உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் 5 மாநிலங்களில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி இன்று மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு காலத்தில் மணிப்பூர் தனித்து விடப்பட்டிருந்தது. நான் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு பலமுறை இங்கு வந்திருக்கிறேன். […]
