஜான்சன்…!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று அமைச்சரவையே கொந்தளித்தும் அவர் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று உறுதியாக மறுத்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் மீது ஊழல் புகார்கள் எழுந்தது. மேலும், நாட்டின் சுகாதார செயலர் மற்றும் நிதி அமைச்சர் இருவரும் போரிஸ் ஜான்சனின் ஆட்சியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, நேற்று முன்தினம் பதவி விலகினார்கள். அதன் பிறகு, நேற்று சுமார் 44 எம்பிக்கள் மொத்தமாக தங்கள் பதவிகளை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்…. பிரிட்டன் அரசின் அதிரடி தீர்மானம்…!!!

பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை முடக்கியிருந்த நிலையில், அதனை உக்ரைனிற்கு அளிப்பது குறித்து ஆலோசனை செய்து  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 131 ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச விதிமுறைகளை மீறிய ரஷ்ய நாட்டிற்கு பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. #London is considering the possibility of confiscating frozen #Russian assets […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயங்கரம்… 17 மாடி குடியிருப்பில் கோரத் தீ விபத்து… வெளியான வீடியோ…!!!

பிரிட்டனில் இருக்கும் 17 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடத்தில் கோரத் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனின் ப்ரோம்லி நகரின் செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் 17 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. அந்த கட்டிடத்தின் 15 ஆம் தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்து, மளமளவென வேகமாக பரவ தொடங்கியது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. https://twitter.com/PHeiselOBE/status/1543562080887898112 மேலும், அந்த குடியிருப்பின் கூரை பகுதியிலிருந்து கருமையான புகைகள் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தற்போது, தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை […]

Categories
உலக செய்திகள்

கடலில் குளிக்கும்போது சிறுநீர் கழிக்காதீர்கள்…. சுற்றுலா பயணிகளை அவமதிக்கும் கட்டுப்பாடுகள்…!!!

ஸ்பெயின் அரசு பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்காக விதித்த கட்டுப்பாடுகள் அவர்களை அவமதிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசு, கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் அங்கேயே சிறுநீர் கழித்து விடக்கூடாது. இந்த விதியை மீறினால் 750 யூரோக்கள் அபராதம் என்று தெரிவித்திருக்கிறது. மேலும், பிரிட்டன் சுற்றுலா பயணிகள் அநாகரிகமான முறையில் ஆடைகளை அணிந்து வீதிகளில் நடந்து செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீச்சல் உடையை அணிந்து கொண்டு கடலில் குளித்துவிட்டு கடற்கரையிலிருந்து வெளியேறும் போது, நாகரீகமான ஆடைகளை […]

Categories
உலக செய்திகள்

லண்டன் ஓவியக்கண்காட்சியில்…. மறைந்த இளவரசி டயானாவின் அரிய ஓவியம்….!!!

பிரிட்டனில் மறைந்த இளவரசி டயானாவின் அரிதான ஒரு ஓவியம் லண்டனில் முதல் தடவையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் அரிதான ஒரு ஓவியத்தை அமெரிக்காவை சேர்ந்த நெல்சன் சாங்க்ஸ் என்ற பிரபலமான ஓவியக் கலைஞர் வரைந்திருக்கிறார். சமீபத்தில் இந்த ஓவியத்தை சுமார் 2,01,600 டாலர்களுக்கு ஏலத்தில் விட்டுள்ளனர். தற்போது, லண்டனில் இருக்கும் ஓவியக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தை மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். இம்மாதம் 6-ஆம் தேதி வரை அந்த ஓவியம் அங்கு பார்வைக்காக வைக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் குரங்கம்மை பாதிப்பு…. விழிப்புணர்வுடன் இருங்கள்…. பிரிட்டன் அரசு எச்சரிக்கை…!!!

