Categories
உலக செய்திகள்

மாயமான மலையேறும் பெண்… பிரபல நாட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரித்தானியாவைச் சேர்ந்த Esther Dingley எனும் மலையேறும் பெண் பிரான்சின் மலையடிவாரத்தில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த Esther Dingley (37) என்னும் பெண்ணும், அவருடைய கணவர் Daniel colegate என்பவரும் மலை ஏறுவதை பொழுதுபோக்காக வைத்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லையில் உள்ள 8,796 அடி உயரம் கொண்ட pico salvaguardia எனும் மலையேறும் summitpost-க்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Esther Dingley தனியாக சென்றதாகவும் அதன்பிறகு அவரை காணவில்லை […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸிற்கு மட்டும் கடும் விதிகள் எதற்காக..? உண்மையை கூறிய பிரிட்டன்..!!

பிரிட்டனின் போக்குவரத்து செயலாளரான கிராண்ட் ஷாப்ஸ், பிரான்ஸ் நாட்டை அம்பர் பிளஸ் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் பீட்டா மாறுபாடு தொற்று பரவியதால் அம்பர் பிளஸ் பட்டியலில் இணைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் பிரான்ஸ் நாட்டின் ரீயூனியன் தீவில் பீட்டா மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரியூனியன் தீவானது, பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசிலிருந்து சுமார் 6000 மைல் தூரத்திலிருக்கும் இந்திய பெருங்கடலில் இருக்கிறது. இந்த ரியூனியன் தீவில் மட்டுமல்லாமல், பிரான்ஸின் […]

Categories
உலக செய்திகள்

குற்றவாளியை மடக்கி பிடிக்கும் முயற்சி… காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு வீடியோ..!!

பிரான்சில் குற்றவாளி ஒருவர் காவல்துறையினர் மீது நாயை ஏவி கடிக்க செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று இரவு 9.30 மணிக்கு பிரான்சில் உள்ள Corbeil-Essonnes என்ற நகரில் குற்றவாளி ஒருவர் தான் வளர்த்து வந்த mastiff இன வளர்ப்பு நாயை காவல்துறையினர் மீது ஏவி கடிக்க செய்துள்ளார். இதையடுத்து அந்த நாயை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதையடுத்து காவல்துறையினர் குற்றவாளியான […]

Categories
உலக செய்திகள்

ஆமை போல செயல்பட்டு முன்னேறும் பிரான்ஸ்.. பிரிட்டனை பின்னுக்கு தள்ளுமா..?

தடுப்பூசி செலுத்தும் பணியில் பிரிட்டனை பிரான்ஸ் முந்தி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் இன்னும் 21 நாட்களில் பிரிட்டனை பிரான்ஸ் தடுப்பூசி திட்டத்தில் முந்தும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பிரான்சில் சராசரியாக தினசரி, 3,30,000 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே இந்த அடிப்படையில் முதலிடத்தில் பிரான்ஸ் இருக்கிறது. எனினும் பிரிட்டனில் தினசரி 44,000 நபர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனினும் பிரிட்டன் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியபோது வெகு தீவிரமாக செயல்பட்டது. அப்போது […]

Categories
உலக செய்திகள்

இவருக்கு இணை எவரேனும் உண்டா….? சிறுவனின் நீண்ட நாள் கனவு…. பலிக்க வைத்த தந்தை…!!

எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ள மகனின் நீண்ட நாள் ஆசை ஒன்றை தந்தையான ஜூன் லுயிஸ் கான்ஸ்டான்ஸா நிறைவேற்றியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் ஆஸ்கார் கான்ஸ்டான்ஸா என்ற 16 வயது சிறுவன் சக்கர நாற்காலியில் தனது வாழ்வை கழித்துக் கொண்டிருந்தான். இதனையடுத்து ஆஸ்கார்  நீண்ட நாள் ஆசையை தனது தந்தையான ஜூன் லூயிஸ் கான்ஸ்டான்ஸாவிடம்  கூறியுள்ளார். அதில் “தான் எழுந்து நடக்க ஒரு ரோபோ வேண்டும்” என்று கேட்டுள்ளார். மேலும் ஜூன் லுயிஸ் கான்ஸ்டான்ஸா ஒரு ரோபோட்டிக் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 10 வருஷத்துல இதுக்கு அவசியமே இருக்காது..! மகனுக்காக உருவாக்கப்பட்ட ரோபோ… இன்ஜினியர் நம்பிக்கை..!!

