Categories
உலக செய்திகள்

“இளவரசர் ஹரி மகளுக்கு சூட்டிய பெயர்!”.. அவரின் நீண்ட நாள் ஆசை.. வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் திருமணத்திற்கு முன்பே மகாராணியின் பெயரை, தன் குழந்தைக்கு சூட்ட வேண்டும் என்று விரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தைக்கு “லிலிபெட்” என்று மகாராணியின் செல்லப் பெயரை சூட்டியிருக்கிறார். அதாவது அந்த பெயர் மகாராணியின் கணவர், இளவரசர் பிலிப் மட்டுமே அவரை செல்லமாக அழைக்கும் பெயர். எனவே தன் தனிப்பட்ட பெயரை ஹரி  மகளுக்கு சூட்டியதால் மகாராணி வருத்தமடைவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஹரி-மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“மெக்ஸிகோவில் பயங்கரம்!”.. முதலையின் பிடியில் சிக்கிய சகோதரி.. போராடி மீட்ட பெண்..!!

பிரிட்டனை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மெக்ஸிகோவிற்கு சுற்றுலா சென்றபோது, முதலையின் பிடியில் சிக்கி மீண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    பிரிட்டனில் பிறந்த இரட்டை சகோதரிகள் ஜார்ஜி லாரி, மெலிசா. தற்போது 28 வயதாகும் இவர்கள் மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கு பிரபலமடைந்த சர்ஃபிங் ரிசார்ட் Puerto Escondido பகுதியிலிருந்து, சுமார் 10 மைல் தூரத்தில் இருக்கும் நீரில் நீச்சல் அடித்துள்ளனர். அப்போது திடீரென்று பெரிய முதலை ஒன்று மெலிசாவை நீரினுள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவே […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் தம்பதி குழந்தைக்கு சூட்டிய பெயர்.. “மகாராணியை அவமதிக்கும் செயல்”.. நிபுணர் கூறிய தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தைக்கு லிலிபெட் என்று மகாராணியரின் செல்லப்பெயரை சூட்டியது, அவரை அவமதிக்கும் செயல் என்று ராஜ குடும்ப நிபுணர் கூறியுள்ளார்.  பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு “லிலிபெட் லில்லி டயானா” என்று ஹரியும் மேகனும் பெயர் சூட்டியுள்ளார்கள். அதாவது டயானா என்பது ஹரியின் தாயான இளவரசி டயானாவை கவுரவிக்க சூட்டப்பட்டது. மேலும் மகாராணியாரின் செல்ல பெயரான லிலிபெட் என்று சூட்டியதால், மகாராணியார் மகிழ்ச்சி அடைவார் […]

Categories
உலக செய்திகள்

போர்ச்சுகலில் மாயமான குழந்தை.. 14 வருடமாக நீடிக்கும் மர்மம்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு குழந்தை, போர்ச்சுக்களில் காணாமல் போன வழக்கு, 14 வருடங்களாக நடந்து வரும் நிலையில் முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த விசாரணை அதிகாரி Hans Christian Wolters, இந்த வழக்கு குறித்த முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். எனவே இன்னும் சில மாதங்களில் இந்த வழக்கில்  முடிவு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வசிக்கும் கேட் மற்றும் கெரி மெக்கேன் என்ற தம்பதி தங்கள் குழந்தைகளுடன் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சுற்றுலா […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் தம்பதிக்கு 2-வது குழந்தை பிறந்தது.. என்ன பெயர் சூட்டப்பட்டது..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக  அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்காவை சேர்ந்த நடிகையான மேகனை காதலித்தார். இதனை தொடர்ந்து கடந்த 2018ம் வருடத்தில் அரச முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆர்ச்சி என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த வருடம் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி சாதாரண குடிமக்களாக வாழ விரும்புவதாக இருவரும் தெரிவித்தனர். எனவே, பிரிட்டனிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர். தற்போது இருவரும் கலிபோர்னியாவில் வசிக்கும் […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் பிலிப்பின் 100வது பிறந்தநாளில் ஸ்பெஷல்!”.. ஹரி-மேகன் தொடர்பில் வெளியான தகவல்.!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் பிறந்தநாளான ஜூன் 10ம் தேதியன்று இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் 100 ஆவது பிறந்த நாள் ஜூன் 10 ஆம் தேதி அன்று வருகிறது. அதே தேதியில் இளவரசர் ஹரியின் இரண்டாம் குழந்தை பிறக்கவிருப்பதால், குழந்தைக்கு இளவரசர் பிலிப்பின் பெயரை சூட்டலாம் என்று கூறப்படுகிறது. பெண் குழந்தையாக இருந்தால், மகாராணியாரின் பெயரை சூட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரண்மனையின் நெருங்கிய வட்டாரங்கள், இளவரசர் பிலிப்பின் […]

Categories
உலக செய்திகள்

“எது நடந்தாலும் ஹரி-மேகன் எங்கள் குடும்பம் தான்!”.. இளவரச தம்பதியின் அருமையான பதில்..!!

