இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் […]