பிரான்சில் ரோபோட்டிக் இஞ்சினியர் ஒருவர் நடக்க முடியாத தனது 16 வயது மகனை எழுந்து நடக்க வைப்பதற்காக ரோபோ உருவாக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ரோபோட்டிக் என்ஜினீயரான ஜீன் லூயிஸ் கான்ஸ்டான்ஸா என்பவர் நடக்க முடியாத நிலையில் சர்க்கர நாற்காலியில் முடங்கியிருந்த தனது மகன் ஆஸ்கார் கான்ஸ்டான்ஸா-வின் ( 16 ) கோரிக்கைக்கு இணங்க பிரத்தியேக ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த ரோபோ ஆஸ்கார் “ரோபோ, எழுந்திரு” என்று உத்தரவிட்டால் அவரை தாங்கிக்கொண்டு மெதுவாக […]

Categories
உலக செய்திகள்

யார் இந்த பெண்மணி….? சிறை சென்ற முன்னாள் நீதித்துறை அமைச்சர்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

பிரான்சின் அதிபர் ஆவார் என எதிர்ப்பார்த்த சமயத்தில் rachida Dati சிறைக்கு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள விண்ட்சர் மாளிகையில் வைத்து அந்நாட்டின் மகாராணியார் மற்றும் இளவரசர் பிலிப்புக்கும்  விருந்தோம்பல் அளித்தவர் 55 வயதான பெண் Rachida Dati.  இவர் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஆவார். இதனை அடுத்து Rachida Datiயும்  முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோஸியும் அரசியல் நண்பர்கள் ஆவர். இவர் ரெனால்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Carlosக்கு […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்தோரின் தனியுரிமையை மீறிட்டாங்க..! பிரபல நாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை… வெளியான முக்கிய தகவல்..!!

கண்காணிப்பு ட்ரோன்களை பயன்படுத்தி எல்லையில் புலம்பெயர்ந்தோரை கண்டுபிடிப்பதற்கு பிரான்சுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் தகவல் மற்றும் சுதந்திரத்திற்கான தேசிய ஆணையம் (CNIL) புலம்பெயர்ந்தோரின் தனியுரிமையை பிரான்ஸ் அரசு ட்ரோன்களை பயன்படுத்தி மீறி இருக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் பிரான்ஸ் அரசு ட்ரோன்களை பிற நோக்கங்களுக்காகவும், கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கும் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக CNIL தெரிவித்துள்ளது. இதற்கிடையே உச்சநீதிமன்றம் பிரான்சின் தலைநகரான பாரீஸில் கடந்த மே மாதம் ட்ரோன்களை காவல்துறை கண்காணிப்பு பயன்படுத்துவதற்கு தடை […]

Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து வரும் புலம்பெயர்வோர் பிரச்சனை!”.. பிடிவாதம் பிடிக்கும் பிரான்ஸ்.. பிரிட்டனுக்கு ஏற்பட்ட தலைவலி..!!

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து நுழைந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தை பிரான்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை. பிரிட்டன் நாட்டிற்குள், பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாயின் வழியே படகுகளில் பயணித்து புலம்பெயர்ந்த மக்கள் புகுந்து வருகிறார்கள். இது தொடர்ந்து வருவதால், பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் பிரிட்டன் அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, ஆங்கில கால்வாய்க்குள் புகும் புலம்பெயர்ந்த மக்களின் படகுகளை நிறுத்தி, அதனை பிரிட்டன் எல்லையை தாண்டி விட்டுவிடவேண்டும் என்பது தான் இத்திட்டம். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் நீக்கப்படும் கட்டுப்பாடுகள்… பிரபல நாட்டில் புதிய அறிவிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரித்தானியாவுக்கு பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து பிரான்ஸ் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் “ஆம்பர் பிளஸ்” பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட உடன் அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லை. மேலும் பீட்டா வகை கொரோனா வைரஸ் பிரான்சில் சுமார் 3.7 சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மேற்கொள்ளும் புதிய விதிமுறை.. பிரான்ஸை நாட்டை இந்த பட்டியலில் இணைத்தது..!!

