Categories
உலக செய்திகள்

கல்லூரிக்குள் நுழைந்து துப்பாக்கியால் தாக்குதல்.. ஒரே ஆளாக நின்று போராடிய ஆசிரியர்.. குவியும் பாராட்டுக்கள்..!!

பிரிட்டனில் உள்ள கல்லூரி ஒன்றில் நுழைந்த 18 வயது இளைஞர் திடீரென்று துப்பாக்கி மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டன் சசெக்ஸியில் கிராலி என்ற கல்லூரி மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி அன்று மதியம் 3 மணியளவில் ஒரு இளைஞர் துப்பாக்கியும் கத்தியுமாக நுழைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் திடீரென்று சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதனால் மைதானத்தில் இருந்த அனைத்து மாணவர்களும் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இந்நிலையில் ஒரு ஆசிரியர் அந்த இளைஞரை […]

Categories
உலக செய்திகள்

பீட்சா கடைக்கு வெளியில் கத்தியால் தாக்கப்பட்ட சிறுவன் பலி.. வெளியான புகைப்படம்..!!

பிரிட்டனில் கத்தியால் தாக்கப்பட்டு உயிழந்த சிறுவன் குறித்த புகைப்படம் மற்றும் தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டன் தலைநகர் லண்டனில் canning என்ற நகரில் உள்ள Zzetta Pizzas என்ற கடைக்கு வெளியில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் 14 வயதுடைய ஒரு சிறுவன் கத்தியால் தாக்கப்பட்டார்.  அதன்பின்பு தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் […]

Categories
உலக செய்திகள்

மேகன் இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.. ஓபரா வின்ஃப்ரே பல்டி..!!

பிரிட்டனில் ஓபரா வின்ஃப்ரேவுடன் ஹரி-மேகன் நேர்காணலில் இவ்வளவு வெளிப்படையாக மேகன் ரகசியங்களை கூறுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று ஓபரா கூறியுள்ளார்.  பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓபரா வின்ஃப்ரேக்கு கொடுத்த நேர்காணல் அரச குடும்பத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓபரா வின்ஃப்ரே மேகன் இவ்வாறு வெளிப்படையாகப் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறி ஒரேயடியாக அந்த சர்ச்சையிலிருந்து தப்பித்துள்ளார். மேலும் தன் மகன் ஆர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மகாராணியாராக இவர் தான் வர வேண்டும்.. அரச குடும்பத்தின் உறவினர் கருத்து ..!!

பிரிட்டன் அரசகுடும்பத்தில் மகாராணியாருக்கு பிறகு கேட் தான் அதற்கு தகுதியானவர் என்று அவரது தாய்மாமா கூறியுள்ளார்.  பிரிட்டன் அரச குடும்பத்தில் காலடி எடுத்து வைத்து முழுமையாக அனைத்தையும் எந்த அளவிற்கு எளிதில் நாசமாக்க முடியும் என்பதை மேகனை பார்த்தால் தெரியும். இதற்கு அப்படியே எதிராக இருப்பவர் கேட். இவர் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெறும் போது வாகனத்தின் ஜன்னல் வழியே கருப்பு நிற உடை அணிந்து இருந்தார். அப்போது அவரது கண்கள்  அரச குடும்பத்தில் பிறந்த இளவரசிகளை […]

Categories
உலக செய்திகள்

சொகுசு பங்களாவில் காதலியை கொடூரமாக தாக்கிய கோடீஸ்வரர்.. நீதிமன்றத்தில் ஆஜர்..!!

பிரிட்டனில் முன்னாள் கால்பந்து வீரர், தன் காதலியை கடுமையாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.   பிரிட்டனில் வசிக்கும் கோடிஸ்வரரான முன்னாள் கால்பந்து வீரர் ரயன் கிக்ஸ், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் தேதியன்று கிரேட்டர் மேன்செஸ்ட்டர் பகுதியில் இருக்கும் 1.7 மில்லியன் மதிப்புடைய அவருடைய பிரம்மாண்ட சொகுசு வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது முன்னாள் காதலியான கேட் கிரிவில்லி என்பவரும் அவருடன் இருந்துள்ளார். அப்போது ரயன், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அங்கு கேட்டின் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் ஸ்டோக் பார்க் ராயல் ஹோட்டல்…. விலைக்கு வாங்கிய முகேஷ் அம்பானி… அதன் மதிப்பு என்ன தெரியுமா….?

