அதிமுக டெபாசிட் இழக்க பிரதமர் மோடி நமக்கு உதவி செய்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். போடியில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பழநி செல்லும் வழியில் திடீரென ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். திமுக வேட்பாளர் சக்கரபாணியை ஆதரித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மெயின்ரோட்டில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர. சக்கரபாணிக்கு நடந்து ஆதரவு திரட்டினார். பகல் 1 மணிக்கு கொளுத்தும்வெயிலில் […]
