பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் விமல். அடுத்ததாக இவர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பாண்டியராஜன், பாலசரவணன், தீபா, நேகா, வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . […]