பிரிட்டனிலுள்ள ஸ்டோக் ராயல் ஹோட்டலை முகேஷ் அம்பானி 57 மில்லியன் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். உலக டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி பிரிட்டனில் உள்ள ஸ்டாக் பார்க் ராயல் ஹோட்டலை 57 மில்லியன் கொடுத்து வாங்கியுள்ளார். பிரிட்டன் ஸ்டோக் பார்க் ராயல் ஹோட்டல் 300 ஏக்கர் நிலப்பரப்பில் 49 படுக்கை அறைகளைக் கொண்டதாகும். அதன் தோட்டத்தில் 13 டென்னிஸ் ஆடுகளங்கள் கோல்ப் திடல் ஆகியவை உள்ளன. மேலும் 14 ஏக்கரில் பல தாவரங்களுடன் பூங்கா […]

Categories
உலக செய்திகள்

“கொஞ்சம் உப்பா இருக்கு!”.. தன் சிறுநீரையே குடித்த நபர்.. வைரலாகும் வீடியோ..!!

லண்டனில் மேயர் வேட்பாளரான ஒருவர் தன் சிறுநீரை குடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.  பிரிட்டன் தலைநகர் லண்டனில் வரும் மே 6ஆம் தேதியன்று மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் முன்னாள் வங்கி ஊழியரான Brian Rose போட்டியிடயிருக்கிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கடந்த 2018 ஆம் வருடம் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். https://videos.metro.co.uk/video/met/2021/04/22/1152479157703626043/640x360_MP4_1152479157703626043.mp4 அதன் பின்பு அதனை அவர் நீக்கியுள்ளார். எனினும் தற்போது தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாடுகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும்…. பச்சை பட்டியல் தயார் செய்து வரும் நாடு….!!

பிரிட்டன் மக்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும் என பச்சை பட்டியல்  தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அரங்கேறுவது இனப்படுகொலையா ?முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரிட்டன் நாடாளுமன்றம் ..!!

சீனாவில் அரங்கேறுவது இனப்படுகொலை என்று அறிவித்த பிரிட்டன் நாடாளுமன்றம் அதனை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள உய்குர் முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரிட்டன் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்த கன்சர்வேட்டிவ் எம்.பி நுஷ்ரத்  கானி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை  எம்.பிக்கள் ஆதரித்தனர். அனால் எம்பிகளின் ஆதரவுகள் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் […]

Categories
உலக செய்திகள்

நடு ரோட்டில் காவல்துறை அதிகாரிக்கு முத்தம்.. வெளியான வீடியோ..!!

பிரிட்டனில் காவல்துறை அதிகாரி மற்றும் பெண் அதிகாரி இருவரும் வாகனத்திற்குள் முத்தமிட்டு கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனிலுள்ள Blackburnல் இருக்கும் Carl Fogherty Way என்ற பகுதியில் வாகனத்திற்குள் காவல்துறை அதிகாரியும், ஒரு பெண் அதிகாரியும் முத்தமிட்டுக்கொண்டிருந்துள்ளனர். அதன்பின்பு அந்த பெண் அதிகாரி வாகனத்திலிருந்து வெளியே வந்து டிரைவர் சீட்டிற்கு அருகில் வந்து மீண்டும் முத்தமிடுகிறார். https://videos.metro.co.uk/video/met/2021/04/21/8278141049881643874/480x270_MP4_8278141049881643874.mp4 மேலும் அந்தப் பெண் அதிகாரி அப்போது பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனை அங்கு இருந்த […]

Categories
உலக செய்திகள்

மீன்பிடிக்க சென்றவருக்கு கிடைத்த அதிஷ்டம்… அரியவகை நீலநிற லாப்ஸ்டர்…. மீண்டும் கடலில் விட்ட மீனவர்…!!!

