பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரங்கோடு அருகே படச்சேரி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். இந்த வருடமும் திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதன்பிறகு ஆதிவாசி மக்கள் தங்களுடைய பழம்பெரும் நடனத்தை ஆடி […]
