சிலி நாட்டில் அரிய வானியல் நிகழ்வை மக்கள் கண்டுகளித்தனர். சிலி நாட்டில் பவுர்ணமி நாளான நேற்று, வானில் நிலா இளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசமாக ஜொலித்து உள்ளது. இந்த நிலாவை சிலி நாட்டில் இளஞ்சிவப்பு நிலா என அழைக்கின்றனர். அதாவது சிலி நாட்டில் வசந்தகாலத்தில் பூக்கும் பிங்க் ப்ளோட்ஸ் என்ற அமெரிக்க தாவரத்தின் பெயரையே ஏப்ரல் மாதம் தோன்றும் இந்த முழு நிலவிற்கு பிங்க் மூன் என வைத்து அழைக்கின்றனர். இந்த அரிய நிகழ்வை அந்நாட்டு மக்கள் கண்டுகளித்துள்ளனர்.