பிரிட்டனில் மீனவருக்கு அரியவகை நீலநிற லாப்ஸ்டர் கிடைத்த நிலையில் அவர் அதை பிடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு மீண்டும் கடலிலேயே விட்டுள்ளார். பிரித்தானியாவில் Newlyn பகுதியை சேர்ந்தவர் Tom Lambourn(25). இவர் Penzance கடற்கரை நகரத்தில் மீன் பிடித்தல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் Tom Lambourn மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது மிகவும் அரிதான நீல நிற லாப்ஸ்டர் கிடைத்துள்ளது. இந்த அரியவகை லாப்ஸ்டரை பார்த்ததும் Tom Lambourn அதை பிடித்து புகைப்படம் எடுத்து  உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் உரிமம் இன்றி காரை படுவேகமாக ஓட்டி சென்றதால் போலீஸிடம் சிக்கிய நபர் ..!!என்ன தண்டனை தெரியுமா ?

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை அதிவேகமாக ஓட்டி சென்ற இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் லிங்க்கான்ஷிரில்  உள்ள ஸ்பல்டிங் அருகிலுள்ள ஒரு சாலையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி 22 வயதான ட்ரெசி ஹெர்குலிஸ் என்ற நபர் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த போலீஸ் காரை பார்த்தவுடன் அவர் இன்னும் படுவேகமாக ஓட்டி சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றுள்ளனர். மிக வேகமாக சென்ற அந்த […]

Categories
உலக செய்திகள்

கணவர் இறந்த பிறகு முதன்முதலாக… மகாராணி வெளியிட்ட செய்தி… நன்றி தெரிவித்த ராஜ குடும்பத்தினர்…!!!

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் முடிவடைந்த நிலையில் மகாராணியார் தனது பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் துக்கம் அனுசரிக்கும் இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க விரும்பாத மகாராணி தனது பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் மகாராணியின் கணவர் இறந்த பின் முதன்முறையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி இதுவாகும். இதனையடுத்து மகாராணி எலிசபெத்தின் 95வது பிறந்த நாளான இன்று நாட்டு மக்கள், நண்பர்கள் மற்றும் அவரது […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் இளவரசர் பிலிப் மரணத்திற்கு துக்கம் அனுசரிப்பு…. கணவரை இழந்த நிலையிலும் மகாராணி மக்களுக்காக வெளியிட்டுள்ள பிறந்த நாள் செய்தி….!!

பிரிட்டன் மகாராணியார் தன் கணவர் இறந்த நிலையிலும் நாட்டு மக்களுக்காக பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார்.  மகாராணியார் கணவர் இறந்த நிலையிலும் நாட்டு மக்களுக்கு தனது பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்திகள் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் அரச குடும்பம் துக்கத்தில் இருந்த நிலையில் உலகம் முழுவதும் இருந்து வந்த இரங்கல் செய்திகளால் அரச குடும்பம் ஆறுதல் பெற்றது என்றும் அரச குடும்பத்தின் மீது நீங்கள் வைத்த பற்றுக்கும், பாசத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியின் 73 வருட திருமண வாழ்க்கை…. மனைவியைப் பற்றி ஒரே ஒரு புகார் கூறிய இளவரசர் பிலிப்…. என்ன புகார் தெரியுமா….?

பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் மனைவி மீது கூறிய ஒரே புகார் பற்றி இளவரசரின் வாழ்க்கை வரலாறு எழுதுபவர் வெளியிட்டுள்ளார். திருமணமாகி சில நாட்களிலேயே மனைவியின் மீது எண்ணற்ற புகார்களை சொல்லும் இந்த காலகட்டத்தில் தனது 73 வருட திருமண வாழ்க்கையில் இளவரசர் பிலிப் மகாராணியாரைப் பற்றி ஒரே ஒரு புகார் மட்டுமே சொல்லி இருக்கிறார் என இளவரசரின் வாழ்க்கை வரலாறு எழுதும் Gyles Brandreth தெரிவித்துள்ளார். அவர் இளவரசர் பிலிப் தன் மனைவி எப்போதும் தொலைபேசியில் […]

Categories
உலக செய்திகள்

இன்று பிரிட்டன் மகாராணியின் பிறந்தநாள்…. ஆனால் ஜூன் மாதமும் மகாராணி பிறந்தநாள் கொண்டாடுவார்…. ஏன் தெரியுமா….?

