மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் குவிந்துகிடக்கும் பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படுகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி அனைத்து அரசு மாவட்ட அலுவலகங்களும் இங்குதான் உள்ளன. கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர் கைது செய்து அடைக்கபட்டது பாளையங்கோட்டை சிறையில் தான். 1957 முதல் 1971 வரை மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆனது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற 10 தேர்தல்களில் […]
