2015ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறி போனதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அதிகாலை 3 மணி முதல் 4 மணி இருக்கும் வெளியில் மழை வெளுத்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் 300 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகி இருந்தது. […]
