நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கையும், இறப்பு வேதங்களும் ஒருபுறம் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு மிகவும் போற்றத்தக்கது. இவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முழுகவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்த கவச உடைகள் காற்றோட்ட வசதி இல்லாததால் அவர்களுக்கு அசவுகரியமாக தான் […]