பிரிட்டன் இளவரசர் எட்வர்டு மற்றும் அவரின் மனைவி சோபி அளித்த நேர்காணலில் எது நடந்தாலும் ஹரி-மேகன் எங்கள் குடும்பம் தான் என்று கூறியுள்ளனர்.  பிரிட்டன் இளவரசர் எட்வர்டு மற்றும் அவரின் மனைவி சோபியிடம் ஒரு பத்திரிக்கையிலிருந்து  நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது ஹரி மேகன் அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஓபராவுடன் அளித்த நேர்காணல் தொடர்பில் அவர்களிடம் கேட்கப்பப்பட்டது. அதற்கு அவர்கள் ஓபராவா? யார் அவர்? பேட்டியா? என்ன பேட்டி? என்று கிண்டலடித்து சிரித்திருக்கிறார்கள். அதன் பின்பு எது நடந்தாலும் நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா..? அதிர்ச்சியடைந்த பிரிட்டன்.. வெளியான ரகசிய தகவல்..!!

பிரிட்டன் எல்லை பாதுகாப்பு படையினரே, ரகசியமாக புலம்பெயர்ந்தோரை நாட்டிற்குள் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டன் உள்துறை அலுவலகம் புலம்பெயர்ந்த மக்களை நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், சட்டவிரோதமாக நாட்டிற்குள் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரிட்டனின் எல்லையை காக்கக்கூடிய எல்லை பாதுகாப்பு படையினரே, பிரான்சுடன் சேர்ந்து புலம்பெயர்ந்தவர்களை, நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய வைத்தது தெரியவந்துள்ளது. எனவே இதுகுறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மனைவியை கொடூரமாக கொலை செய்த நபர்.. குழந்தைகள் வாக்குமூலம்.. விடுதலைக்கு முன்பு சிறையில் உயிரிழப்பு..!!

ஜிம்பாப்வேயில், மனைவியை கொலை செய்த நபர், தண்டனை காலம் முடிவடைய போகும் நிலையில் சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    ஜிம்பாப்வே நாட்டில் வசிக்கும் 50 வயது நபர் காட்பிரே முசுசா. இவர் கடந்த 2005ம் வருடத்தில் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது அவரின் மகள்களான சிறுமிகள் இருவரும், நீதிமன்றத்தில் எங்கள் தாயை, தந்தை கொடூரமாக குத்திக்கொலை செய்ததை பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். மேலும்,” வேண்டாம் விடுங்கள்” என்று கதறியும் அவர் நிறுத்தாமல், கூர்மையான ஆயுதத்தால் […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவின் பிரம்மாண்ட உடை.. அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது..!!

பிரிட்டன் இளவரசி டயானா, திருமணத்தில் அணிந்திருந்த மிக பிரம்மாண்ட உடை கென்சிங்டன் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.  பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணம், கடந்த 1981ம் வருடம் ஜூலை 29ஆம் தேதியன்று லண்டனில் உள்ள செயிண்ட் பால் தேவாலயத்தில், உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 1997ம் வருடத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று விபத்தில் டயானா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், டயானாவின் 40 வது திருமண நாளை முன்னிட்டு திருமணத்தில் அவர் அணிந்திருந்த […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் தொடர்புடைய பிரச்சனைகள்.. கேட் மிடில்டன் நண்பர்களிடம் கூறிய தகவல்..!!

பிரிட்டன் இளவரசி கேட்மிடில்டன், தன் நண்பர்களிடம், ஹரி-மேகன் தொடர்புடைய பிரச்சனைகளை தன்னால் எளிதில் தீர்க்க முடியும் என்று கூறியதாக தெரியவந்துள்ளது.    பிரிட்டன் ராஜ குடும்பத்திலிருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் வெளியேறி அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அப்போதிலிருந்தே இருவரும் அரச குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஹரி, தன் தாய்க்கு நேர்ந்த கொடுமை தனக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் இருந்ததாக கூறியிருந்தார். மேலும் பிரிட்டன் மக்கள் இளவரசர் சார்லசை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணி- அதிபர் ஜோபைடன் சந்திப்பு.. அதிகாரபூர்வமாக வெளியான தகவல்..!!

