தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் ராமன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஓம் ராவத் இயக்க, சைப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு ஆளானது. அதாவது ராவணன் மற்றும் அனுமனின் வேடத்தை மிகவும் தவறான முறையில் சித்தரித்துள்ளதாக பலரும் […]
