ஸ்விட்சர்லாந்தில் பாஸல் பூங்காவில் 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அனுமதி வழங்கப்படாத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள பாஸல் உயிரியல் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இளம் தம்பதியினர் தங்கள் மூன்று மாத குழந்தையுடன் சென்றுள்ளனர். அப்போது மதியவேளையாகி விட்டதால் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்க்காக அங்கிருக்கும் உணவகத்தில் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அப்போது குழந்தையின் தந்தை உணவக உரிமையாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதாவது வெளியே கடும் குளிர் நிலவியதால் உணவகத்தில் தாய்ப்பால் கொடுக்க அனுமதி தருமாறு […]