பிரிட்டன் மகாராணியார், அமெரிக்க அதிபரை சந்திக்கவுள்ள தேதியை பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.  அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து Cornwall-ல் நடக்கவுள்ள ஜி-7 மாநாட்டிற்காக இந்த மாதத்தில் பிரிட்டனிற்கு வருகை தர இருக்கிறார். அப்போது பிரிட்டன் மகாராணியாரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் சந்திப்பிற்கான தேதி மற்றும் இடம் தொடர்பான தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருக்கிறது. The Queen will meet the President of the United States of America and First Lady Jill […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி! ஒரு சாவி இவ்வளவு தொகையா..? ஹிட்லர் உபயோகித்தது..!!

பிரிட்டனில் அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவி சுமார் 14000 பவுண்டிற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் ஒரு விமானி சுமார் 76 வருடங்களுக்கு முன்பு அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுபிடித்துள்ளார். தற்போது அந்த சாவி கெண்ட் நகரில் 14 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம் போயிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் Lieutenant A.A Williams என்ற விமானி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார். அதில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்தவர்களுக்கு புதிய திட்டம்.. பிரிட்டன் உள்துறை செயலர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், புலம்பெயர்ந்தவர்களுக்கு, புதிய நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.  பிரிட்டனில் 2021 ஆம் வருடத்தில் குற்றங்களில் ஈடுபட்ட 900 க்கும் அதிகமான பிறநாட்டு நபர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் புலம்பெயர்ந்தவர்களுக்கு, நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறார். ஏற்கனவே வரும் 2025 ஆம் வருடத்தில் விசாக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் குறிப்பிட்ட காலம் முடிவடைந்த பின்பு அவற்றை வைத்திருப்பவர்களுக்கு சலுகைகள், சேவைகள் கிடைக்காததோடு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமரின் ரகசிய திருமணம்.. வெளியான புகைப்படம்..!!

பிரிட்டன் பிரதமர் மூன்றாவதாக தன் காதலியை ரகசிய திருமணம் செய்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரின் காதலி கேரி சைமண்ட்ஸை ரகசியமாக திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் எளிமையாக நடந்த அவர்களது ரகசிய திருமணத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. NEW PIC: PM @BorisJohnson newly married to Carrie Symonds in Downing Street garden yesterday pic.twitter.com/CEX3xO0Z2r — Darren McCaffrey (@darrenmccaffrey) May 30, 2021 […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமருக்கு ரகசிய திருமணமா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், அவரின் காதலியை ரகசியமாக திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 32 வயதுடைய கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் லண்டனில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில், பிரதமர் அவரின் காதலியை ரகசியமாக திருமணம் செய்ததாக தெரியவந்துள்ளது. இத்திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தோற்றம் குறித்த ஆய்வு.. அமெரிக்காவுடன் இணைந்தது பிரிட்டன்..!!

கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது? என்பது தொடர்பில் விசாரணை நடத்தும் அமெரிக்காவிற்கு, பிரிட்டன் உளவுத்துறை உதவப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதா? என்று விசாரணை மேற்கொள்ளும் அமெரிக்காவிற்கு, பிரிட்டன் உளவுத்துறை உதவப்போவதாக Telegraph செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரிட்டன் உளவுத்துறை அமைப்பானது தனியாக, கொரோனா எங்கு உருவாகியது? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, ஒரு மூத்த Whitehall அதிகாரி கூறுகையில், கொரோனா உருவானது குறித்த விசாரணைக்கு ஹவானில் தங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் சார்லஸிற்கு என்ன ஆயிற்று..? வெளியான புகைப்படத்தால் மக்கள் கேள்வி..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸின் கைவிரல்கள் ஏன் வீங்கியிருக்கிறது? என்று இணையத்தளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.   பிரிட்டனில் தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே இளவரசர் சார்லஸ் வணிக வளாகங்களை பார்வையிட, லண்டனிலுள்ள ஒரு பப்பிற்கு, மனைவி கமிலாவுடன் வந்திருக்கிறார். அப்போது அவர் டம்ளரில் சிறிது பீர் குடித்துவிட்டு அதை பத்திரிக்கையாளர்களிடம் காட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த பலரும், இளவரசரின் கைவிரல்கள் ஏன் வீங்கியிருக்கிறது? அவருக்கு என்ன ஆயிற்று? என்று கேள்வி எழுப்பி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு கட்டுப்பாடு.. அயர்லாந்து அறிவிப்பு..!!