பிரிட்டன் நாட்டின் அம்பர் பட்டியலில், பிரான்ஸ் அடுத்த வாரத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு, ஆம்பர் பட்டியலில் பிரான்சை இணைத்தால் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் செல்லும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பயணிகள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். எனினும் பிரிட்டன் அரசு கடந்த வாரத்தில் அம்பர் பிளஸ் என்ற புதிய வகை பிரிவை உருவாக்கியிருக்கிறது. இந்த பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்லும் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் தனிமைப்படுத்தப்படுவார்கள். பிரிட்டன் அரசு பிரான்சில் பீட்டா மாறுபாடு […]

Categories
உலக செய்திகள்

வன்முறையாக வெடித்த போராட்டம்… தலைநகரில் நடந்த பயங்கரம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வன்முறையாக வெடித்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அந்நாட்டு அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை அழிப்பதாக கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி சுமார் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

வன்முறையாக மாறிய போராட்டம்… ஏராளமான காவல்துறையினர் படுகாயம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரான்ஸ் நாட்டு மக்கள் கொரோனா கட்டுப்பாடுக்கு எதிராக நடத்திய போராட்டமானது திடீரென வன்முறையாக மாறியதில் ஏராளமான காவல்துறையினர் பலத்த காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் சுமார் 161000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும், 11000 பேர் தலைநகர் பாரிசில் கலந்து […]

Categories
உலக செய்திகள்

நிறுத்திவைக்கப்பட்ட விண்ணப்பங்கள்…. மீண்டும் விநியோகம்…..மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி….!!

மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விசா தொடர்பான விண்ணப்பங்களை 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பிரான்ஸ் அரசு வழங்க தொடங்கியுள்ளது. பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா காரணமாக விசா தொடர்பான விண்ணப்பங்கள் அளித்தலை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. இந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட நிலையில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்நாட்டு அரசானது விசா தொடர்பான விண்ணப்பங்களை வழங்க தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

ரயிலில் பயணிக்கும் போது இதை கண்டிப்பா கொண்டு வரணும்…. இல்லையெனில் பயணம் தடைபடும்…. அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்….!!

பிரான்ஸில் ஆகஸ்ட் மாதம் முதல் ரயில் பயணம் செய்பவர்கள் சுகாதார அனுமதி சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் ஏராளமான ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே டெல்டா வைரஸ் பரவல் காணப்படுவதால் தடுப்பூசியின் மற்றும்  கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் ரயில்வே நிர்வாகம் SNCF அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உளவு பார்க்கப்படும் தலைவர்கள்…. தொலைபேசியை மாற்றிய அதிபர்…. பரவும் அதிர்வலைகள்…!!

பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரான்ஸ் அதிபர் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் இமானுவேல் மேக்ரோன் தொலைபேசி மற்றும் அதன் எண்ணையும் மாற்றியுள்ளார். உலக அளவில் பல்வேறு முக்கிய தலைவர்களின் தொலைபேசிகள் பெகாசஸ் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.  பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் இந்த பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவரின் ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இமானுவேல் மேக்ரோன் அவரின் தொலைபேசி மற்றும் அதன் எண்ணையும் மாற்றியுள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் அத்துமீறும் பிரான்ஸ்.. வெளியான வீடியோ..!!

பிரிட்டன் அரசிடம் பணத்தை பெற்றுக்கொண்ட பின்பும், பிரான்ஸ் எல்லை பாதுகாப்பு படையினர் புலம்பெயரும் மக்களை நாட்டிற்குள் விட்டுச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு தங்கள் நாட்டிற்குள் பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் சட்டவிரோதமாக வருவதை தடுக்க அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினருக்கு 54 பில்லியன் பவுண்டுகள் கொடுத்திருக்கிறது. அதன் பின்பும் பிரான்ஸின் கடற்படையினர் புலம்பெயர்ந்த மக்களை பிரிட்டன் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டுச்செல்வதாக தெரிய வந்துள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனம், இக்காட்சியை வீடியோ எடுத்திருக்கிறது. அதில், ஒரு பத்திரிகையாளர், பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

“பெகாஸஸ் உளவு மென்பொருள் பிரச்சனை!”.. பிரான்ஸ் அதிபர் தலைமையில் திடீர் கூட்டம்..!!

