இந்திய மாலுமிகள் 7 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய நிலையில், அவர்களை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி பொருத்தப்பட்ட Rwabee என்ற சரக்கு கப்பலில் பயணம் மேற்கொண்ட இந்திய மாலுமிகள் ஏழு பேர் கடந்த 2ஆம் தேதி அன்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டனர். அவர்கள் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஏழு பேரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தாருடன் பேசுவதற்கு கடத்தல்காரர்கள் அனுமதி வழங்கவில்லை என்றும் […]
