விண்வெளி ஹீரோ என்று அழைக்கப்படும் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர் வலேரி பாலியகோவ் (80) உடல் நலக் குறைவு காரணமாக உ யிரிழந்தார். ‘மிர்’ என்ற விண்வெளி நிலையத்திற்கு 2 முறை பயணம் செய்துள்ள அவர், விண்வெளியில் அதிக நேரம் (437 நாட்கள்) பறந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மொத்தமாக 678 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார். பாலியகோவ் விண்வெளிக்கு சென்று திரும்பிய பின்னரே, மனிதர்களின் உடல் விண்வெளிக்கு உகந்ததாக உள்ளது என்பதை அறிய முடிந்தது.