பிரிட்டன் நாட்டின் சுகாதார துறை அதிகாரிகள் குரங்கு அம்மை நோயில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்று தங்கள் மக்களை அறிவுறுத்தி இருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனமானது, குரங்கம்மை நோய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, குரங்கு அம்மை நோய் தொற்று அதிக அளவில் இருக்கிறது. இந்த நோய் ஓரின சேர்க்கையாளர்களில் ஆண்களுக்கு தான் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. தற்போதுவரை ஓரினச் சேர்க்கையாளர்களான ஆண்கள் தான் 96% பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதில் 37 வயது கொண்ட […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் ஒரே வருடத்தில் 2 லட்சம் கருக்கலைப்புகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

பிரிட்டன் மற்றும் வேல்ஸில் கடந்த வருடத்தில் அதிகமான கருக்கலைப்புகள் நடந்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. சுகாதார மேம்பாட்டு துறை அலுவலகமானது கடந்த வருடத்தில் கருக்கலைப்புகள் செய்யப்பட்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த வருடத்தில் ஏறக்குறைய 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் வைத்து கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காலகட்டத்தில் அஞ்சல் வழியில் மாத்திரைகளை வாங்கி மருத்துவர்களை நேரடியாக சந்திக்காமல் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

“30 வருடங்களாக இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஸ்ட்ரைக்”… லட்சக்கணக்கான பயணிகள் சிரமம்….!!!!!!!

பிரிட்டனில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் 40,000 ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் ரயில் சேவை மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, பொருளாதார சரிவு, ரஷ்யா உக்ரைன் போர் என பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரமே இன்று ஆட்டம் கண்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பண வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 30 அல்லது 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமருக்கு…. வெற்றிகரமாக நடந்த சைனஸ் அறுவை சிகிச்சை…. நலமுடன் இருப்பதாக தகவல்….!!

பிரிட்டன் அதிபருக்கு வெற்றிகரமாக சைனஸ் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் பிரதமராக  போரிஸ் ஜான்சன் இருக்கிறார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவருக்கு தற்போது சைனஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் அதிபரின் பணிகளை துணை பிரதமராக இருக்கும் டோமினிக் ராப் கவனித்துக் கொண்டார். மேலும் போரிஸ் ஜான்சன் காமன்வெல்த் […]

Categories
உலக செய்திகள்

3-ஆம் உலக போர் உண்டானால் பிரிட்டன் காணாமல் போகும்…. ரஷ்ய முன்னாள் இராணுவ ஜெனரல் எச்சரிக்கை…!!!

மூன்றாம் உலகப் போர் உண்டாகும் பட்சத்தில் பிரிட்டன் நாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் என்பது உறுதி என்று ரஷ்ய நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல் எச்சரித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டில் புதிய ராணுவ தலைமைத் தளபதியான சர் பேட்ரிக் சாண்டர்ஸ் மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் ரஷ்ய நாட்டை வெல்ல வேண்டும் என்று தங்கள் படை வீரர்களிடம் கூறியிருக்கிறார். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆதரவாளரான முன்னாள் ராணுவ தளபதி ஈவ்ஜெனி மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் […]

Categories
உலக செய்திகள்

காவலரின் அந்தரங்க உறுப்பை கேலி செய்த அதிகாரி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

காவல்துறை அதிகாரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் நாட்டில் உள்ள டிவைன் காவல்நிலையத்தில் ரீட்ஸ் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த காவல்நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக ஒரு இளைஞர் காவலாராக பணியில் சேர்ந்துள்ளார். அந்த வாலிபரை ரீட்ஸ்  தன்னை விட வயதில் சிறியவர் என்பதாலும், தன்னை விட அனுபவம் குறைந்தவர் என்பதாலும் அடிக்கடி கேலி செய்துள்ளார். அப்போது ரீட்ஸ் வாலிபரின் பேண்ட்டுக்கு உள்ளே கையை வைத்து அவரின் அந்தரங்க உறுப்பு சிறியதாக […]

Categories
உலக செய்திகள்

“அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்”…. பிரிட்டனில் 500 தாண்டிய குரங்கு அம்மை பாதிப்பு…!!!!!!!

இங்கிலாந்தில் 504 பேருக்கும், ஸ்காட்லாந்தில் 13 பேருக்கும், வடக்கு அயர்லாந்தில் இரண்டு பேருக்கும், வேல்ஸில் 5 பேருக்கும் குரங்கு அம்மைக் காய்ச்சல் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது என யூகே சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. குரங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் காயங்கள் முழுமையாக காயும் வரை மற்றவர்களுடன்  நெருக்கமாக பழகுவது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த ஆபத்து சிறியதாகத் தோன்றினாலும் இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு பொது சுகாதார […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில்… ஹாரி-மேகன் தம்பதியின் சிலை…!!!

