பீகாரில் ஒரு கிராமத்தில் மாநில முதல்வா் மீது நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு சம்பவத்தை அடுத்து கடந்த 15 வருடங்களாக அங்கு சாலைவசதி ஏற்படுத்தி தரவில்லை என பிரசாந்த் கிஷோா் குற்றம் சாட்டியுள்ளாா். அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோா் “ஜன் சுராஜ்” எனும் 3,500 கி.மீ தொலைவு நடைப் பயணத்தை பீகாா் மாநிலத்தில் மேற்கொண்டு வருகிறாா். மேற்கு சம்பாரன் மாவட்டத்திலுள்ள ஜோகபட்டி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவா் பேசியிருப்பதாவது “இந்த கிராமத்தில் இருந்து பெடியா நகரம் […]
