Categories
உலக செய்திகள்

அடப்பாவமே…! பாரம்பரியம்னு சொல்லி இப்படியா தீ வைக்கணும்…. எச்சரிக்கையை மீறிய பொதுமக்கள்…. என்ன செய்யப்போகிறது அரசு….?

பிரான்சில் அரசின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் 2022 ஆம் ஆண்டின் புத்தாண்டை பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் நோக்கில் சுமார் 874 கார்களை தீவைத்து எரித்துள்ளார். பிரான்சிலுள்ள Strasbourg பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றவர்களை விட முக்கியமாக ஆண்டுதோறும் புதுவருடப் பிறப்பை பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் நோக்கில் கார்களை தீவைத்து எரித்து வருகிறார்கள். இந்த மோசமான செயலை தடுக்க பிரான்ஸ் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் கொரோனா காரணமாக காரை தீ வைத்து எரித்தல் […]

Categories
உலக செய்திகள்

“பாப்கானு”க்கு தடையா..? பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு…. காரணம் என்னன்னு தெரியுமா…? இதப் பாருங்க….!!

பிரான்சில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் காரணமாக புதிய தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் உலக நாடுகள் அனைத்திற்கும் மிக வேகமாக பரவி வருகிறது. ஆகையினால் உலக நாடுகள் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளை தங்கள் அரசாங்கத்திற்குள் இருக்கும் பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டில் ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை முன்னிட்டு திரையரங்குகளில் சிற்றுண்டிகள் மற்றும் பாப்கானிற்கு தடை […]

Categories
உலக செய்திகள்

நொடிக்கு 2 பேருக்கு கொரோனா…. அபாய கட்டத்தில் சிக்கிய பிரபல நாடு…. அதிர்ச்சி தகவல்….!!!!

உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரான்சில் நேற்று முன்தினம் 2,08,000 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன் கூறியது, ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் மருத்துவமனைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிரான்ஸ் மட்டுமில்லாமல் பிரிட்டன்,இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளிலும் கொரோனா பரவல் […]

Categories
உலக செய்திகள்

“இது என்ன அதிசயமா இருக்கு”… ஒருவர் 18 வயதில் தவறவிட்ட பரிசு…. இதோ ஒரு சுவாரசிய தொகுப்பு…..!!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் தனது 18 வயதில் தொலைத்த சைக்கிள் மீண்டும் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் பிரான்சிலுள்ள Hérault என்ற கிராமத்தில் Joseph Carayon என்பவர் வசித்து வருகிறார். Josephக்கு 10 வயது இருக்கும்போது 1946 ஆம் ஆண்டு 2-ம் உலகப்போரிலிருந்து திரும்பிய அவரது தந்தை, அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு சைக்கிளை செய்து கொடுத்திருக்கிறார். அந்த அரிய சைக்கிளை Joseph தனது 18 வயதிலேயே தொலைத்துவிட்டதாக தெரிகிறது. […]

Categories
உலக செய்திகள்

மக்களே அலட்சியமா இருக்காதீங்க…! ‘கொரோனா’வால் நிலைமை இன்னும் மோசமாகும்!…. சுகாதார நிபுணர்கள் சொன்ன அந்த உண்மை..?!!!!

ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சில நாட்களாக பிரான்சில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ..! மீண்டும் முழு ஊரடங்கு?…. அச்சத்தில் பொதுமக்கள்…. பிரதமர் அலுவலகம் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொது முடக்கம் அமலுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரான்சில் கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனா தொற்று பாதிப்பு புதிதாக 91,608 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. இதனால் மக்களிடையே கொரோனா தொற்று குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கமோ எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்காமல் மூடல்கள், விடுமுறை நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு, பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றை […]

Categories
உலக செய்திகள்

2 டோஸ்ஸையும் போட்டவங்க எப்போ “பூஸ்டர் தடுப்பூசி” போடணும்னு தெரியுமா…? இதோ… தகவல் வெளியிட்ட ஆணையம்….!!

பிரான்ஸ் நாட்டின் உயர் சுகாதார ஆணையம் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் எப்போது பூஸ்டர் டோஸ்ஸை போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாகச் எடுத்துக்கொண்ட பெரியவர்கள் மட்டும் அடுத்ததாக பூஸ்டர் டோஸ்ஸை 5 மாதங்கள் கழித்து செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் உயர் சுகாதார ஆணையம் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் அடுத்த 3 மாதங்களில் பூஸ்டர் டோஸ்ஸை போடுவதற்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் உயர் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ, ஆபத்து!”…. பூங்காவிலிருந்து தப்பிய பயங்கர மிருகங்கள்…. பிரான்சில் பரபரப்பு….!!

