பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே நடுக்காட்டு இசக்கியம்மன் பகுதியில் ஜலதா தேவகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜலதா தேவகுமாரியின் கணவனும், மகனும் இறந்து விட்டனர். இவருடைய மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜலதா தேவகுமாரியின் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 83 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,26,000 ரூபாய் பணம் […]
