பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