பிரான்ஸ் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிலிருந்து சுமார் 9 ஓநாய்கள் தப்பியோடியதால், அதிகாரிகள் அந்த பூங்காவை தற்காலிகமாக அடைத்திருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் இருக்கும் Montredon-Labessonnie-ல் Trois Vallees என்ற உயிரியல் பூங்கா அமைந்திருக்கிறது. அங்கிருந்து சில ஓநாய்கள் தப்பிவிட்டன. அப்பூங்காவில், பார்வையாளர்களுக்கான நேரத்தில், ஓநாய்கள் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து, வேலியை தாண்டி தப்பித்திருக்கிறது. எனினும், பூங்காவிலிருந்து அவை வெளியேறவில்லை. இந்நிலையில், தப்பித்த அந்த ஓநாய்களில் கொடூரமாக நடந்துக்கொண்ட ஓநாயை  சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப விரும்பவில்லை!”….. பிரான்ஸ் அரசு உறுதி….!!

பிரான்ஸ் அரசு, ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப விரும்பவில்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா தன் படைகளை குவித்திருப்பதால், அங்கு பதற்றம்  நிலவுகிறது. எனவே பல நாடுகளும், உக்ரைன் நாட்டை கைப்பற்றினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான Florence Parly தெரிவித்துள்ளதாவது, ரஷ்ய நாட்டின் மீது முன்பே பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினைகள் மேலும் […]

Categories
உலக செய்திகள்

“புத்தாண்டு கொண்டாட்டம் கிடையாது!”…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

பிரான்ஸ் அரசு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட தடை அறிவித்திருக்கிறது. பிரான்ஸ் பிரதமரான ஜீன் காஸ்டெக்ஸ், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, கொரோனாவின்  ஐந்தாம் அலை அதிகமாக பரவி வருகிறது. மேலும் வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஒமிக்ரான் பரவலால், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, விடுமுறை நாட்களில் பொது இடங்களில் புதுவருட கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கை போன்றவற்றிற்கு  தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகமாக கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போதும் குறைவான அளவில் […]

Categories
உலக செய்திகள்

ஓமிக்ரான் அச்சுறுத்தல்…. புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்து…. குமுறும் பொதுமக்கள்….!!

பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டின் போது பாரம்பரியமாக போடப்படும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ஓமிக்ரான் தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக சாம்ப்ஸில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்தும் ஓமிக்ரான் பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்கள். அதோடுமட்டுமின்றி அந்நாட்டில் புத்தாண்டின் போது போடப்படும் பாரம்பரிய வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“அத்தியாவசியமில்லாமல் இந்த நாட்டிற்கு செல்லாதீர்கள்!”….. பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!

பிரான்ஸ் அரசு ஓமிக்ரோன் தொற்று காரணமாக இங்கிலாந்திற்கு அத்தியாவசியமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருவதால் உலக நாடுகள் பல விதிமுறைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே, பிரான்ஸ் அரசு அத்தியாவசியமில்லாமல் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும், செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த கட்டுப்பாடு உண்டு என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“பிரான்ஸை விட்டு பிரிய மனசு இல்ல”…. பொதுவாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்த மக்கள்….!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு ஒன்றில் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்திருக்க பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பிரான்ஸ் நாட்டின் பசுபிக் பிராந்திய பகுதியான நியூ காலிடோனியாவில் பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பில் பொது வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான மக்கள் பிரான்ஸ் நாட்டின் ஒரு அங்கமாக தொடர வாக்களித்துள்ளனர். ஆனால் பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆவலாக இருக்கும் அமைப்பினர் இந்த பொதுவாக்கெடுப்பு கொரோனா நேரத்தில் நடத்தப்பட்டதால் பெரும்பான்மையான மக்களின் உண்மையான […]

Categories
உலக செய்திகள்

மீனுக்காக போடப்பட்ட வலை…. என்ன சிக்கியது தெரியுமா….? அதிர்ந்து போன மீனவர்கள்….!!