இஸ்ரேல் நாட்டின் பெகாஸஸ் உளவு மென்பொருளை வைத்து பிரான்ஸ் அரசை எதிர்த்தவர்களை உளவு பார்த்தார்கள் என்று கூறப்பட்டதால், இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான விசாரணை இன்று துவக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள NSO என்ற நிறுவனம் பெகாஸஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்தது. இதனை வைத்து இந்தியா போன்ற 50 நாடுகளின் அரசை எதிர்த்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடத்தில் இது நடந்திருக்கிறது. எனினும் தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டுடன் ஒப்பந்தம்… இந்தியா வந்து சேர்ந்த விமானங்கள்… வெளியான முக்கிய தகவல்..!!

மூன்று ரபேல் வகை போர் விமானங்கள் பிரான்ஸிலிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளது. ரபேல் வகை போர் விமானங்களை பிரான்சிடமிருந்து இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குகிறது. இதற்கிடையே ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 விமானங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி வாங்கப்படுகிறது. மேலும் இதுவரை இந்தியாவுக்கு 21 விமானங்கள் கொண்டுவரப்பட்டதோடு அவை அனைத்தும் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று பிரான்சிலிருந்து மூன்று ரபேல் போர் விமானங்கள் ஏழாவது முறையாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளன. அந்த விமானங்கள் இந்தியாவிற்கு 8,000 […]

Categories
உலக செய்திகள்

இது இல்லாம வெளிய போகாதீங்க…. முககவசம் இனி வேண்டாம்…. தகவல் தெரிவித்த பிரபல நாடு…!!

பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் கொரோனா வைரஸின் நான்காவது அலையை முன்னெச்சரிக்கையுடன் கையாள்வதற்காக ஹெல்த் பாஸ்போர்ட் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் பல்வேறு விதமாக கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸில் பரவி வரும் டெல்டா வைரஸ் பரவலின் காரணமாக அந்நாட்டு அரசு சில விதிமுறைகளை விதித்துள்ளது. இதனை அடுத்து நான்காவது அலையை முன்னெச்சரிக்கையுடன் காத்துக் கொள்வதற்காக பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு இன்று முதல் ஹெல்த் பாஸ்போர்ட் அவசியம் என்று […]

Categories
உலக செய்திகள்

செல்போன் வேவுபார்ப்பு – விசாரணை நடத்த உத்தரவு…!!!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் பெகாசஸ் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானின் செல்போன்  எண் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிக், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கு ஒரு முடிவே கிடையாதா!”.. நொந்து போன பிரிட்டன் பணம் கொடுக்க முடிவு..!!

பிரிட்டன் நாட்டிற்குள் புலம்பெயர்ந்த மக்கள் அதிகமானோர் ஆங்கில கால்வாயை தாண்டி  வருவதை தடுக்க பிரெஞ்சு எல்லை அதிகாரிகளுக்கு அதிக பணம் வழங்க பிரிட்டன் அரசு தீர்மானித்திருக்கிறது. பிரிட்டனில் இந்த ஆண்டில் மட்டும் தற்போது வரை 8452 புலம்பெயர்ந்த மக்கள், ஆங்கில கால்வாயை தாண்டி நாட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 430 நபர்கள் ஒரு படகில் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் கடல் எல்லைக்குள் வந்துள்ளார்கள். https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/20/7508350332734359381/640x360_MP4_7508350332734359381.mp4 எனவே இதற்கு ஒரு முடிவு கட்ட […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கிரீன் சிக்னல் கொடுத்தாச்சு…. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி…. ஒப்புதல் வழங்கிய பிரான்ஸ்….!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரான்சிலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள மக்கள் வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் சான்றளித்த பைசர், மாடர்னா, ஆஸ்ட்ராசெனெகா மற்றும் ஜான்சன்& ஜான்சன் போன்ற தடுப்பூசிகளை மட்டுமே பிரான்ஸ் அரசு அங்கீகரித்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் அனுமதித்துள்ளது. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி அனுமதித்த 14வது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக பிரான்ஸ் உள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

சிறுவனின் சடலம் கண்டெடுப்பு…. மனநலம் பாதித்தவர் செய்தாரா…? சந்தேகத்தில் போலீசார்…!!