ஒவ்வொரு ஆண்டும் மகாராணியின் பிறந்த நாள் இருமுறை கொண்டாடப்படுவது ஏன்? என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது பிரிட்டன் மகாராணியார் எலிசபெத் இன்று தனது 95வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மகாராணியார் 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி தான் பிறந்தார். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இரண்டாம் சனிக்கிழமையும் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் ஏன் தெரியுமா?ஏனெனில் மன்னர் இரண்டாம் ஜார்ஜ் நவம்பர் மாதம் பிறந்தவர். ஆனால் நவம்பர் மாதம் […]

Categories
உலக செய்திகள்

பாம்பே இருந்தாலும் தெரியாது…. யாரும் டிவி பார்த்துட்டே சாப்பிடாதீங்க…. வெளியான தகவல்….!!

பிரிட்டனில் ஒரு குடும்பம் தொலைக்காட்சி பார்த்து சாப்பிடும்போது நடைபெற்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் அனைவரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உணவு எடுத்துக்கொள்வது நடைமுறை வாழ்வில் வழக்கமான செயலாக மாறியுள்ளது. அதுபோல் பிரிட்டனின் ஒரு குடும்பம் தேநீருடன் சாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது குடும்ப தலைவி தட்டை பார்க்க அதில் ஒரு தவளை அமர்ந்துகொண்டு அதுவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. தவளையை கண்டதும் அவர் தட்டை தூக்கி வீச தவளை துள்ளிக்குதித்து சோபாவில் கால் பதித்து அமர்ந்து கொண்டு […]

Categories
உலக செய்திகள்

மொத்தம் 2.8 மில்லியன் லிட்டர் பீர் விற்பனை… நிரம்பி வழிந்த பார்கள்… மகிழ்ச்சி அடைந்த உரிமையாளர்கள்…!!!

பிரிட்டனில் உணவகம் மற்றும் பார்கள் திறக்கப்பட்டதை அடுத்து ஒரே நாளில் 2.8 மில்லியன் லிட்டர் பீர் விற்பனையாகியுள்ளது. பிரித்தானியாவில் நீண்டகால கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த வாரம் அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதில் கிட்டத்தட்ட 50,000 உணவகங்கள், பப், பார்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பப் , பார் மற்றும் உணவகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை அன்று ‘Super Saturday Night’ என்று சொல்லும் அளவிற்கு உணவகம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸை மீண்டும் உடலில் செலுத்துவதா…? 5000 பவுண்ட் வழங்கப்படுவதாக அறிவிப்பு… ஒப்புதல் அளித்த பிரிட்டன் அரசு…!!!

கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் உடலில் மீண்டும் வைரஸ் செலுத்தி ஆய்வு செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அதே வைரஸை  உடலில் செலுத்தி அவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை கண்டறிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் புதிய ஆய்வை தொடங்க உள்ளது. இந்த ஆய்வு அரசு அங்கீகாரத்துடன் தொடங்கியுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த ஆய்வின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  குணமடைந்தவர்களுக்கு மறுபடியும் வைரஸ் செலுத்துவதன் மூலம் அவர்கள் உடலில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

நண்பருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி… வீடியோவால் சிக்கிய வாலிபர்… 10000 பவுண்ட் அபராதம் விதித்த போலீசார்…!!!

பிரிட்டனில் எம்1 சாலையில் விபத்தில் இறந்த நண்பருக்கு வானவேடிக்கை மூலம் அஞ்சலி செலுத்திய இளைஞருக்கு போலீசார் 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். பிரிட்டனில் எம்1 சாலையில் பிபத்தில் இறந்த நண்பருக்கு 23 வயது இளைஞர் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மாலையில் 400க்கும் மேற்பட்ட நபர்களுடன் Derbyshire நகரிலுள்ள  Shirebrook பகுதியில் வித்தியாசமாக வானவேடிக்கையுடன் அஞ்சலிசெலுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

பொது இடங்களில் அதிகரிக்கும் வன்கொடுமைகள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….!!

பூங்காவில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மான்சென்ஸ்டரின் Wythenshawe-வில் இருக்கும் Kirkup Gardens பூங்காவில் வைத்து மர்ம நபர்கள் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆய்வாளர் காரா சார்லஸ்வொர்த் கூறுகையில் பொது இடத்தில் வைத்து இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த சம்பவத்தை யாரேனும் பார்த்திருந்தால் உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

டிக்டாக் வீடியோ பதிவு செய்த பெண்…. வீடியோவில் காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான முழு தகவல்….!!