பிரிட்டன் இளவரச தம்பதியான ஹாரி-மேகனின் சிலைகள், மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் தன் 96-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் தன் 25 வயதில் நாட்டின் அரியணையில் அமர்ந்தார். அதைத் தொடர்ந்து தற்போது வரை சுமார் 70 வருடங்களாக ஆட்சி செய்து வருகிறார். இதனை கொண்டாடக் கூடிய வகையில் அடுத்த மாதம் 2-ம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் […]

Categories
உலக செய்திகள்

60 வருடங்களில் முதல் தடவை… பிரிட்டன் மகாராணியின்றி நடந்த நாடாளுமன்ற விழா…!!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், கடந்த 60 வருடங்களில் முதல் தடவையாக வயது முதிர்வு காரணமாக நாடாளுமன்ற விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 70 வருடங்கள் நிறைவடையவிருக்கிறது. இதனை பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா பாதிப்பிற்கு பின் அவரின் உடல் நலம் அதிகம் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 60 வருடங்களில் முதல் […]

Categories
உலகசெய்திகள் பல்சுவை

“இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் அதிசய பெண்”….. ஒவ்வொரு நொடியும் போராட்டம் தான்….!!!!

பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் இதயம் செயல் இழந்து விட்டதால் செயற்கை இதயத்தை பெட்டியில் சுமந்தவாறு உயிர் வாழ்வது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழிகளை இயற்கை அமைத்துக் கொடுக்கின்றது. பலர் தங்கள் வாழ்க்கையில் துன்பங்களை மட்டும் பெரிதாக எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். ஆனால் தற்கொலை இறுதியான தீர்வு அல்ல […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் சிறுமியை அனுமதிக்க மறுத்த பிரிட்டன் அரசு…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

பிரிட்டன் அரசு, உக்ரைனிலிருந்து உறவினருடன் வந்த சிறுமியிடம் ஆவணங்கள் இருந்தும் தங்கள் நாட்டில் தஞ்சமடைய அனுமதி மறுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து சுமார் 5.2 மில்லியன் மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரிட்டன் அரசு தங்கள் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்களின் உறவினர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தது. எனவே, அதிகப்படியான உக்ரைன் மக்கள் பிரிட்டனில் தஞ்சமடைய தொடங்கினார்கள். அதன்படி, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 9 வயது […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியரின் 96-ஆவது பிறந்தநாளில்…. ஹாரி என்ன செய்திருக்கிறார்?.. வெளியான புகைப்படம்…!!!

பிரிட்டன் மகாராணியாரின் பிறந்தநாளில் அரச குடும்பமே அவருடன் இருந்த போது இளவரசர்  ஹாரி நண்பர்களுடன் மதுபான விடுதியில் இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.  பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறிய நிலையில் சமீபத்தில் தன் பாட்டி, பிரிட்டன் மகாராணியை சந்தித்திருக்கிறார். அதன்பிறகு அவர் தெரிவித்ததாவது, மகாராணியார் பாதுகாப்புடன் உள்ளாரா என்று தெரிந்து கொள்வதற்காக பிரிட்டன் வந்தேன் என்று கூறினார். அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது மகாராணியாரின் அருகில் அவரின் மகன் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தந்தை-மகனின் புதையல் வேட்டை…. நேர்மைக்கு கிடைத்த பரிசு… பிரிட்டனில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பிரிட்டனை சேர்ந்த தந்தை மற்றும் மகனுக்கு கிடைத்த புதையல் பெட்டியை உரியவரிடம் ஒப்படைத்ததால், அவர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்திருக்கிறது. பிரிட்டனிலுள்ள Nottinghamshire என்ற பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்ற 15 வயது சிறுவன் தன் தந்தையுடன் Lincolnshire என்ற பகுதியிலிருக்கும் Witham என்னும் நதியில் காந்தம் மூலம் புதையல் தேடும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர்களுக்கு பழமையான பணப்பெட்டி கிடைத்திருக்கிறது.   அவர்கள், பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார்கள். அதனுள் 2500 ஆஸ்திரேலிய டாலர்கள் இருந்திருக்கிறது. மேலும், அந்த […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தினருடன் 96வது பிறந்த நாளை கொண்டாடிய பிரிட்டன் இளவரசி…. கோலாகலமாக நடைபெற்ற விழா….!!!!

