கேமரூனின் வர்த்தக கண்காட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேமரூன் நாட்டின் தென்மேற்கு ஆங்லோபோன் பகுதியில் பியூபா எனும் இடத்தில் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அங்கு கூட்டம் அதிகம் இருந்த பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால் 10 நபர்கள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சிலரின் நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]
