ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா-வின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சீமா பத்ரா. இவர் ராஞ்சியிலுள்ள தனது வீட்டில் பெண் ஒருவரை அடைத்துவைத்து கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 10 வருடங்களுக்கு முன், கும்லா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவரை பணிஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா மற்றும் சீமா பத்ரா தம்பதியினர் வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளனர். இதையடுத்து டெல்லியில் வசிக்கும் அவர்களது மகள் வத்சலா பத்ராவின் வீட்டில் […]