பிரிட்டனிலிருந்து வரும் மக்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது தொடரும் என்று அயர்லாந்து தெரிவித்துள்ளது.  பிரிட்டனுடனான பொது போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நிலை இல்லை என்று அயர்லாந்தின் அமைச்சரான Leo Varadkar தெரிவித்துள்ளார். எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் மக்களுக்கு எங்களது எல்லையை திறக்கவுள்ளோம் என்றும் உறுதி கூறியுள்ளார். அயர்லாந்து, நேற்றிலிருந்து பிரிட்டன் மீதுள்ள கட்டுப்பாடுகளை நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேசிய பொது சுகாதார அவசர குழு ஆலோசனைகளை  அளித்துள்ளது. எனவே அந்த ஆலோசனைகளை ஏற்கிறோம். இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட அறிவிப்பு.. தனிமைப்படுத்துதல் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடு..!!

சுவிட்சர்லாந்து, தனிமைப்படுத்துதல் பட்டியலில் தற்போது பிரிட்டன் நாட்டையும் சேர்த்திருப்பதாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு, நேற்று மாலை ஆறு மணியிலிருந்து, பிரிட்டன் மக்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் சுமார் பத்து தினங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதாவது தற்போது உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவிவருவதால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன் மக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்தி கொண்டிருந்தாலும் கூட, கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

உதவியாளர்களுக்கு உயில் எழுதி வைத்த இளவரசர்.. இறுதி நாட்களில் செய்த உதவி..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப், தன் சொத்தில் குறிப்பிட்ட தொகையை தன் இறுதி நாட்களில் உடனிருந்த உதவியாளர்களுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.  பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்குரிய சொத்து மதிப்புகள் சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலான சொத்துக்கள் அவரின் மனைவி மகாராணி யாருக்கு தான் சொந்தமாம். எனினும் மீதியிருப்பதில் குறிப்பிட்ட தொகையை இளவரசர் பிலிப் தன்னுடன் நெருக்கமாக இருந்த மூன்று உதவியாளர்கள், William Henderson, Brigadier Archie Miller Bakewell மற்றும் Stephen Niedojadlo […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனுடன் வர்த்தக உறவில் சீனா முன்னேற்றம்.. கொரோனா காலகட்டத்தில் வளர்ச்சி..!!

சீனா, பிரிட்டன் உடனான வர்த்தக உறவில், ஜெர்மனியை விட உயர்ந்து, பெரிய இறக்குமதி சந்தையாக வளர்ந்திருக்கிறது. பிரிட்டனிற்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் 16.9 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது அது 66% ஆக அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து நிலையற்ற தன்மை ஏற்பட்டது. எனவே கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜெர்மனியின் இறக்குமதி, பிரிட்டனில் குறைய ஆரம்பித்தது. அதாவது கடந்த […]

Categories
உலக செய்திகள்

பொறுமையிழந்ததால் கொன்றுவிட்டேன்.. வாக்குமூலம் அளித்த பிளே பாய்..!!

பிரிட்டனில் இளம்பெண் கொலை வழக்கில் கைதான இளைஞர் ஒருவர், தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.  பிரிட்டனை சேர்ந்த 25 வயது இளம்பெண் Mayra Zulfiqar. இவர் பாகிஸ்தானிற்கு தன் உறவினரின் திருமணத்திற்காக சென்றிருக்கிறார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் சித்திரவதை செய்யப்பட்டு துப்பாக்கியால் சுடபட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Zahir Jadoon மற்றும் Saad Butt ஆகிய இரு இளைஞர்கள் தங்களை திருமணம் செய்து […]

Categories
உலக செய்திகள்

அனாதையாக விடப்பட்ட பச்சிளம் குழந்தை.. 32 வருடங்களுக்கு பின் நடந்த ஆச்சரியம்..!!

பிரிட்டனில் அனாதையாக விடப்பட்ட குழந்தை 32 வருடங்களுக்கு பின் சகோதரியை சந்தித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள Chesterfield என்ற பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு முன்பு ஒரு அட்டைப்பெட்டியில் கிடந்த பிறந்த குழந்தையை அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர்களான Daphne, Gill மற்றும் Susan ஆகிய மூவரும் கண்டு எடுத்திருக்கிறார்கள். அதன் பின்பு அன்புடன் குழந்தையை பராமரித்துள்ளார்கள். இதனிடையே இந்த தகவலை அறிந்த ஒரு தம்பதி குழந்தையை தத்து எடுத்துக் கொண்டார்கள். Helen Knox என்ற […]

Categories
உலக செய்திகள்

“பாதுகாப்பாக மீண்டு வருவோம்!”.. பிரிட்டன் அரசு மக்களுக்கு வேண்டுகோள்..!!

