நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் அடையாள தெரியாத நபர் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் அப்பகுதியினர் அங்கு சென்றபோது ஆற்றின் படித்துறையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து பிணமாக காணப்பட்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவர் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மோகனூர் காவல்துறையினருக்கு தகவளித்த நிலையில் போலீசார் […]
