சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ முருக ராஜேந்திர மடத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்ற போது மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், அவருக்கு திருநீறு அணிவித்து நாட்டின் அடுத்த பிரதமராவார் என ஆசீர்வதித்தார். அப்போது, மடத்தின் தலைமை துறவி ஸ்ரீ சிவமூர்த்தி முருகா ஷாரனரு குறுக்கிட்டு, “தயவுசெய்து இதைச் சொல்லாதீர்கள்… இது மேடையல்ல. மக்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறினார். அந்த மடம் கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தவர்களுக்கானதாகும். கர்நாடகாவில் 17% லிங்காயத்துகள் உள்ளனர். […]