சிறுவனை கொன்ற வழக்கில்  மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீசாரால்  சூட்டுக் கொல்லப்பட்டார். பிரான்ஸ் நாட்டில் Marseille என்ற பகுதியில் ஒரு சிறுவன் காணாமல் போனதாக  காவல்நிலையத்தில் அவனது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் பிரான்சில் Tarascon  என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறுவனின் தலையற்ற உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மனநலம் பாதித்த ஒருவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு அந்த வீட்டில் சிறுவனின் தலை மற்றும் கைகள் ஒரு பையில் கிடைத்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

“இதெல்லாம் ரொம்ப ஓவர்!”.. பிரிட்டனை சாடிய பிரான்ஸ் அமைச்சர்..!!

பிரான்ஸ் அமைச்சர் இரண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் தனிமைப்படுத்துவது ரொம்ப ஓவர் என்று பிரிட்டனை குறை கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் செல்லும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி இருந்தாலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இது தொடர்பில் பிரான்ஸ் அமைச்சர் Clement Beaune என்பவர் கூறுகையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். “இது டூ மச்” என்று கூறியுள்ளார். மேலும் பிரிட்டன், பீட்டா வைரஸ் பிரான்சில் பரவியதால் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

மக்களே கவனமா இருங்க..! பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… சுகாதார அமைச்சர் தகவல்..!!

பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுபாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். பிரான்சில் பீட்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே பிரான்சிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரான்சில் கொரோனோ தடுப்பு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழா ….. கோலாகல கொண்டாட்டம் …. குவிந்த நட்சத்திரங்கள் ….!!!

74-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் புகழ்பெற்ற பால்ம் டோர் விருதானது ‘டைடேன்’ திரைப்படத்துக்கு  வழங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற  திரைப்பட விழாவான ‘கேன்ஸ் திரைப்பட விழா’ ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில்  நடத்தப்பட்டு வருகிறது . இந்த விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது .ஆனால் கடந்த ஆண்டு நடக்கவிருந்த இந்த  திரைப்பட விழா கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி 17-ம் […]

Categories
உலக செய்திகள்

சரிந்து விழுந்த மின்கோபுரம்…. பலியான பணியாளர்கள்…. விசாரணை நடத்த உத்தரவு…!!

பிரான்ஸ் நாட்டில் கட்டுமான பணிகளின் போது தீடிரென மின்கோபுரம் சரிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் வடக்கிலுள்ள பாரா மாகாணத்தில் பகாஜா என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மின்கோபுரம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது தீடிரென மின்கோபுரம் சரிந்து விழுந்ததில் அங்குள்ள பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனை அறிந்த மீட்புக்குழு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். அதில் 7 பேர் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் தீவிரமடையும் ஆர்ப்பாட்டம்.. புதிய கொரோனா சட்டத்திற்கு எதிர்ப்பு..!!

பிரான்சில் கொண்டுவரப்பட்ட புதிய கொரோனா சட்டத்தை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் அதிகரித்திருக்கிறது. பிரான்ஸிலுள்ள லியோன், பாரிஸ், லில்லி மற்றும் மார்சேய் போன்ற இடங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், நாட்டில் பரவும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். அந்த வகையில், சுகாதார பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே, திரையரங்கங்கள், உணவகங்கள் மற்றும் பார் ஆகிய இடங்களுக்கு செல்ல […]

Categories
உலக செய்திகள்

என்ன விசேஷம் அங்க….? வண்ணம் மிகுந்த வான வேடிக்கைகள்…. அணிவகுப்பு நடத்திய வீரர்கள்…!!