பெண் ஒருவர் இரவு தனியாக அமர்ந்து டிக்டாக் வீடியோ பதிவு செய்யும் போது வீடியோவில் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் லிவர்பூலைச் பகுதியைச் சேர்ந்த Kayleigh Corby (33) என்பவர் தன் கணவன் இரவு வேலைக்கு சென்றவுடன் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு டிக்டாக் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.  பின்னர் பதிவு செய்த வீடியோவை தன் தோழிக்கு அனுப்பும்போது வீடியோவில் மர்ம நபர் ஒருவர் பின்னால் நிற்பதை கவனித்துள்ளார். Kayleigh Corby பயந்துபோய் தன்னுடைய […]

Categories
உலக செய்திகள்

இது மனிதநேயமற்ற செயல்… தனியாக அமர்ந்திருந்த மகாராணி… சோகத்தில் மூழ்கிய நாட்டு மக்கள்…!!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது மகாராணியார் தனிமையில் அமர்ந்து இருந்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில் 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் 73 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த கணவரை பிரிந்த நிலையில் இறுதி சடங்கில் […]

Categories
உலக செய்திகள்

சாப்பாட்டில் கிடந்த உயிரினம்… வித்தியாசமாக உணவகத்தை அணுகிய பெண்… நஷ்ட ஈடாக வழங்கப்பட்ட தொகை…!!!

பிரிட்டனில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு ஆர்டர் செய்ததில் சாப்பாட்டில் தவளை ஓன்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் மார்ட்டின் என்பவர் தனது  மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தேநீருடன் எதையாவது சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்து உணவகம் ஒன்றில் உணவை ஆர்டர் செய்துள்ளனர். இதனையடுத்து உணவு வந்ததும் மார்ட்டினின் மனைவியான Michelle Adcock சாலட்-ஐ சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அவரது தட்டை பார்த்ததில் அதில் ஒரு தவளை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் வருவதற்கு முன்பு… தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமான கடிதம்… இளவரசர் ஹரியின் நெகிழ்ச்சி செயல்…!!!

தாத்தாவின் இறுதி சடங்கிற்கு வருவதற்கு முன் தந்தைக்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை இளவரசர் ஹரி எழுதியுள்ளார்.  பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமான நிலையில் அவரது மகனான சார்லஸ் தற்போது குடும்ப பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில் இளவரசர் ஹரி தாத்தாவின் இறுதி சடங்குக்கு வருவதற்குமுன் தன் தந்தையான சார்லஸ்க்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நான் அரச குடும்பத்தை மதித்து நடப்பேன் என குறிப்பிட்டுள்ளார். இக்கடிதம் மிகவும் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு…. மேலாடை அணியாமல் வந்து கூச்சலிட்ட பெண் யார்….? வெளியான முக்கிய தகவல்….!!

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் மேலாடை அணியாமல் கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி  காலமானார். அவரின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இளவரசன் இறுதிச் சடங்கின்போது பெண் ஒருவர் மேலாடை அணியாமல் வந்து கூச்சலிட்ட சம்பவத்தின் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பெண் இளவரசர் இறுதிச் சடங்கின் போது மேலாடை அணியாமல் வந்து […]

Categories
உலக செய்திகள்

தந்தை மற்றும் சகோதரருடன் பேசிய இளவரசர் ஹரி.. என்ன முடிவு எடுத்துள்ளார்..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, தாத்தாவின் இறுதிச்சடங்கிற்கு பின் தந்தை மற்றும் சகோதரருடன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அமெரிக்காவிலிருந்து தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரிட்டன் வந்த இளவரசர் ஹரி தன் தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் சுமார் இரண்டு மணி நேரங்கள் பேசியுள்ளார். இதற்கு முன்பே சகோதரர் வில்லியமிற்கு இளவரசர் ஹரி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தாத்தாவின் இறுதி சடங்கிற்கு பிறகு சகோதரர் மற்றும் தந்தையுடன் பேசிய இளவரசர் ஹரி, அமெரிக்காவிற்கு உடனடியாக திரும்பப் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் தீவிரமடையும் இந்திய வகை வைரஸ்.. சிவப்பு பட்டியலில் இணைக்கப்படுமா இந்தியா..? வெளியான தகவல்..!!

பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் இந்தியா இணைக்கப்படுமா என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸால் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளில் தற்போது வரை 70க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் அவர்களில் அதிகமானோர் சமீபத்தில் பிற நாடுகளுக்கு சென்று வந்ததாக ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனினும் இந்தியாவில் பரவிய கொரோனா அவர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

தாத்தாவின் இறுதி சடங்கில் இணைந்த இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் தாத்தாவின் இறுதி சடங்கின் போது ஒன்றாக இணைந்து சென்ற காட்சிகள் வெளியாகிள்ளது. பிரிட்டன் மகாராணி கணவர் பிலிப்பின்  மரணம் பிரிட்டன் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவரை குறித்த நினைவலைகள் எழுந்தது. மேலும் அவரின் மரணம் குறித்த செய்திகள் வெளியான போதெல்லாம் மக்களின் மனதில் இன்னொரு கேள்வியும் எழுந்தது மறுப்பதற்கில்லை. அது என்னவென்றால் பிலிப்பின் இறுதி சடங்கின் போதாவது ஹரியின் மனைவியான மேகனால்  பிரிந்த ராஜ குடும்பம்  மீண்டும் இணையுமா என்ற […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு.. தொலைக்காட்சிகளில் நேரலை.. இத்தனை மில்லியன் பார்வையாளர்களா..?

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரின் இறுதிச் சடங்கை தொலைக்காட்சி நேரலையில் சுமார் 14 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். பிரிட்டனில் கொரோனா தீவிரத்தை குறைக்க சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இதனால் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் பொது மக்கள் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டிருந்தது. இதன்படி, ITV நிறுவனமும் நேரலை செய்துள்ளது. இதனை சுமார் 2.1 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். மேலும் Sky தொலைக்காட்சியில் […]

Categories
உலக செய்திகள்

முயலின் மதிப்பு 1 லட்சம்….திருடியவனுக்கு அடித்த மெகா ஆஃபர் ….!!!

பிரிட்டனில்  சிறப்பு அம்சங்கள் பொருந்திய முயல் ஒன்று சனிக்கிழமையில் இருந்து காணவில்லை. பிரிட்டன் வொர்செஸ்டர்ஷைர் அருகே ஸ்டூல்டன் கிராமத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ‘டாரியஸ்’ என்ற முயலை சில வருடங்களாக மிகுந்த ஆசையுடன் வளர்த்து வந்திருக்கிறார். தற்போது கடந்த சனிக்கிழமையன்று இரவில் தோட்டத்தில் திரிந்து கொண்டிருந்த முயலை காலையில் பார்த்தபோது முயலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த எட்வர்ட்ஸ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் மனமுடைந்து போன எட்வர்ட்ஸ் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பிற்கு இறுதிவிடை.. சவப்பெட்டியின் மேலிருந்த மகாராணி கைப்பட எழுதிய அட்டை..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு, மகாராணியார் இறுதி விடை கொடுக்கும் விதமாக தன் கையால் எழுதிய அட்டை ஒன்றை அவரின் சவப்பெட்டியின் மேல் வைத்துள்ளார்.  பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து, செயிண்ட் ஜார்ஜ் செப்பலில் அவரது உடல் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மகாராணியார் தனியாக இருந்துள்ளார். அதாவது இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியாரின் 73 வருட திருமண வாழ்க்கையில் தற்போதுதான் கணவரை பிரிந்து இருக்கிறார். https://videos.metro.co.uk/video/met/2021/04/17/7284058078706909126/640x360_MP4_7284058078706909126.mp4   எனவே அவருக்கு, மகாராணியார் தன் கையால் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம்.. அரச குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதை தொடர்ந்து அவரின் உடல் வின்ஸ்டர் கோட்டையில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ரகசிய பெட்டகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த 24 பேரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிரத்தியேக பெட்டகத்தில் இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படும் இந்த பெட்டகமானது சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது. வழக்கமாக இறந்தவர்களின் உடல் 6 அடி ஆழத்தில் தான் அடக்கம் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் உடல் இன்று நல்லடக்கம்.. வீடியோ வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அதனைத்தொடர்ந்து சுமார் எட்டு தினங்கள் அவருக்கு தூக்கம் அனுசரிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை சுமார் 3:00 மணியளவில் தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. https://videos.metro.co.uk/video/met/2021/04/17/5922952181217736373/640x360_MP4_5922952181217736373.mp4 அதன்படி, வின்ஸ்டரில் துப்பாக்கி சத்தத்துடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மதியம் 2:30 மணியளவில் இசை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தியவர்கள் இவ்வளவு பேரா..? வெளியான முக்கிய தகவல்..!!