பிரிட்டன் வணிக அமைச்சர், தங்கள் மக்கள் இத்தாலி நாட்டிற்கு பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு இத்தாலி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் வணிக அமைச்சரான Anne-Marie, மஞ்சள் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இத்தாலியும் ஒன்று. எனவே மக்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். அதாவது அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் மஞ்சள் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு  பயணம் மேற்கொள்ள கூடாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“மேகன் கூறிய தகவலால் மனமுடைந்த ஹரி”.. பதற்றத்துடன் விழாவில் பங்கேற்பு.. வீடியோவுடன் வெளியான பின்னணி..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மிகுந்த கவலை மற்றும் பதற்றத்துடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறியிருக்கிறார்.  பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் கடந்த 2019 ஆம் வருடத்தில் Royal Albert Hall ல் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது இருவரும் புன்னகையுடன் வந்த விருந்தினர்களுடன் கலந்துரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன், அதிர்ச்சியளிக்கும் செய்தியை மேகன் ஹரியிடம் கூறியிருக்கிறார். மேகன் அப்போது ஆறு மாதம் […]

Categories
உலக செய்திகள்

கால்வாயில் கிடந்த பிஞ்சு குழந்தையின் உடல்.. மனமுடைந்து போன இளம் தந்தை..!!

பிரிட்டனில் கால்வாயிலிருந்து பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் லீ கோல்ஸ் என்ற 27 வயதான நபர், கடந்த வியாழக்கிழமையன்று சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, வழியில் வால்சால் என்ற பகுதியில் இருக்கும் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். எனவே அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்போது காவல்துறையினர் அந்த குழந்தை தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த குழந்தையினுடைய […]

Categories
உலக செய்திகள்

பூமியை தொடப்போகும் 12-வது கொள்ளுப்பேரக்குழந்தை…. மிகுந்த மகிழ்ச்சியில் மகாராணியார்…. தகவல் வெளியிட்ட அரண்மனை….!!

பிரிட்டன் இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமான செய்தியை கேட்டு ராணியார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மகன் இளவரசர் ஆண்ட்ரூவின் மகள் பீட்ரைஸ் ஆவார். இவருக்கு கடந்த ஜூலை மாதம் எட்வர்டோ மாபெல்லி மோஸ்சி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அரச குடும்பம் தற்போது இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமான செய்தியை கேட்டு ராணியார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் […]

Categories
உலக செய்திகள்

“போதை பழக்கத்திற்கு அடிமையானேன்!”.. மனமுடைந்து பேசிய ஹரி..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாய் இறந்தபின்பு, அந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் போதைப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்திருக்கிறார்.  பிரிட்டன் இளவரசர் ஹரி ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகி தன் மனைவி மேகனுடன்  அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதிலிருந்து தன் குடும்பத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் தற்போது வரை பிரிட்டன் மக்கள் ராஜ குடும்பத்தை சேர்ந்த எவரும் இதுபோன்று பேசியதை பார்த்திருக்கவில்லை. எனவே மக்கள் பலரும் மேகன் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

“தாய் இறந்த போது நான் அடைந்த வேதனை!”.. இளவரசர் ஹரியின் மன கசப்புகள்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாய் கொலை செய்யப்பட்ட போது, தான் அடைந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கு கூட அரச குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.   பிரிட்டன் இளவரசர் ஹரி “The Me You can’t see” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை புதிதாக நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் அளித்த நேர்காணலில், எனக்காக என் குடும்பத்தினர் உதவுவார்கள் என்று கருதினேன். என் கோரிக்கை ஒவ்வொரு முறையும் அலட்சியப்படுத்தப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அனைத்தையும் எப்படியாவது சரி செய்யலாம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்…. மீறி நடந்த காவல்துறையினர்…. கண்டனம் தெரிவித்த கொரோனா கண்காணிப்பாளர்….!!

பிரிட்டனில் கொரோனா விதிமுறைகளை மீறி நடந்த காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா குறைந்து வருவதால் சில ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Shetland-Lerwick நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆறு நபர்கள் சேர்ந்து விருந்து விழா கொண்டாடியுள்ளனர். இந்த விருந்தில் மூன்று காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உட்பட விருந்தில் கலந்து கொண்ட 6 நபர்களுக்கும் அபராதம் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு தாக்குதலில் ஒருவர் பலி.. சம்பவ இடத்தில் ஆயுதங்களுடன் குவிந்த அதிகாரிகள்..!!

