வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு பாஸ்ட் ட்ராக் மூலம் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஒருவர் சுங்க சாவடி ஊழியர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் என்ற பகுதியை சேர்ந்த கமல் ரகுமான் என்பவர் ஒரு வாரமாக தனது காரை எடுக்காமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் இருந்து பணம் எடுக்கப் பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி […]