பிரிட்டனில் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு நபர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தலின் பேரில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வரை நாட்டு மக்களில் சுமார் 8.9 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிக்கான 2 டோஸ்களும் சரியாக செலுத்தப்பட்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேல்ஸ் பகுதியில் வயதானவர்களில் கால் பங்கு நபர்களுக்கு, அதாவது 22.8% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் வடக்கு அயர்லாந்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனிற்குள் நுழைந்தது வேறுவகை கொரோனா.. சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்..!!

இந்தியாவில் கண்டறியப்பட்ட 2 கொரோனா வைரஸ்கள் தற்போது பிரிட்டனில் அடையாளம் காணப்பட்டுள்ளது.  உலகில் ஒரு நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பிற நாடுகளில் வெவ்வேறு விதமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டு வேறு வேறு இடங்களில் பரவிய கொரோனா பிரிட்டனில் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரிட்டனில் தற்போது வரை சுமார் 77 வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் இங்கிலாந்தில் 73 வழக்குகளும், ஸ்காட்லாந்தில் நான்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரனோ வைரஸ் E484Q மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் ஆசை…. இதில் தான் என் உடல் செல்ல வேண்டும்…. இறப்புக்கு முன்னர் செய்த இறுதிச்சடங்கு ஏற்பாடு….!!

இளவரசர் பிலிப் தான் இறந்த பிறகு உடலை சுமந்து செல்ல வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார். பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப் தன் இறப்பிற்கு முன்னரே தன் இறுதி சடங்கிற்கான  ஏற்பாடுகளை செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதிசடங்கு…. இவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்…. வெளியான பெயர் பட்டியல்….!!

இளவரசர் பிலிப்  இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் அரச குடும்ப உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அரண்மனை […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பிற்காக அன்பை பொழிந்த மக்கள்.. கண்கலங்கி நின்ற சார்லஸ்-கமீலா.. வெளியான புகைப்படங்கள்..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு பொதுமக்கள் ஏராளமான பூக்களுடன் அஞ்சலி செலுத்தியிருப்பதை கண்டவுடன் இளவரசர் சார்லஸ் கண்கலங்கி நின்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை வரை நாடு முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது கொரோனா காலமாக இருப்பதால் மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே  சுமார் நூற்றுக்கணக்கில்  மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். மேலும் அங்கு கொண்டுவரப்பட்ட அனைத்துப் பூக்களும் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் […]

Categories
உலக செய்திகள்

“உன்னை விட்டுவிட்டு யாராவது அவளிடம் போவார்களா”..? டயானாவிற்கு இளவரசர் பிலிப்பின் கடிதம்..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் மகனான இளவரசர் சார்லஸ் மற்றும் மருமகள் டயானா இருவரும் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக பல கடிதங்கள் எழுதியது தெரியவந்துள்ளது.  பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கடந்த 1981-ம் வருடம் இளவரசி டயானாவை திருமணம் செய்யும் சமயத்தில் இளவரசர் பிலிப் டயானாவை வரவேற்பதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டதை அறிந்தவுடன் தன் மருமகளுக்கு இளவரசர் பிலிப், பல கடிதங்களை எழுதி ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இதனை அரண்மனையின் சமையல்காரராக இருக்கும் பால் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் அரிய புகைப்படங்கள்.. ட்விட்டரில் வெளியிட்ட ராயல் குடும்பத்தினர்..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவிற்கு பின் அவரது அரிய புகைப்படங்கள் அரசகுடும்பத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமான பிறகு ராயல் குடும்பத்தினர் அவருக்கு மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரை வெளியிடப்படாத அவரின் அரிய புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதாவது, பர்க்கிங்காம் அரண்மனை, வேல்ஸ் இளவரசர் மற்றும் கார்ன்வாலின் டக்சஸ் சார்லஸ், கேம்பிரிட்ஜின் டியூக், டச்சஸ் இளவரசர் வில்லியம் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. Over […]