பிரான்சில் மீனவர்கள் வீசிய வலையில் ஒரு நபரின் உடல் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பா து கலே என்ற கடற்பகுதியில் மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார்கள். அந்த சமயத்தில், அவர்களின் வலையில் அதிக எடை கொண்ட மீன் மாட்டியதாக கருதி வலையை வெளியில் இழுத்திருக்கிறார்கள். அப்போது, அவர்கள் வலையில் சடலம் இருந்ததை பார்த்து அதிர்ந்துபோனார்கள். அதன்பின்பு, அவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த உடலை மீட்டு உடற்கூறு […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் ஊரடங்கா….? பிரான்ஸ் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

பிரான்ஸ் நாட்டின் பிரதமர் Jean Castex, நாட்டில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அங்கு தடுப்பூசியளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 44,000-த்திற்கும்  அதிகமான தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த திங்கட்கிழமை அன்று அரசு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி வரை இரவு நேரத்தில் இயங்கும் கிளப்புகள் அடைக்கப்படும் என்று அறிவித்தது. எனினும், கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரம் மக்களே….! “இது இல்லனா நாட்டை விட்டு வெளியேற்றப்படுவீங்க”…. பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு….!!

பிரான்சில் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு வாழிட உரிமை அட்டை இல்லாதவர்கள் சட்டப்படி நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதில் இருந்து பல மாற்றங்களை சந்தித்து வருகின்றனர். அதாவது பிரான்சில் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-க்கு முன்பிலிருந்து அங்கு வசித்து வரும் பிரித்தானியர்கள் Carte de sejour எனப்படும் வாழிட உரிமை அட்டையை 2021 அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் பெற்றிருக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

இன்னும் சில வருடங்களில்….. பிரிட்டனை கலக்கப்போகும் அதிவேக ரயில்கள்….. வெளியான தகவல்….!!

பிரிட்டன் அரசு ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நிறுவனங்களோடு ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. பிரிட்டனில் புல்லட் ரயில்களை இயக்கக்கூடிய பணிகள் தீவிரமாக நடக்கிறது. அதன்படி சுமார் 360 கிமீ அமெரிக்க டாலர்கள் செலவில், 54 மின்சார ரயில்களை தயாரிப்பதற்காக பிரிட்டன் அரசு, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின்  நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. லண்டனில் புறப்பட்டு, லிவர்பூல், மான்செஸ்டர் மற்றும் கிளாஸ்கோ நகரங்களுக்கு இடையில் இந்த அதிவேக […]

Categories
உலக செய்திகள்

“இருட்டில் தெரியாமல் மனைவி மீது காரை ஏற்றிவிட்டேன்!”…. பிரிட்டனில் கொடூர சம்பவம்….!!

பிரான்சில் தன் மனைவியை வாகனத்தை ஏற்றிக் கொலை செய்ததாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரான்சில் Prayssac என்னுமிடத்தில், பிரிட்டனை சேர்ந்த 67 வயதான David Turtle என்ற நபர், தன் மனைவியான Stephanie-மீது வேண்டுமென்றே 2, 3 முறை வாகனத்தை ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், David, அது விபத்து என்றும், என் மனைவியை நான் கொல்லவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து டேவிட் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று […]

Categories
உலக செய்திகள்

இத்தனை கோடியா….? மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வாள்… அமெரிக்காவில் ஏலம்…!!

மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய ஆயுதங்கள் சுமார் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மன்னரான நெப்போலியன் போனபார்ட், “மாவீரன்” என அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் சிறந்த ராணுவ தளபதியாகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார். பல ஐரோப்பிய நாடுகளுடன் போர் தொடுத்து வெற்றி கண்டவர். கடந்த 1799 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதியன்று ஆங்கிலேய கப்பல்கள் பிரஞ்சு கடற்படையிலிருந்து வெளியேறியது. அப்போது, நெப்போலியன் அவரது படைகளோடு சென்று ஆட்சியைக் […]

Categories
உலக செய்திகள்

“ஜாக்கிரதையாக இருங்கள்!”… சிக்கினால் அவ்வளவு தான்…. மக்களை எச்சரிக்கும் பிரபல நாடு…!!

பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தைகளில் போலியான யூரோக்கள் பயன்படுத்தப்படுவதாக காவல்துறையினர் எச்சரித்திருக்கிறார்கள். கொரோனா தொற்றிற்கு மத்தியில், உலக நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. அதிலும், ஐரோப்பிய நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், அந்நாட்டின் காவல்துறையினர், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சந்தைகளை குறிவைத்து போலியான யூரோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. 20, 50 மற்றும் 100 யூரோக்கள் போலியாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. கடந்த வாரத்தில் நீஸ் என்ற நகரத்தில் […]

Categories
உலக செய்திகள்

“குழந்தைகளை கடத்தி சென்ற தாய்!”…. பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்…!!

