கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சென்ற 2016ம் வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவணன் பணிபுரிந்து வந்தார். அப்போது நடைபெற்ற ஒரு விபத்து வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த அவருக்கு, அவ்வழக்கு குறித்த சாட்சியம் அளிக்க கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வாயிலாக பலமுறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது. அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாயிலாகவும் அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. […]
