மருந்துக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பிருந்தாவனம் பகுதியில் பிரபல மருந்து கடை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஊழியர்கள் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து காலை மீண்டும் ஊழியர்கள் மருந்து கடைக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த ஊழியர்கள் கல்லாப் பெட்டியில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பதை அறிந்துள்ளனர். இது குறித்து […]