பிரிட்டனில், சாலையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிரிட்டனில் Hartcliffe என்ற இடத்தில் உள்ள Hareclive என்ற சாலையில் ஒரு நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதன் பின்பு ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஆயதமேந்திய காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து காயங்களுடன் கிடந்த இரண்டு இளைஞர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பில் 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

மேகனை பழி வாங்கிய இளவரசி.. என்ன நடந்தது.. வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசி பீட்ரைஸ், மேகனை சமயம் பார்த்து பழி வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.   பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன், இளவரசி யூஜீனியின் திருமணத்தின்போது தான் கர்பமடைந்திருக்கும் தகவலை தெரிவித்து மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். அதாவது மேகன் அன்றைக்கு தன் கணவர் இளவரசர் ஹரியிடம் கூட தெரியப்படுத்தாமல் திடீரென்று திருமணம் நடந்த போது அந்த செய்தியை வெளியிட்டார். இதனால் அரச குடும்பத்தினர் மற்றும் ஹரி அனைவரும் தர்மசங்கடத்தை உணர்ந்தனர். இந்நிலையில் ஹரி மற்றும் மேகன் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் மாயமான இளம்பெண்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

லண்டனில் இளம்பெண் ஒருவர் மாயமாகி ஒன்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  லண்டனில் வசிக்கும் 20 வயது இளம்பெண் அக்னீஸ் அகோம். இவர் கடந்த 9 ஆம் தேதி அன்று தன் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் மாயமானதாக கடந்த 11ஆம் தேதி அன்று காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். எனினும் கடந்த ஐந்து வருடங்களாக பிரிட்டனில் தான் வசித்து […]

Categories
உலக செய்திகள்

“மாணவியை விடாமல் துரத்தி சென்று பாலியல் தொல்லை!”.. பேராசிரியரின் மோசமான செயல்..!!

பிரிட்டனில் பேராசிரியர் ஒருவர், மாணவியிடம் மோசமாக நடந்து கொண்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டு 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் “வேலியே பயிரை மேய்ந்தாற்போல்” சில ஆசிரியர்கள் மாணவிகளிடம் மோசமாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தமிழரான கெரி தனபாலன் என்பவர், மாணவி ஒருவரிடம் தவறாக நடந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இவர் பிரிட்டனில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்…. இறப்பிற்குப் பின்னர் திருடப்பட்ட திருமண மோதிரம்….!!

பிரிட்டனில் இறந்த பெண் அணிந்திருந்த திருமண மோதிரம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மருத்துவமனை ஒன்றில் கடந்த 6ம் தேதி Princess Alexandra என்ற பெண் வீட்டில் வழுக்கி விழுந்து தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து Princess கணவர் அவர் அணிந்திருந்த ஆபரணங்களை வாங்க சென்றுள்ளார். அப்போது அவரின் கையில் இருந்த நிச்சய திருமண மோதிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியருக்கு சிறுமி அனுப்பிய ஆறுதல் கடிதம்.. அரண்மனையிலிருந்து வந்த இன்ப அதிர்ச்சி..!!

பிரிட்டனில் 5 வயது சிறுமி ஒருவர் இளவரசர் பிலிப் மறைவுக்கு பின் மகாராணியருக்கு ஆறுதல் கடிதம் எழுதிய நிலையில் அரண்மனையிலிருந்து அவருக்கு பதில் கடிதம் வந்துள்ளது.   பிரிட்டனிலுள்ள Scunthorpe என்ற பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி Erin Bywater. இவர் பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதை அறிந்தவுடன், அவரது மனைவியான மகாராணியாருக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், அன்பிற்குரிய மகாராணியார் அவர்களுக்கு, உங்களின் தொப்பிகள் மற்றும் ஆடைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். […]

Categories
உலக செய்திகள்

“இது மிக மோசமான செயல்!”.. ஹரி-மேகன் ரசிகர்கள் கொந்தளிப்பு..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ரசிகர்கள், இளவரசர் மைக்கேலின் பட்டங்கள் ஏன் பறிக்கப்படவில்லை என்று கொந்தளித்துள்ளனர்.  பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, பிரிட்டனை விட்டு வெளியேறி, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இதனால் அவர்களின் அரச குடும்ப பொறுப்புகளுக்கான பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பிரிட்டன் மகாராணியின் உறவினரான இளவரசர் மைக்கேல் அரச குடும்பத்திற்கான அதிகாரத்தை தன் சுய லாபத்திற்காக […]

Categories
உலக செய்திகள்

அமேசானின் புதிய திட்டம்…. பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்தும்…. அறிவிப்பு வெளியிட்ட இங்கிலாந்து வணிக செயலாளர்….!!

