பொது இடங்களில் பிராங்க் செய்யக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களாகிய பள்ளி வளாகங்கள், நடைபயிற்சி மைதானங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் பொதுமக்களை பிராங்க் செய்து வீடியோ எடுப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதனால் கோவை மாநகர காவல்துறையினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சிலர் குறும்புத்தனமான வீடியோக்களை எடுக்கின்றனர். இந்த வீடியோக்களை யூடியூப் சேனலிலும் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். இந்த பிராங்க் […]