பிரெஞ்சு நாட்டின் தேசிய தினமானது கோலாகலமாக வான வேடிக்கைகளுடன் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் அந்நாட்டின் தேசிய தினத்தை நேற்று கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்துக்கு அருகில் பிரஞ்ச் தேசியக்கொடியின் வண்ணங்களில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. மேலும் பாரீஸில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் அணிவகுப்பு  நடத்தியுள்ளனர். பிரெஞ்சு நாட்டின் தேசிய தினமானது அந்நாட்டின் பிரெஞ்சுப் புரட்சியின் போது திருப்புமுனையாக அமைந்த பாஸி சிறையை பொதுமக்கள் உடைத்து அங்குள்ள […]

Categories
உலக செய்திகள்

சிவப்பு பட்டியலில் இணைக்கப்படுமா பிரான்ஸ்..? பிரிட்டன் அரசு ஆலோசனை..!!

பிரிட்டன் அமைச்சர்கள் இணைந்து பிரான்சை சிவப்புப் பட்டியலில் சேர்க்க ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அமைச்சர்கள் பீட்டா கொரனோ வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிரான்சை சிவப்புப் பட்டியலில் இணைப்பது தொடர்பில் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டன் அரசு மிகவும் அதிக விதிமுறைகளை கடைபிடிக்கும் நாடுகளை சிவப்புப் பட்டியலில் வைத்திருக்கிறது. அந்த நாடுகளுக்கு செல்லும் பிரிட்டன் மக்கள் நாடு திரும்பியவுடன் அரசு நியமித்திருக்கும் ஓட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டனின் மிக ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் புதிய கட்டுப்பாடுகள்… பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா… வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்ஸ் பாராளுமன்றத்தில் காபேக்கள் மற்றும் உணவகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கும் மசோதா சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகின்ற ஜூலை 21-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்திருந்தார். மேலும் காபேக்கள் மற்றும் உணவகங்களில் pass sanitaire கட்டாயமாக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் பாராளுமன்றத்தில் காபேக்கள் மற்றும் உணவகங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு […]

Categories
உலக செய்திகள்

பாரீஸ் நகரமே பற்றி எரியும் அவலம்.. ஜனாதிபதியின் புதிய விதிக்கு எதிர்ப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் புதிதாக கொரோனா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியுள்ளது. பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன், மருத்துவமனை பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும். உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்திய பாஸ்போர்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது ஜனாதிபதி, கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டு மக்களைப் பிரிப்பதற்காக தடுப்பூசி பாஸ்போர்ட்கள் பயன்படுத்தப்படாது என்று உறுதி கூறியிருந்தார். எனினும் ஜூலை மாதத்தில் விருந்தோம்பல், இசை நிகழ்ச்சிகள் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! 4,400 கோடி ரூபாய் அபராதமா…? வசமாக சிக்கிய பிரபல நிறுவனம்…. பிரான்சின் அதிரடி அறிவிப்பு….!!

பிரான்சிலுள்ள பிரபல அமைப்பு ஒன்று இணையதள நிறுவனமான கூகுளுக்கு சுமார் 50 கோடி யூரோவை அபராதமாக விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஊடகங்கள் தாங்கள் சேகரிக்கும் செய்திகளை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு பிற ஊடகங்கள் வெளியிடும் செய்தியினை பிரபல வலைதள நிறுவனமான கூகுள் தங்களது தேடுதல் பக்கத்தில் பயன்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணையை பிரான்ஸின் போட்டியிடும் ஒழுங்காற்று அமைப்பு நடத்தி வந்துள்ளது. அதன் முடிவில் கூகுள் நிறுவனத்திற்கு போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு சுமார் 50 கோடி யூரோவை இந்திய […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோவா …. தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் மக்கள் …. பிரபல நாடு சாதனை ….!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா  தடுப்பூசி  போட்டுக் கொள்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை 9 லட்சத்து 26 ஆயிரத்து மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இது அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்காக  அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும் […]

Categories
உலக செய்திகள்

அமலுக்கு வரபோகும் புதிய விதிமுறை…. ஒரே நாளில் 9 லட்சம் தடுப்பூசி முன்பதிவு….!!

