கழற்சிக்காய் ஒரு அற்புதமான முலிகையாகும். இது பொதுவாக சாலையோரங்களில் முற்புதற்களுக்குள் இருக்கும். ஆனால் இந்த கழற்சிக்காய் தரும் நன்மைகளோ ஏராளம். தற்போது பெண்கள் பிசிஓடி நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. அதோடு இந்த நோயின் காரணமாக குழந்தையின்மை பிரச்னை, […]
