ரஷ்யாவுடனான விசா ஒப்பந்தங்களை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறித்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய குடிமக்கள் நுழைவது கடினமாகும் எனக் கூறப்பட்டு வருகின்றது. மேலும் ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என உக்ரைனும் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் கோரிக்கை முன்வைக்க ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த நகர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பிப்ரவரியில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின் […]
