பால் உற்பத்தியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பால் உற்பத்தியாளர்கள் பால் பாக்கி தொகையை உடனடியாக உற்பத்தியாளர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி, மாநில செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை, […]
