தேர்வுக்குழு மீட்டிங்கில் விராட் கோலியின் பலவீனங்களை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவிட்டு, பின் டி20 தொடரின் போது ஓய்வுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரில் புத்துணர்ச்சியுடன் விளையாடி சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் அரை சதங்களை மட்டும் எடுக்க முடிந்த நிலையில், பவுன்சர் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சற்று தடுமாறி உள்ளார். […]
