மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில் பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர். இவர் ஏற்கனவே கொலை ,கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்த அவர் கடந்த 4-ஆம் தேதியன்று பாலீஸ்வரன் கோவில் எதிரே உள்ள […]
