சூடானில் மக்கள் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்ததில் பிரதமர் அப்தல்லா ஹம்டோக், பதவி விலகியுள்ளார். சூடான் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அன்று நாட்டின் ராணுவம், இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து அவசர நிலை பிரகடனம் செய்தது. மேலும், பிரதமர், அப்தல்லா ஹம்டோக்வை வீட்டில் சிறை வைத்தனர். இதனை கடுமையாக எதிர்த்து, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் பலனாக, பிரதமர் கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் பதவியில் அமர்ந்தார். ஆனால், அவர் ராணுவத்துடன் இணைந்து அதிகாரப்பகிர்விற்கு ஒப்பந்தம் […]
