பொது மக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை எனபிரான்ஸ் நாட்டு பிரதமர் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட உள்ளதாக பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தற்போது பிரான்ஸில் கொரோனா தடுப்பூசி அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. […]
