பாகிஸ்தான் நாட்டில் சீக்கியர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் ஷெபாஸ் செரீப் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் நேற்று காலை நேரத்தில் சுல்ஜீத் சிங் மற்றும் ரஞ்சீத் சிங் ஆகிய சீக்கியர்கள் இருவர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் படலால் பகுதியில் மசாலா கடைகள் நடத்தி வந்திருக்கிறார்கள். நேற்று காலை நேரத்தில் இருவரும் கடையில் இருந்திருக்கிறார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை […]
