தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு சிம்பு நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால் சில காலங்கள் படம் எதுவும் வெளியாகாமல் தவித்து வந்த சிம்புவுக்கு மாநாடு படம் மாபெரும் காம்பேக்காக அமைந்தது. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப் படத்தில் நடித்துள்ளார். […]
