தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, கொள்ளை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காவல்துறையில் மொத்தம் 21 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அறிவழகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அறிவழகனை […]
