ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு தமிழக வீரர் அஸ்வின், மிதாலி ராஜ் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது . விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா ,துரோணாச்சார்யா விருதுகள் வழங்கப்படுகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான அஸ்வின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இந்திய மகளிர் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டன் மிதாலி ராஜ் […]