Categories
உலக செய்திகள்

தாத்தா பிலிப்பை சந்திக்க முடியவில்லை…. குட்டி பிலிப்பை சந்திக்கச் செல்கிறேன்…. இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள தகவல்….!!

பிரிட்டன் இளவரசர் ஹரி குட்டி இளவரசர் பிலிப்பை சந்திக்க செல்வதாக தகவல் வெளியிட்டுள்ளார். பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரிட்டன் வந்துள்ளார். அவர் பிரிட்டனை […]

Categories
உலக செய்திகள்

என் பேரன் வருத்தப்படுவான்…. யாரும் ராணுவ சீருடையில் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டாம்…. மகாராணியின் அதிரடி முடிவு….!!

பிரிட்டன் மகாராணியார் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் மூத்த குடும்ப உறுப்பினர்கள் ராணுவ சீருடையில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மகாராணியார் எலிசபெத் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு…. மகாராணி தனியாகத்தான் இருக்க வேண்டும்…. வெளியான தகவல்….!!

இளவரசர் பிலிப் சடங்கில் மகாராணி தனியாக அமர வைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இறுதிச் சடங்கின்போது […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. தாத்தாவை போலவே பேரன்…. வைரலாகும் புகைப்படம்….!!

பிரிட்டன் இளவரசர் காலமானதை தொடர்ந்து தாத்தாவைப் போல் பேரன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ஷ்டசாலிப்பா இவரு!”.. பழம் வாங்க போனவருக்கு.. இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா..?

பிரிட்டனில் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்தவருக்கு ஆப்பிள் ஐபோன் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனிலுள்ள Twickenham என்ற பகுதியில் இருக்கும் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை நிக் ஜேம்ஸ் என்ற 50 வயதுடைய நபர் ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு கடைக்கு ஆப்பிள் பழங்களை வாங்கிச் சென்ற போது, கடையில் இருந்த ஊழியர்கள் உங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்கள். இதனால் ஏதோ ஒரு இனிப்பு வைத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு பையை பார்த்தவர்  […]

Categories
உலக செய்திகள்

நீண்ட நாள் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்…. தடுப்பூசியை இப்படி போட்டு பாக்கலாம்…. பிரிட்டன் மேற்கொண்டுள்ள ஆய்வு….!!

பிரிட்டனில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கலப்பு தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் உலக நாடு முழுவதிலும்  பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கலப்பு தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 50 வயதுக்கு மேற்பட்ட கொரோனா வைரஸ் முதல் டோஸ் தடுப்பூசியை […]

Categories
உலக செய்திகள்

அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள்…. தடுப்பூசி மட்டுமே காரணம் இல்லை – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் அடுத்தக்கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள  நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. ஓய்வு பெறும் மூத்த அலுவலர்…. “14 வருஷம் சிறப்பாக பணியாற்றினார்” கௌரவிக்க சென்ற மகாராணி….!!

கணவன் இறந்து சில நாட்களே ஆன நிலையில் பிரிட்டன் மகாராணியார் தன் கடமையை செய்ய பணிக்கு சென்றுள்ளார். பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களா நீங்கள்..? பிரிட்டன் அரசு முக்கிய அறிவிப்பு..!!

பிரிட்டனில் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.  பிரிட்டனில் கொரோனாவிற்கு எதிராக முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 50 வயதுக்கு அதிகமான நபர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டன் அரசு, கலப்பு தடுப்பூசிக்கான ஆராய்ச்சியை விரிவுபடுத்தி இருக்கிறது. அதன்படி ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை, முதல் டோஸாகவும், வேறு ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டாம் டோஸாகவும் செலுத்தப்பட்டு, அதற்குரிய பலனை கண்டுபிடிக்கும் […]

Categories

Tech |