அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த பிரச்சாரக் குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிபர் டிரம்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் ஜுப்யிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களில் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பிடனுக்கு ஆதரவாகவே உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை […]