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் மீது பாரீஸ் நீதிமன்றத்தில் சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 39 வயது நபர் Vincent Fichot, டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்த சமயத்தில், மைதானத்திற்கு அருகே உண்ணாவிரதம் இருந்து அதிக மக்களின்  கவனத்தை ஈர்த்தவர். இவரின் மனைவி ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில், அந்த பெண், தன் கணவரிடமிருந்து இரு பிள்ளைகளையும் எங்கோ கடத்தி சென்றுவிட்டார். இதனால், […]

Categories
உலக செய்திகள்

“ஐரோப்பிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை!”… பிரிட்டன் உள்துறை அமைச்சர் அதிரடி முடிவு…!!

பிரிட்டன் அரசு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை விடுத்தது ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பிரான்ஸ் அரசு, புலம்பெயர்தல் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு, பிரிட்டனின் உள்துறை செயலரான ப்ரீத்தி பட்டேலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனை திடீரென்று பிரான்ஸ் ரத்து செய்துவிட்டது. பிரிட்டன் அரசை, புறக்கணித்ததாக பிரான்ஸ் நினைத்த சமயத்தில், ப்ரீத்தி பட்டேல் பிரான்சை விட்டுவிட்டு ஐரோப்பிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், நெதர்லாந்து நாட்டின் புலம்பெயர்தல் துறைக்கான அமைச்சர் Ankie Broekers-Knol-உடன் பேச்சுவார்த்தையும் நடத்தியதோடு, […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய படகுகளை சுற்றி வளைத்த பிரான்ஸ் மீனவர்கள்….. திடீரென ஏற்பட்ட பரபரப்பு… குவிந்த ராணுவத்தினர் மற்றும் போலீசார்…..

பிரித்தானியாவிற்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகளையும் படகுகளையும் பிரான்ஸ் நாட்டு மீனவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று பிரான்சில் உள்ள கலைஸ் துறைமுகத்தில் 6 பிரான்ஸ் படகுகள் சேர்ந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவிற்கு புறப்படும் சில படகுகளை செல்லவிடாமல் வழிமறித்துத் உள்ளது. மேலும் பிரித்தானியாவை சேர்ந்த நார்மாண்டி trader’s எனும் சரக்கு கப்பலை பிரான்சை சேர்ந்த மீன்பிடி படகுகள் நகர விடாமல் சுற்றி வளைத்து உள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து தகவலறிந்த பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

“அகதிகள் நுழைவதை தடுக்க பிரிட்டன் வைத்த கோரிக்கை!”…. பிரான்ஸ் அரசு நிராகரிப்பு…!!

பிரான்ஸ் அரசு, அபாயகரமான முறையில் பயணித்து தங்கள் நாட்டிற்குள் வரும் அகதிகளை தடுக்க பிரிட்டன் வைத்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து அகதிகள் பல வழிகளில் பிரிட்டனுக்குள் நுழைய முயன்று வருகிறார்கள். இதனால் பல உயிர் பலிகள் ஏற்படுகிறது. இது தொடர்பில் பிரான்ஸ் நாட்டின் அதிபருக்கு பிரிட்டன் பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்கு வரும் அகதிகள் அனைவரையும் பிரான்ஸ் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அகதிகள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

“ஆங்கிலக்கால்வாயில் படகு விபத்து!”… கடத்தல்காரர்களின் மிரட்டலால் உயிரிழந்த மணப்பெண்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆங்கில கால்வாய் வழியே பிரிட்டனுக்குள் நுழைய முயற்சித்து கடலில் மூழ்கி பலியான முதல் புலம்பெயர்ந்தோர் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. ஈராக் நாட்டை சேர்ந்த என்ற Mariam Nouri Dargalayi 24 வயது பெண்ணிற்கும் பிரிட்டனை சேர்ந்த Karzan Asad என்ற நபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில், Mariam தன் வருங்கால கணவரை சந்திக்க ஆபத்தான முறையில் படகில் சென்றிருக்கிறார். பிரான்ஸ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் 50 பேர், 2 படகுகளில் ஏறி பிரிட்டனை […]

Categories
உலக செய்திகள்

இந்தியரை காதல் திருமணம் செய்த பிரான்ஸைச் சேர்ந்த பணக்காரப் பெண்…. இந்திய கலாச்சாரப்படி எளிமையாக திருமணம் நடந்தது….!!

பிரான்சை சேர்ந்த பணக்கார பெண் இந்தியர் ஒருவரை காதலித்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லோரி ஹெரால் எனும் இளம்பெண் பாரிஸில் தொழிலதிபராக உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற சுற்றுலா வழிகாட்டியை சந்தித்து அவருடன் காதல் வயப்பட்டிருகிறார். பின்னர் மேரி பாரிஸ் சென்றபிறகு செல்போன் மூலம் இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேரி ராகேசை […]

Categories
உலக செய்திகள்

இங்கு நுழைய முயலும் புலம்பெயர்வோர்…. கடல் பகுதியில் போலீசார் ரோந்து…. திட்டத்தை நிராகரித்த பிரான்ஸ்….!!

பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்க காவல்துறையினர் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறை செயலர் முன்வைத்துள்ளார். பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி செய்கின்றனர். இதனை தடுப்பதற்காக பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். அதாவது புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு பெரும் தொகை கொடுத்தும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து நுழைய முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எனவே பிரித்தானிய காவல்துறையினர் பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து […]

Categories
உலக செய்திகள்

“பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு!”.. 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாக தகவல்..!!

பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரதம மந்திரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா முழுவதும் கொரோனோவின் நான்காம் அலை பரவி வரும் நிலையில், பிரான்சில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று, பிரான்ஸ் நாட்டின் பிரதமரான ஜீன் காஸ்டெக்ஸ், பெல்ஜியம் நாட்டிற்கு சென்று வந்திருக்கிறார். அதன் பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரதமர் அடுத்த பத்து தினங்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது. எனவே, பெல்ஜியத்தின் பிரதமருக்கு […]

Categories
உலக செய்திகள்

“பிரான்சில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த முடிவு!”.. யாரெல்லாம் செலுத்தலாம்..? வெளியான தகவல்..!!

பிரான்ஸ் அரசு 40 வயது நபர்களும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்திருக்கிறது. உலகின் பல நாடுகள் கொரோனாவிற்கு எதிரான இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தி விட்டு, கொரோனாவிலிருந்து தப்பிக்க மூன்றாம் தவணை தடுப்பூசியையும் செலுத்தி வருகிறது. எனவே, பிரான்ஸ் நாட்டிலும் 60 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் மருத்துவத்துறை 40 வயது நபர்களும் மூன்றாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அடுத்த […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவுடனான ஒப்பந்தம்!”.. 36 ரபேல் விமானங்களை ஏப்ரல் மாதத்திற்குள் வழங்குவோம்!”.. பிரான்ஸ் தூதர் தகவல்..!!

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது என்று பிரான்ஸின் தூதரான இம்மானுவேல் லென்னேய்ன் கூறியிருக்கிறார். இந்தியா, பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்தோடு கடந்த 2016ஆம் வருடத்தில் ரபேல் ஜெட் என்ற நவீன போர் விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதில், வரும் 2022-ஆம் வருடத்திற்குள்  சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில், இந்தியாவிற்கு 36 விமானங்களை அனுப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் நிறுவனம், 30 விமானங்களை தற்போதுவரை கொடுத்திருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் […]

Categories
உலக செய்திகள்

“ஆரம்பப்பள்ளி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!”.. பிரான்சில் வெளியான அறிவிப்பு..!!

பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் நாடு முழுக்க தொடக்கப்பள்ளிகளில் முகக்கவசம் அணியும் விதிமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரான்சில் ஒவ்வொரு நாளும் கொரனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று விதிமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த செப்டம்பர் மாத கடைசியில் கொரோனா தொற்று குறைவாக இருக்கும் ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தது. மேலும், பல்வேறு துறைகளில் முகக்கவசம் கட்டாயமில்லை […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட ராணுவ வீராங்கனை…. போலீசில் கொடுக்கப்பட்ட புகார்…. ஜனாதிபதி மாளிகையில் நடந்த சம்பவம்….!!

பிரான்ஸிலுள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற ஓய்வு விருந்து விழாவின்போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக மாளிகையில் தங்கியிருந்த ராணுவவீரர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண் வீராங்கனையை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். பிரான்சிலுள்ள அதிபர் மாளிகையில் விருந்து விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது அதிபர் மாளிகையில் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அங்கு பல ராணுவ வீரர்கள் தங்கியுள்ளார்கள். அவ்வாறு ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அதிபர் மாளிகையில் தங்கியிருந்த ராணுவ வீரர்களில் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த பெண் ராணுவ வீராங்கனை ஒருவரை பாலியல் ரீதியாக […]

Categories
உலக செய்திகள்

“கால்நடைகளுக்கு பரவிய தொற்று!”.. 219 பசுக்கள் கொல்லப்படும் நிலை..!!

