மகனை கொன்று பிணத்தை வாய்க்காலில் வீசி காணாமல் போனதாக நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகில் திங்களூர் நிச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விவசாயி காளியப்பன்(76). இவருடைய மனைவி பாவாயாள். இவர்களுக்கு ஒரே மகன் 42 வயதுடைய பெரியசாமி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த பெரியசாமியை கடந்த 19 ஆம் தேதி அன்று முதல் காணவில்லை. இதுதொடர்பாக காளியப்பன் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் […]
