ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் விழா நடைபெறுவதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 19ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்து அம்மனுக்கு காலையிலும் மாலையிலும் சிறப்பு […]