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஒரு மாட்டுப் பண்ணையில் கால்நடை நோய் கண்டறியப்பட்டதால் சுமார் 219 பசுக்கள் கொல்லப்படவிருக்கிறது. பிரான்சில் ஒரு மாட்டு பண்ணையில், ஒரு பசுவிற்கு பொவைன் புரூசெல்லாசிஸ் என்ற நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, நாட்டின் வேளாண்மை துறை அமைச்சகமானது, உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நோயானது கால்நடைகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களையும் தாக்கக்கூடிய தொற்றுநோய். இந்நோய் புரூசெல்லா என்ற பாக்டீரியாவிலிருந்து உருவாகிறது. நாய்கள், பன்றிகள், ஆடு மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற கால்நடைகளை இந்த பாக்டீரியா தாக்கும். […]

Categories
உலக செய்திகள்

மது விருந்து விழாவில்…. பெண் இராணுவ வீரருக்கு பாலியல் வன்கொடுமை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரான்ஸில் நடைபெற்ற மது விருந்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ மாளிகையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி 3 இராணுவ அதிகாரிகளுக்கு பிரியாவிடை அளிக்கும் விருந்து ஒன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை வகித்த ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இரவு 10 மணியளவில் விருந்தை முடித்து கொண்டு கிளம்பி சென்றுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி மேக்ரான் வெளியேறிய பின், அதிகளவில் மது அருந்திய அதிகாரி பெண் இராணுவ […]

Categories
உலக செய்திகள்

பாதிக்கப்பட்ட உடல் நலம்…. கண்டுபிடிக்கப்பட்ட காரணம்…. பிரபல நாட்டில் தம்பதியினருக்கு கிடைத்த இழப்பீடு….!!

பிரான்ஸ் நாட்டில் காற்றாலை மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதன் உரிமையாளர் மீது ஒரு தம்பதியினர் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கை தெற்கு பிரான்சில் டார்ன் பகுதியில் குடியிருக்கும் Christel மற்றும் Luc Fockaert தம்பதிகள் தங்களுடைய உடல்நிலை பாதிப்புக்கு காற்றாலைகள் தான் காரணம் என்று கண்டறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை விசாரித்த Toulouse பகுதி நீதிமன்றம் தம்பதியினர் கூறியது உண்மை என்று நிரூபித்ததை அடுத்து அவர்களுக்கு 1 லட்சம் யூரோ தொகைக்கும் அதிகமாக இழப்பீடு வழங்க […]

Categories
உலக செய்திகள்

மாடெர்னா தடுப்பூசிக்கு தடை விதித்த நாடுகள்.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளில் 30 வயதிற்கு குறைவானவர்கள் மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனி நாட்டில்  தடுப்பூசி ஸ்டாண்டிங் கமிஷன் என்ற நிபுணர்கள் குழுவானது,  மாநிலங்களுக்கு தடுப்பூசி தொடர்பில் ஆலோசனை அளித்துவருகிறது. இக்குழு, 30 வயதுக்கு குறைவான நபர்கள் Pfizer-BioNTech தடுப்பூசியைத் தான் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. மாடெர்னா தடுப்பூசி செலுத்தியவர்களை விட பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் வயது நபர்கள், இதய அலர்ஜியின் விகிதங்களை குறைவாக பெற்றிருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

திடீரென மாயமான இளம்பெண்…. ரத்தம் படிந்த மொபைல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

பிரான்ஸில் 17 வயது இளம்பெண் ஒருவர் ஜாக்கிங் சென்றபோது காணாமல் போனதையடுத்து, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை அன்று Mayenne என்ற இடத்தில் 17 வயது பெண் ஜாக்கிங் செய்து கொண்டிருந்த போது மாயமாகியுள்ளார். அந்தப்பெண் வழக்கமான நேரத்திற்கு வீட்டிற்கு வராததால், அவருடைய தந்தை தன் மகளை தேடிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய கைபேசி மற்றும் ஐபிஎஸ் பொருத்தப்பட்ட வாட்ச் ஆகியவை மட்டும் ஓரிடத்தில் கிடப்பதை பார்த்துள்ளார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

பொய்யான செய்திகளை பரப்பியது ஏன்?…. ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும்….பாஜக அதிரடி….!!

பிரான்ஸ் நாட்டில் டசால்ட் நிறுவனத்திடம் காங்கிரஸ் தலைமையில் கடந்த 2007-2012 ஆம் ஆண்டில் ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் டசால்ட் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் முன்னதாகவே குற்றம் சாட்டினர். இதனிடையில் ரபேல் போர் விமான […]

Categories
உலக செய்திகள்

“காவல்நிலையத்திற்குள் புகுந்து அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல்!”.. மர்மநபர் சுட்டுக்கொலை.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் காவல்துறை அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பிரான்சில் உள்ள கெனிஸ் நகரத்தில் இருக்கும் காவல்நிலையத்தில், காவல்துறையினர் சிலர் இன்று காலையில் வழக்கம் போல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வாகனத்தில் ஏறி புறப்பட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில், மர்மநபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல்துறையினர் இருந்த வாகனத்தின் கதவை திறந்திருக்கிறார். அதன்பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியால் வாகனத்தின் முன் சீட்டில் இருந்த காவல்துறை அதிகாரியை பலமாக தாக்கியிருக்கிறார். இதில் அந்த அதிகாரிக்கு […]

Categories
உலக செய்திகள்

தண்ணீரில் நிகழும் உயிரிழப்புகள்…. இதன்மூலம் பிழைக்க…. பிரெஞ்சு நகரத்தின் புதிய திட்டம்….!!