பிரிட்டனில் 1952ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட காலமாக பிரிட்டனின் அரசியாக இருக்கிறார் எலிசபெத் ராணி. இந்த நிலையில் நேற்று சான்டிர்ங்ஹாம் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் எலிசபெத் ராணி தனது 96 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கிடையில் இணையதளங்களில் இரண்டு குதிரை குட்டிகளுடன் எலிசபெத் ராணி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் ராணியின் பிறந்த நாளுக்கு வின்டஸர் மாளிகையில் அரசியின் மெய்க் காவலர்கள் பேண்ட் வாத்தியம் வாசித்தும், பிரிட்டன் ராணுவத்தின் மன்னர் பிரிவு வீரர்கள் லண்டன் ஹைட் […]

Categories
உலக செய்திகள்

“100 வான் பாதுகாப்பு அமைப்புகள்” …. உக்ரைனுக்கு அனுப்புவதாக நார்வே அறிவிப்பு…!!!!!

உக்ரைனுக்கு 100 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக நார்வே அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு மாதங்களை எட்ட  இருக்கின்ற நிலையில் நார்வே அரசு உக்ரைனுக்கு ஏற்கனவே பல்வேறு ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் தயாரிப்பான மிஸ்ட்ரல் ரக  குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளை வழங்கி இருப்பதாகவும், உக்ரைனுக்கு  அது  பெரும் பயனளிக்கும் எனவும் நார்வே பாதுகாப்பு துறை அமைச்சர் போஜோன் அர்லிட் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே நான்காயிரம் பீரங்கி எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

விசாரணைக்காக இவர நாடு கடத்த போறாங்க…. பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு…!!!!!!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை  விசாரணைக்காக அமெரிக்காவிற்கு நாடுகடத்தபிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலமாக 2010-ஆம் ஆண்டு ஈராக், அமெரிக்க போர்கள்  பற்றி  அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் 2012 ஆம் ஆண்டு ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். அதன்பின் தொடர்ந்து ரகசியங்களை வெளியிட்டு இருப்பதால் அடைக்கலம் தர ஈக்வடார்  தூதரகம் மறுத்துள்ளது. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி எது தொடர்பாக….!! பிரிட்டன் பிரதமரின் பதவிக்கு ஆபத்து…???

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கடுமையான கொரோனா காலகட்டத்தில் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அப்போது இங்கிலாந்து நாட்டிலும் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி கேரி அமைச்சரவைக்கு ஒரு கேக் கொண்டு வந்திருந்தார். அதனை வெட்டி போரிஸ் ஜான்சன் அவருடைய பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரி மகாராணியாருடன் ரகசிய சந்திப்பு…. என்ன பேசினார்கள்…? வெளியான தகவல்…!!!

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடியேறிய இளவரசர் ஹாரி கடந்த வாரம் மகாராணியாரை இரகசியமாக சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் இளவரசர் ஹாரி கடந்த 2014ம் வருடத்தில் போரில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு Invictus Games என்ற ராணுவ போட்டிகளை உருவாக்கியிருக்கிறார். இந்த வருடத்தில் நெதர்லாந்து நாட்டில் இந்த விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நெதர்லாந்து நாட்டிற்கு செல்லும் வழியில் பிரிட்டன் நாட்டின் மகாராணியான தன் பாட்டியை இளவரசர் ஹாரி சந்தித்திருக்கிறார். மகாராணியை […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து அதிபருக்கு கோரிக்கை விடுத்த ரஷ்ய சார்ப்பாளர் மனைவி….!! எண்ணம் நிறைவேறுமா…??

உக்ரைன் ரஷ்யா போரினை தொடர்ந்து உக்ரைனைச் சேர்ந்த ரஷ்ய சார்பு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கியின் மனைவி மார்ச்சென்கோ பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு யூ டியூப் வழியாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிகும் உங்களுக்கும் உள்ள நட்புறவை பயன்படுத்தி ரஷ்ய ராணுவத்திடம் அகப்பட்டுள்ள பிரித்தானிய வீரருக்கு மாறாக எனது கணவர் மெட்வெட்சுக்கை பரிமாறிக்கொள்ள நீங்கள் உதவவேண்டும் எனக் கூறிள்ளார். அதோடு உங்கள் குடிமக்களின் மீது உங்களுக்கு உள்ள அக்கறை வெளிப்படுத்த இது […]

Categories
உலக செய்திகள்

2 நாள் பயணம்…. இந்தியாவிற்க்கு வரும் இங்கிலாந்து பிரதமர்… வர்த்தகர்களுடன் சந்திப்பு….!!!!!

இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர்  போரிஸ் ஜான்சன் வருகின்ற  21ம் தேதி இந்தியா வருகிறார். மேலும் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இந்தோ-பசிபிக் கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி  பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுபற்றி டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘வரும் 21ம் தேதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா செல்கிறார். அவர் அன்றைய தினம் அகமதாபாத்தில் நடக்கும் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். மேலும் இங்கிலாந்து பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிராக…. உக்ரைனில் களமிறக்கப்பட்ட பிரிட்டன் சிறப்புப்படைகள்…!!!

ரஷ்ய நாட்டின் ஊடகங்கள் உலகப்போர் தொடங்கியதாக அறிவித்திருக்கும் நிலையில் பிரிட்டனை சேர்ந்த சிறப்புப்படைகள் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு முதல் தடவையாக பிரிட்டனின் சிறப்புப் படைகள் பயிற்சிகள் அளிப்பதற்கு முன்வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சிகளை பிரிட்டன் சிறப்புப் படைகள் வழங்க இருக்கிறது. மேலும் பிரிட்டன் நாட்டினுடைய சிறப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் உட்பட 13 பேருக்கு பயணத்தடை… ரஷ்யா அதிரடி அறிவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டின் பிரதமரான போரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் போன்ற 13  நபர்களுக்கு ரஷ்யா பயணத் தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து ரஷ்யா, போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் வர பயணத்தடை விதித்தது. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சத்தின் அறிக்கையில், உக்ரைன் பிரச்சினையில் தற்போது வரை இல்லாத வகையில் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த 13 அரசியல் தலைவர்களுக்கு தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசுமுறைப் பயணம்… இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்…. வெளியான அறிவிப்பு…!!!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக 21மற்றும் 22ம் தேதி  இந்தியா வர இருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டில் இரு முறை பிரிட்டன்  பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த இரு முறையும் கொரோனா  காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதேபோல் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க  போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். ஆனால் பிரிட்டன் நாட்டில் பரவிய கொரோனா  […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டிற்கு எதிராக…. எஸ்டோனியாவில் 1600 பிரிட்டன் வீரர்கள் குவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டிலிருந்து ராணுவ வீரர்கள் சுமார் 1600 பேர் தற்போது எஸ்டோனியாவிற்கு  சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 1600 இராணுவ வீரர்கள், நேட்டோ நடவடிக்கைக்காக எஸ்டோனியா என்ற ஐரோப்பிய நாட்டின் எல்லை பகுதியிலிருந்து சுமார் 70 மைல் தூரத்தில் இருக்கும் தாபா இராணுவ தளத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ரசாயன குண்டுகளை வீசினாலோ அல்லது எஸ்டோனியா மீது படையெடுதாலோ, உடனே பதிலடி கொடுப்பதற்காக அவர்கள் களமிறங்கியுள்ளனர். நேட்டோ போர்க் குழுவின் தலைமை தாங்கும் லெப்டினன்ட் […]

Categories
தேசிய செய்திகள்

புது வகை கொரோனா வைரஸ்… தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை….வெளியான ஆலோசனை…!!!

மாறுபட்ட எக்ஸ்இ வகை கொரோனா நிலவரம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில், கடந்த ஜனவரி மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததையடுத்து, இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா 3-வது அலைக்கு ஒமைக்ரான் தொற்று முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் அனைத்து கொரோனா […]

Categories
உலக செய்திகள்

இதனை செய்யாவிடில் ஈஸ்டரில் நெருக்கடி தான்…. எச்சரிக்கும் NHS தலைவர்கள்…!!!

பிரிட்டன் அரசாங்கம் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை எனில் ஈஸ்டர் இந்த தடவை கடுமையானதாக இருக்கும் என்று NHS தலைவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் NHS தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள். மக்கள் அதிகம் கூடியிருக்கும் பகுதிகளில் கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும். பலர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடும் தனிப்பட்ட விருந்து கேளிக்கைகள் தடுக்கப்படவேண்டும். கொரோனா விதிமுறைகளை பிரிட்டன் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அப்படி கட்டுப்பாடுகளை […]

Categories
உலக செய்திகள்

பிரதமராகும் வாய்ப்பு பறிபோனால்… பிரிட்டன் சேன்ஸலர் நாட்டிலிருந்து வெளியேறலாம்… வெளியான தகவல்…!!!

