அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிணைகைதியாக வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க கடற்படை வீரரை விடுவிக்குமாறு தலீபான்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அதிபர் ஜோ பைடன் தலிபான்களுக்கு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவை சேர்ந்த கடற்படை வீரரான மார்க் ஃப்ரீரிச்-ஐ ஆப்கான் படையால் பிணையக்கைதியாக வைக்கப்பட்டிருக்கிறார். அவர் தவறு ஒன்றும் செய்யவில்லை. எனினும் இரண்டு வருடங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். அமெரிக்கர்களோ அல்லது எந்த அப்பாவி குடிமகனாக இருந்தாலும் சரி, அவர்களை அச்சுறுத்துவதை ஏற்கமுடியாது. பிணையக்கைதிகள் என்பது கொடூரமாகவும், […]