பிரிட்டனில் மேலும் 10,000 நபர்களை பணியமர்த்த போவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபல இணைய வழி பொருள் வாங்குதல் அமேசான் நிறுவனம் பிரிட்டனின் தற்போது 10,000 பேரை வேலைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அமேசானில் பணிபுரியும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது  இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க், கேம்பிரிட்ஜ் ஆகிய பகுதிகள் முழுவதும் வேலை செயல்பாடுகள் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவிலிருந்து வெளியேறு”.. இளவரசர் ஹரியை எதிர்க்கும் அமெரிக்க மக்கள்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்க அரசியல் சாசனம் தொடர்பில் கூறிய கருத்து அமெரிக்க மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளவரசர் ஹரி அமெரிக்காவில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்காவின் அரசியல் சாசனத்தின் முதல் சட்டத் திருத்தம் தொடர்பில் அதிகமாக பேச வேண்டியிருக்கிறது. ஆனால் அது எனக்கு புரியவில்லை. ஏனென்றால் அது பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் முதல் சட்டத் திருத்தம் ஆரம்பித்த இடத்திற்கு நான் செல்ல நினைக்கவில்லை. ஏனெனில் அது பெரிய […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இரண்டு சிறுமிகள்.. காவல்துறையினர் தேடுதல் வேட்டை..!!

பிரிட்டனில் கடந்த சனிக்கிழமை அன்று மாயமான இரண்டு சிறுமிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் சிறுமிகள் Ruby Cuskern(14) மற்றும் Megan Hardwick(15) ஆகிய இருவரும் மாயமானதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொது மக்களிடம் சிறுமிகள் குறித்து தெரியப்படுத்த அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர். மேலும் சிறுமிகள் கடந்த சனிக்கிழமை அன்று ஸ்டாக்டனின் ஈஸ்ட்போர்ன் என்ற பகுதியில் இருக்கும் வயல் ஒன்றில் இறுதியாக காணப்பட்டுள்ளனர். எனினும் அதன் பின்பு அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காவல்துறையினரிடம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசிக்கு ஏற்பட்ட நிலை.. ரத்த கட்டிகளால் அவதி.. சோகத்தில் குடும்பத்தினர்..!!

பிரிட்டன் இளவரசி  Michael of Kent (76) அரிய வகை ரத்த கட்டிகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசி Michael of Kent, இந்த வருடத்தின் தொடக்கத்தில் அஸ்ட்ராஜனகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரத்த கட்டிகள் ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதமாக தன் குடியிருப்பிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது இளவரசி தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் திடீரென்று உடல் நலம் பாதிப்படைந்த தால் உடனடியாக மருத்துவரை அணுகியுள்ளார்கள். தற்போது […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி.. போர்ச்சுக்கல் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!

போர்ச்சுகல் உள்துறை அமைச்சகம், வரும் 17ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் மற்றும் கொரோனா பாதிப்பு குறைந்த மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்களும் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.  போர்ச்சுகல் மே 17ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் மற்றும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் தங்கள் நாட்டிற்குள் வர அனுமதியளித்துள்ளது. போர்ச்சுகல் சுற்றுலா மையம், பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வரும் 17 ஆம் தேதி முதல் வரலாம் என்று அனுமதித்தற்கு அடுத்த […]

Categories
உலக செய்திகள்

“ஹரி முட்டாள் இல்லை!”.. எல்லாம் தெரிந்தே தான் செய்கிறார்.. முக்கிய நபர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி முட்டாள் கிடையாது என்று ராஜ குடும்பத்தின் வரலாற்று ஆசிரியர் தெரிவித்துள்ளார்.   பிரிட்டன் ராஜ குடும்பத்தினுடைய வாழ்க்கை வரலாற்று ஆசிரியராக இருப்பவர் ஏஞ்சலா லேவின். இவர் நேற்று “குட் மார்னிங் பிரிட்டன்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, மக்கள் இளவரசர் ஹரியை முட்டாள் என்கின்றனர், எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. அவர் அனைத்தையும் நன்கு உணர்ந்து தான் செய்து கொண்டிருக்கிறார். ஏனெனில் அவருக்கும் அவரது மனைவி மேகனுக்கும், அரச குடும்பத்தினர் அநியாயம் […]

Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. 29 நபர்கள் மீது குற்றச்சாட்டு.. கொடூர சம்பவம்..!!