புதிய கொரோனா விதிமுறையால் ஒரே நாளில் பிரான்ஸில் 9 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகள் போட முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே டெல்டா  கொரோனா தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அரசின் அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி  கூறுகையில் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் செல்லும் பிரிட்டன் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வெளியான தகவல்..!!

பிரான்ஸ் நாட்டிற்கு பிரிட்டனிலிருந்து வரும் மக்கள் 24 மணி நேரத்திற்குள்ளாக கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே பிரிட்டன் அரசு அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிரிட்டன் மக்கள்  பிரான்ஸ் நாட்டிற்கு வரும்போது 24 மணி நேரத்திற்குள்ளாக PCR சோதனை செய்து அதில் தொற்று இல்லை என்று முடிவுகளை காட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Parmi les pays […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதிகள்…. மோசமான நிலைமையில் சிக்கி தவிக்கும் பிரபல நாடு…. பிரான்ஸ் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு….!!

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அங்கு தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருக்கும் தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் செலுத்துவதற்கு தொடங்கியுள்ளார்கள். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததே இதற்கு காரணமாக திகழ்கிறது. மேலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் என்னும் நகரை கைப்பற்றியதோடு மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் […]

Categories
உலக செய்திகள்

இனி யாருமே என்னை தொட முடியாது..! பாக்ஸராக மாறிய இளம்பெண்… வெளியான நெகிழ்ச்சி தகவல்..!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பல இன்னல்களுக்கு பிறகு வாழ்க்கையை தைரியத்துடன் எதிர்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Kheira Saadi (32) எனும் இளம்பெண் தனது சிறுவயதில் தந்தை சிறைக்கு சென்று விட்டதால் குழந்தை காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு அவருக்கு பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல இன்னல்கள் நேர்ந்துள்ளது. அதன் பிறகு தனது 14 வயதில் யாராவது தன்னை ஆதரிக்க மாட்டாரா என ஏங்கிய போது தவறான […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்.. அனைத்து இடங்களுக்கும் சான்றிதழ் அவசியம்.. பிரதமர் அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசாங்கம், டெல்டா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை கையாண்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஷாப்பிங் மால், மருத்துவமனை, நீண்ட தூர ரயில் பயணம் மற்றும் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறப்பு கொரோனா சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று பிரதமர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருக்கிறார். இந்த கொரோனா சான்றிதழ் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது அல்லது சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை காட்டும். 12 வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் திரையரங்கம், […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் முகக்கவசத்தை கட்டாயமாக்கும் நாடு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சில மாவட்டங்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல நாடுகளை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா குறைய தொடங்கியது. எனவே மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைந்தது. எனவே கடற்கரை மாவட்டங்களுக்கு வெளியே கட்டாய முகக்கவசம் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்டா வைரஸ் பரவல் தொடங்கியதால் நாட்டின் பல மாவட்டங்களில் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இல்லாத ஒன்றை இருப்பது போல் நினைத்த நபர்.. குடும்பத்தையே கொன்று குவித்த அவலம்..!!

பிரான்சில் ஒரு நபர் தன் உறவினர்கள் தங்கப்புதையலை தன்னிடம் மறைப்பதாக கருதி குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொடூரமாக கொன்றுவிட்டார். பிரான்ஸில் இருக்கும் Orvault என்ற இடத்தில் வசிக்கும் 50 வயது நபர் Hubert Caouissin. இவர் தன் உறவினர்கள் Pascal, Brigitte என்ற தம்பதி மற்றும் அவர்களின் பிள்ளைகள் Sebastien, Charlotte  போன்றோரை அவர்களது வீட்டிலேயே கொடூரமாக கொன்றுள்ளார். அதாவது Hubert, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கனடாவிற்கு, பிரான்ஸில் உள்ள ஒரு வங்கியிலிருந்து தங்க கட்டிகள் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல வேண்டாம்…. அரசு எச்சரிக்கை….!!!!

