மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் […]