பிரிட்டனில் ஒரு சிறுமியை சுமார் 7 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 29 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   பிரிட்டனில் சிறுவர்கள் தொடர்பான பழைய பாலியல் வழக்குகளை கண்டுபிடித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான பாலியல் வழக்குகள் வெளிவந்துள்ளன. இதில் அதிர வைக்கும் வகையில் ஒரு வழக்கில் சுமார் 29 குற்றவாளிகள் உள்ளனர். அதாவது இங்கிலாந்தில் இருக்கும் மேற்கு யார்ஷயரில், கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து 2010ற்குள் ஒரு சிறுமியை சுமார் 29 நபர்கள் சேர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“இதுவே கடைசி ஊரடங்காக இருக்க வேண்டும்!”.. பிரிட்டன் சுற்றுசூழல் செயலாளர் கருத்து..!!

பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாகவும், மீண்டும் உள்ளூர் பொது முடக்கம் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் சுற்றுச்சூழல் செயலாளரான George Eustice, கொரோனா திடீரென்று அதிகரிப்பதற்கு காரணம் தெரியவில்லை என்று கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளை பின்பற்றாத மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதுதான் தொற்று  அதிகரிக்க காரணம் என்று உறுதியாக கூற முடியாது. எனினும் நாட்டின் நிலையை தீவிரமாக கவனித்து வருகிறோம். கடைசி பொது முடக்கமாக இது அமைய வேண்டும். மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதை […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி-மேகனால் மற்றொரு சர்ச்சை.. இந்த நிறுவனத்துடன் இணைகிறார்களா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியால் அமெரிக்காவில் மற்றொரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது  இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஓப்ரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டி அரச குடும்பத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் புரோக்டர் & கேம்பிள் என்ற அமெரிக்க நுகர்வோர் பொருட்கள் நிறுவனமும், ஹரி-மேகன் தம்பதியும் சேர்ந்து  பெண்களுக்காக, சிறுமிகளுக்காக வருங்காலத்தை சிறப்பானதாக மாற்றவும் பாலின  சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவும், அதிக கருணை கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்காகவும் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. All of […]

Categories
உலக செய்திகள்

இந்த செயல்களில் ஈடுபடுவது உங்களின் விருப்பம்…. ஆனால் சிந்தித்து செயல்படுங்கள்…. அறிவுறுத்தல் விடுத்த அரசு….!!

பிரிட்டன் அரசு தடுப்பூசி போடாதவர்களுடன் பழகுவதற்கு சில அறிவுரைகளை விடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே பிரிட்டனில்  கொரோனாவின் தாக்கம் குறைந்து இருப்பதால் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு மே 17 […]

Categories
உலக செய்திகள்

குண்டூசிகள் பதிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள்…. நாய்கள் வைத்திருப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த மக்கள் குழு….!!

பிரிட்டனில் குண்டூசிகள் பதிக்கப்பட்டு ரொட்டிகள் போடப்பட்டுள்ளதால் நாய்கள் வைத்திருப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் Nottinghamshireu என்ற பகுதியில் உள்ள பூங்காவுக்கு ஒருவர் தனது நாயை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனிடையே பூங்காவில் சில ரொட்டித் துண்டுகள் கிடப்பதை  கண்ட அவரது நாய்  அதனை சாப்பிட சென்றுள்ளது. அப்போது திடீரென ரொட்டியை கவனித்த அவர் அதில் குண்டூசிகள் இருந்ததை பார்த்து தனது நாயை சாப்பிட விடாமல் தடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த கொடூரமான செயலை […]

Categories
உலக செய்திகள்

முக்கிய கட்டுப்பாடுகளிலிருந்து அடுத்த மாதம் தளர்வு.. பிரிட்டன் சுகாதார செயலாளர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், அடுத்த மாதத்தில் முகக்கவசம் அணிவது குறித்த கட்டுப்பாடுகளை அரசு மாற்றம் செய்யலாம் என்று கூறியுள்ளார். பிரிட்டனில் தற்போது விதிமுறைகளை தளர்த்தும் திட்டத்திற்குரிய நான்காம் கட்டமானது, ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி முகக்கவசம் அணிவது குறித்த விதிமுறைகள் மாற்றப்படும் என்று அமைச்சர்கள் கூறியதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த கோடை காலம் முதல் பொது போக்குவரத்து மற்றும் கடைகள் போன்ற பல இடங்களில் […]

Categories

Tech |