கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உணவுக்குழாயில் இருந்த பின்னூசியை மருத்துவர்கள் எச்சரிக்கையாக எடுத்தனர். திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு நிதிஷ் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு திடீரென்று மூச்சு விட சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அழுது கொண்டே இருந்துள்ளார். குழந்தையின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். பின்னர் காது மூக்கு தொண்டை பிரிவில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து […]