‘இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 96 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வரும் போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல […]

Categories
உலக செய்திகள்

பிரான்சுக்கு வந்த நிலையில் தப்பிய 7 பெண்கள்…. சவுதி இளவரசர் மீது புகார்…. விசாரணையை தொடர்ந்த அதிகாரிகள்….!!

சவுதி இளவரசர் மீது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏழு பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 7 பணிப்பெண்கள் பிரான்ஸ் பாரிஸ் காவல்துறை அதிகாரிகளிடம் சவுதி இளவரசர் ஒருவர்  மீது புகார் அளித்துள்ளனர். அவரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை. பணிப்பெண்கள் அளித்துள்ள புகாரில் அவர்கள் சவுதி நாட்டில் உள்ள ஒரு இளவரசர் வீட்டில் பணி செய்து வருவதாகவும் கோடை விடுமுறைக்காக இளவசர் பிரான்சுக்கு அழைத்து வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் நாங்கள் பல […]

Categories
உலக செய்திகள்

கேன் திரைப்படவிழா ஆரம்பம்.. பிரான்சில் கூடிய திரையுலக பிரபலங்கள்..!!

பிரான்சில், உலக அளவில் பிரபலமடைந்த கேன் திரைப்படத்தின் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. கேன் திரைப்பட விழாவானது, 74வது வருடமாக நடைபெறவிருக்கிறது. இதில் திரையுலக நடிகர், நடிகைகள் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட சிறப்பான படங்கள் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றியே இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்பே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். கேன் திரைப்பட விழா நிர்வாகமானது, முத்தமிடுதல் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூன்று தவணை தடுப்பூசி… பிரான்ஸ் நாட்டில் அறிமுகம்…!!

பிரான்ஸ் நாட்டில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு மூன்றாவது தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் இந்த தொற்று காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் போடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் இரண்டு தவணையை போடப்பட்டு வருகின்றது. அதேபோல் பிரான்ஸ் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு ஏற்பட்ட நிலை.. பிரெஞ்சு பனிச்சறுக்கு மையங்கள் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் மக்களுக்கு பிரெக்சிட் காரணமாக பிரான்சில் வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் பிரான்சில் பனிச்சறுக்கு சீசனில் பணியாற்றுவது, நீண்ட நாட்களாக மிக பிரபலமானதாக உள்ளது. எனினும் பிரெக்சிட் காரணமாக இதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது பணி கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கும், பிரெஞ்சு வாழிட உரிமம் உள்ளவர்களுக்கும் தான் பனிச்சறுக்கு மையங்களில் பணி என்று அறிவித்துள்ளது. மேலும் பிற பிரிட்டன் மக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரெஞ்சு […]

Categories
Uncategorized

இவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்…. அறிவிப்பு வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்….!!

தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் முடிவு பற்றிய அறிவிப்பு ஒன்றை பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர்  Olivier Véran தடுப்பூசிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்த முடிவுகள் மக்களைச் சார்ந்தது என்றும் ஆனால் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

10 வயது சிறுமிக்கு 80 வயது முதுமை தோற்றம்.. அரியவகை நோயால் உயிரிழப்பு..!!

உக்ரைனில் 10 வயதுடைய ஒரு சிறுமி 80 வயது முதுமை தோற்றம் அடைந்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உக்ரேனில் உள்ள Vinnytsia பகுதியில் வசிக்கும் Iryna Khimich என்ற 10 வயது சிறுமி progeria என்னும்  அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சிகிச்சைக்காக அவர் வரைந்த ஓவியங்களை விற்பனை செய்து நிதி திரட்டியிருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு முக்கிய சிகிச்சைக்காக செல்ல வேண்டியபோது திடீரென்று சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயார் இணையதளப்பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டணம்…. நடைமுறைக்கு வரப்போகும் புதிய திட்டம்…. வெளியான முக்கிய தகவல்….!!

பிரான்ஸ் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை கட்டண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை கட்டணங்கள் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அரசின் பேச்சாளர் Gabriel Attal வெளியிட்டுள்ள அறிவிப்பில் கோடைகாலத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு PCR […]

Categories

Tech |