பிரிட்டன் நாட்டின் பிரதமராக போகும் வாய்ப்பை இழந்தால் சேன்ஸலர் ரிஷி சுனக் நாட்டிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் சேன்ஸலரான ரிஷி சுனக், அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்று விடுவார் என்று அவரின் நண்பர் கூறியிருக்கிறார். அவருக்கு கலிபோர்னியா மாகாணத்தில்  Santa Monica என்ற பகுதியில் 5.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடு இருக்கிறது. ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டில் பிரதமராவதற்கு உண்டான முயற்சிகளில் தோல்வியை சந்தித்தால் நாட்டிலிருந்து வெளியேறி Silicon Valley-ல் […]

Categories
உலகசெய்திகள்

ஒரு வருஷம் ஆயிற்று… பிரபல நாட்டு இளவரசன் முதலாம் ஆண்டு நினைவு தினம்… நேற்று அனுசரிப்பு….!!!!!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று  அனுசரிக்கப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி உடல்நலக்குறைவால்  உயிரிழந்தார்.  கடுமையான கொரோனா  பரவலின் காரணமாக அவரது இறுதி சடங்கிற்க்கு  30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று  அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது.

Categories
உலக செய்திகள்

9 வருடங்களாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 23 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்…!!!

பிரிட்டனில் சிறுமிகளை தனி வீட்டில் வைத்து 9 வருடங்களாக வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனிலுள்ள Nottinghamshire என்ற பகுதியில் வசிக்கும் மேத்யூ இலிஸ் என்னும் 35 வயது நபர் சிறுமிகளை ஒரு வீட்டில் அடைத்து வைத்து 9 வருடங்களுக்கும் அதிகமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். மேலும் இதை யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இது மட்டுமல்லாமல் இங்கு நடப்பது இரகசியமான விளையாட்டு என்று கூறி சிறுமிகளை ஏமாற்றியுள்ளார். எனினும் கடந்த 2019 -ஆம் […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் போட்டிகளில் திருநங்கைகளுக்கு அனுமதி இல்லை…. -பிரிட்டன் பிரதமர்…!!!!

பிரிட்டனில் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் கலந்து கொள்ளக் கூடாது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார். பிரிட்டனில் நேற்று பிரதமர் போரிஸ் ஜான்சன் உலகம் முழுக்க உள்ள LGBT-களது உரிமைகளை முன்னேற்ற திட்டமிடப்பட்டிருந்த முதன்மை மாநாட்டை கைவிடப் போவதாக கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து உயிரியல் ஆண்கள், பெண்கள் விளையாடும் போட்டிகளில் திருநங்கைகள் கலந்து கொள்வதை நான் சரி என்று நினைக்கவில்லை. இது சர்ச்சையான விஷயமாக இருக்கும். இந்த நடைமுறை எனக்கு வித்தியாசமாக தெரிகிறது என்று கூறியிருக்கிறார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்ற போது நேர்ந்த பரிதாபம்…. பாறைச் சரிவில் சிக்கி பலியான தந்தை, மகன்…!!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற போது, தந்தை மற்றும் மகன் பாறைச்சரிவில் மாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது, ப்ளூ மவுண்டன்ஸ் தேசிய பூங்காவில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரும் அவரின் 9 வயது மகனும் பாறைச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதே […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி விற்பனை….!!! தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்…!!!

பிரிட்டனில் கடந்த 1982ஆம் ஆண்டு ‘சேனல் 4’ என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. மக்களை மகிழ்விக்கும் விதமான நிகழ்ச்சிகளை அரசு சார்பில் வழங்குவதற்காக பிரிட்டன் அரசாங்கம் இந்த தொலைக்காட்சியை தொடங்கியது. விளம்பர வருவாய் மற்றும் மக்களின் வரிப்பணம் போன்றவற்றைக் கொண்டு இந்த சேனல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த சேனலை விற்பனை செய்ய உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இதற்கு தொலைக்காட்சி ஊழியர்களும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரிட்டன் அரசோ, நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற […]

Categories
உலக செய்திகள்

இலங்கை செல்லும் மக்கள் கவனமாக இருங்கள்… கனடா அரசு அறிவுறுத்தல்…!!!

நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் தங்கள் குடிமக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்குமாறு எச்சரித்திருக்கின்றன. கனடா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் சமீபத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உள்ளூர் அதிகாரிகள் வாரன்ட் இன்றி பொது மக்களை கைது செய்ய கூடிய அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள். இதனால், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ஆரம்பித்த பேரணி அமைதியாக சென்ற நிலையில், அந்நாட்டின் ராணுவம் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க முயன்றதால் வன்முறை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனிலிருந்து மாயமான விமானம்…. தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் பணி…!!!

பிரிட்டனிலிருந்து புறப்பட்ட ஒரு விமானம் மாயமான நிலையில் மீட்பு குழுவினர் ஆங்கில கால்வாயில் தேடிவருகிறார்கள். இங்கிலாந்து நாட்டின் வார்விக்ஷயரில் இருக்கும் வெல்லஸ்போர்னிலிருந்து இரண்டு நபர்களுடன் P-28 என்ற விமானம் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் பிரான்ஸ் நாட்டின் Le Touquet என்ற பகுதியை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்நிலையில், அந்த விமானம் திடீரென்று மாயமானது. எனவே அந்த விமானத்தை தேடக்கூடிய பணி மதியம் முழுக்க நடந்ததாக பிரெஞ்சு கடலோர காவல் படை தெரிவித்திருக்கிறது. எனினும், தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டபின்…. மகாராணி நேரில் சந்தித்த இரண்டாவது தலைவர்…!!!

பிரிட்டன் மகாராணியார் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த பின் கனடாவின் புதிய கவர்னர் ஜெனரலான Mary Simon-ஐ நேரில் சந்தித்திருக்கிறார். பிரிட்டன் மகாராணி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பின்பு காணொலிக் காட்சி மூலமாகத் தான் சந்திப்புகளை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற காமன்வெல்த் நினைவு ஆராதனையிலும் அவர் நேரடியாக கலந்து கொள்ளாமல், காணொளிக்காட்சியில் தான் கலந்துகொண்டார். இந்நிலையில், வின்ஸ்டர் மாளிகையில் இருக்கும் Oak Room என்ற பிரபல அறையில், கனடாவில் புதிய கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு இந்த சலுகை உண்டு…. பிரிட்டன் அரசின் அதிரடி அறிவிப்பு…. யாருக்கு தெரியுமா …?

பிரிட்டன் அரசு, உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு மாதம் 3,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பால் ஏராளமான உக்ரைன்  மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில ஹோம்ஸ் பார் உக்ரைன் எனும் திட்டத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அகதிகளாக வருவோருக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் தங்க இடம் அளிப்பவர்களுக்கு மாதம் நிதி உதவி 3,500 வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த இக்கட்டான நிலையில் உக்ரைனுக்கு பிரிட்டன் துணை நிற்கும் என்றும் முடிந்தவரை விரைவாக பலருக்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்…. எச்சரிக்கும் பிரபலநாடு….!!!

பிரிட்டன் அரசு அந்நாட்டு மக்கள்  யாரும் ரஷ்யாவிற்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்கிரன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நாட்டை காப்பாற்ற முனைப்பில் உள்ள உக்ரைன் படைகளை  முன்னேற விடாமல் ரஷ்யா   தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

“இனிமே ஜாலி தா!”…. பிரிட்டனில் குறைந்த பலி எண்ணிக்கை…. கட்டுப்பாடுகளை விலக்க முடிவு…!!!

பிரிட்டன் நாட்டில் கொரோனாவிற்கு எதிராக கடந்த 2020-ஆம் வருடம் மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிகமான சட்டங்கள், அடுத்த மாதம் விலக்கி கொள்ளப்படுகிறது என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, கொரோனாவை தடுப்பது என்பது அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில் இருக்கும் நடவடிக்கைகள் என்பதை தனி நபரின் பொறுப்பு என்று மாற்றக்கூடிய என் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்காலிகமான சட்டங்கள் விலக்கப்படுகிறது. இதனால், நம் சுதந்திரம் பறிபோகாமல் நம்மால் பாதுகாக்க முடியும். இந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…!!”புதிய வகை கொரோனா “… அடுத்த ஆபத்து… மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?….!!

தமிழகத்தில் தொற்று பரவும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா  தாக்கம் குறைந்ததன் காரணமாக கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றன. மேலும் இரவு நேர ஊரடங்குகளும்  ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் 21 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசார […]

Categories

Tech |