கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (24). இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஆவார். ஹர்ஷா நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். அதன்பிறகு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தொட்டபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். […]
