பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருக்கும் செபாஸ் ஷெரிஃப், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடைய கட்சி சர்வதேச நாணய நிதியத்தினுடைய ஒப்பந்தத்தை நாசமாக்க முயல்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அதனை சமாளிக்க பிரதமர் ஷெபாஸ் செரீப் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்திடம் 170 கோடி நிதி வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. இது குறித்து சர்வதேச நாணய நிதியம் நாளை ஆலோசிக்கவுள்ளது. இந்நிலையில் பிரதமர் செபாஸ் செரீப், […]