அதிகளவில் தண்ணீரில் நிகழும் உயிரிழப்புகளுக்காக பிரெஞ்சு நகரம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரான்சில் தண்ணீரில் மூழ்கி உயிரிழத்தல் அதிக அளவில் நிகழ்கின்றது. இதனிடையில் மற்றொரு புறம் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியோர்  தண்ணீர் தொடர்பான பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்று தெரிகிறது. அதற்கு ஒரு காரணம் தனியார் நீச்சல் குளங்களில் சென்று அதை கற்றுக்கொள்ளும் அளவுக்கு வசதி இல்லை என்பதே ஆகும். இதனால் பிரான்சின் Marseille நகரவாசிகள் இந்த மக்களுக்காக ஒரு புதிய திட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

“புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பை பிரான்ஸ் கண்டுகொள்ளவில்லை!”.. முதல் முறையாக கொந்தளித்த உள்துறை அலுவலர்கள்..!!

பிரிட்டன் நாட்டின் உள்துறை அலுவலர்கள் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்து புலம்பெயர்ந்தோர் ஏழு பேர் 10 நாட்களில் மரணமடைந்ததை பற்றி பிரான்ஸ்  கண்டுகொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்கள். பிரிட்டனின் உள்துறை அலுவலர்கள், பிரான்ஸ் 54 மில்லியன் பவுண்டுகள் வாங்கிக்கொண்டு ஆங்கில கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்கள். 54 மில்லியன் பவுண்டுகளை பெற்றுவிட்டு 220 காவல்துறை அதிகாரிகளை மட்டும் பிரான்ஸ் எல்லையில் பணியமர்த்தியிருப்பதாக கூறியுள்ளார்கள். தற்போது வரை, பிரிட்டன் உள்துறை அலுவலர்கள் இது […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு மதிப்பா….? 400 ஆண்டுகள் பழமையான…. மோனாலிசா ஓவியம் ஏலம்….!!

உலகப்புகழ் பெற்ற ஓவியரான லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட மோனோலிசா ஓவியத்தின் பிரதிகள் ஏலம் விடப்படவுள்ளது. உலகப்புகழ் பெற்ற ஓவியரான லியொனார்டோ டா வின்சியால் மோனாலிசா ஓவியம் கடந்த 1503 ஆம் ஆண்டு வரையப்பட்டது. இந்த ஓவியமானது பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில வருடங்களிலேயே இந்த ஓவியத்தை போன்ற பிரதிகளை ஓவியர்கள் வரைந்தனர். அவ்வாறு வரையப்பட்ட பிரதி ஓவியத்தில் ஒன்று கடந்த ஜூன் மாதம் 25,00,00,000க்கு ஏலம் […]

Categories
உலக செய்திகள்

கத்தியால் தாக்க முயன்ற நபர்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

பிரான்ஸ் ரயில் நிலையத்தில் போலீசாரை கத்தியால் தாக்க முயன்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் Saint-Lazare ரயில் நிலையத்திற்குள் முகக்கவசம் அணியாமல் வந்த நபரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அந்த நபர் அதிகாரிகளுக்கு இணங்க மறுத்துள்ளார். இதனையடுத்து, திடீரென அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அதிகாரிகளை தாக்க முயன்றதோடு, ‘அல்லா ஹு அக்பர்’ பிரான்ஸ் இஸ்லாமிய அரசால் ஆளப்படுகிறது என ரயில் நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் மீன்பிடி படகு விடுவிப்பா..?” மறுக்கும் பிரான்ஸ்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனின் சுற்றுசூழல் செயலர் பிரான்ஸ் பறிமுதல் செய்த தங்கள் மீன்பிடி படகு  விடுவிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். பிரிட்டன் சுற்றுச்சூழல் செயலர் George Eustice, பிரான்ஸ் அரசு கடந்த புதன்கிழமை அன்று விடுத்த எச்சரிக்கையிலிருந்து பின்வாங்கிவிட்டது. அதனை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், பிரான்ஸ் பறிமுதல் செய்த பிரிட்டன் மீன்பிடி படகை விடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/11/02/7898733020452308042/636x382_MP4_7898733020452308042.mp4 ஆனால், இதனை மறுத்துள்ள பிரான்ஸ், தற்போதும் அந்த படகு, பிரான்ஸில் இருக்கும் Normandy என்ற துறைமுகத்தில் தான் இருக்கிறது. 1,25,000 […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் இழுவை கப்பல் பறிமுதல்.. எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டும் பிரான்ஸ்..!!

பிரான்ஸ் அரசு, எல்லை மீறி வந்த பிரிட்டன் கடற்படையின் இழுவை கப்பலை பிடித்து வைத்திருக்கிறது. பிரான்ஸ் அரசு, ஏற்கனவே அடுத்த மாதம் 2 ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக சுங்கவரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் பிரிட்டனின் இழுவை கப்பலை பிடித்து வைத்திருக்கிறது. அதாவது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியது. அப்போதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளுடன் உள்ள பொது போக்குவரத்து, வணிகம், பிற நாட்டவர்களுக்கு வேலை கொடுப்பது மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“எங்களுக்கும் பழிவாங்கத் தெரியும்!”.. சும்மா மிரட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.. பிரான்சுக்கு பதிலடி கொடுத்த பிரிட்டன்..!!

பிரான்ஸ் அரசு, சும்மா எங்களை மிரட்டி கொண்டிருக்க வேண்டாம், எங்களுக்கும் பழிவாங்கத் தெரியும் என்று பிரிட்டனுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டுக்குரிய மீன்பிடி படகுகள் அனைத்த்திற்கும் பிரிட்டன், தங்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அரசு, பிரெக்ஸிட்டிற்கு பின்பு பிரிட்டன் எந்த ஒப்பந்தத்தையும் சரியாக பின்பற்றவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் அடுத்த மாதம் 2 ஆம் தேதிக்குள் மீன்பிடித்தல் விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே புதிய […]

Categories
உலக செய்திகள்

இரு நாடுகளிடையே தொடரும் மோதல்…. 2 பிரிட்டிஷ் படகுகள் சிறை…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

பிரித்தானியாவின் 2 மீன்பிடி படகுகளை பிரான்ஸ் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரெக்சிட்டிற்கு பிந்தைய மீன்பிடி உரிமை பிரச்சினைகள் தீவிரமடைந்தது. பிரெக்சிட் என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுதலை குறிக்கிறது. இந்த நிலையில், பிரித்தானியா படகை பிரான்ஸ் அரசு சிறைபிடித்ததால் இரு நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரான்ஸின் கடல்சார் அமைச்சகம் ட்விட்டரில், “நேற்ற Le Havre-இல் நடைபெற்ற சோதனையில் 2 பிரிட்டிஷ் படகுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில், […]

Categories
உலக செய்திகள்

“ஜனாதிபதி தேர்தல்” முதல் சுற்றில் யாருக்கு வெற்றி…? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்….!!

பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் முதல் சுற்றுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிரான்சில் வரும் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் இமானுவேல் மேக்ரான் , Eric Zemmour மற்றும் Marine Le Pen ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர இன்னும் சிலர் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக தற்போது பிரான்சில் இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றவர்கள்…. வழியில் நடந்த சோகம்…. அதிகாரிகளின் தகவல்….!!

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. எசெக்ஸ் பகுதி Harwich என்ற இடத்தின் அருகில் உள்ள கடல் பகுதியில் ஒரு படகில் இருந்து 2 புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் மீட்டனர். மேலும் 3 பேர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற அச்சத்தில் மீண்டும் தேடுதல் பணி துவங்கப்பட்டு இருப்பதாக கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தேடுதல் பணியில் ஹெலிகாப்டர் மற்றும் ஒரு விமானம் […]

Categories
உலக செய்திகள்

“இழப்பீட்டு தொகையை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்!”.. -பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர்..!!

பிரான்சில் எரிபொருளின் விலை அதிகரிப்பிற்கு, இழப்பீடு, 200 யூரோக்கள் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென், தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிசக்தியின் விலை அதிகரிப்பை சமாளிக்க, ஒவ்வொரு மாதமும் 2,000 யூரோக்கள் அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெரும் அனைத்து குடிமகனுக்கும் 100 யூரோ அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, மோட்டார் சைக்கிளும், காரும் ஓட்டாதவர்களையும் சேர்த்து சுமார் 34 மில்லியன் மக்களுக்கு பணவீக்க உதவிக்தொகை வழங்கப்படும் என்று அரசு […]

Categories

Tech |